திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக நடத்துனராக தம்பிதுரை என்பவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் 19-ந் தேதி தம்பிதுரையை எந்த ஒரு காரணமும் இன்றி தன்னை பணியில் இருந்து நீக்கியுள்ளனர். இதனால் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அதிகாரிகளை பலமுறை சந்தித்தும் தீர்வு கிடைக்கவில்லை.
மேலும் குடும்ப சூழ்நிலையை சொல்லி தற்காலிக நடத்துநர் பணியை மீண்டும் கேட்டதற்கு அவருடைய ஜாதியை வைத்து தூய்மை பணி தருவதாக அதிகாரிகள் கூறியதாக மனவேதனையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று வந்த வந்து தம்பிதுரை “ரொம்ப நாள் வேல பாக்குறேன்னு சொல்லி திடீர்னு பஸ்ஸ நிறுத்தி பேக்கை புடிங்கி இனிமே வேலைக்கு வர கூடாதுனு இறக்கி விட்டுட்டாங்க.. சாப்பாட்டுக்கே வழி இல்லாம இரண்டு பெண் பிள்ளைகளுக்கு கஞ்சி தண்ணிய கொடுத்தேன்.
அத பாக்கும் போது என்னால தாங்கவே முடியல” அவர்களுக்கு மருந்து வாங்கக் காசு இல்லாமல் நடுரோட்டில் நிற்பதாகவும் கண்ணீர் மல்க தனது நிலையை எடுத்துரைத்தார். அவரின் அழுகையைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் ஆறுதல் கூறினர். இதனால் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.