ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படத்திற்கு 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது. அப்படி விதிகளை மீறி குழந்தைகளை அனுமதிக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் அல்லது நிர்வாகிகளுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அத்துடன் ₹1,00,000 வரை அபராதம் விதிக்கப்பட சட்டத்தில் இடமுண்டு.
மேலும் சம்பந்தப்பட்ட திரையரங்கின் திரையிடல் உரிமத்தை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் உள்ளது என 1952 ஆம் ஆண்டின் இந்திய சினிமாட்டோகிராஃப் சட்டத்தின் பிரிவு 7-ன் கீழ் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளது
வன்முறை காட்சிகள் இடம்பெற்றிருந்த கூலி படத்தை போன்றே குழந்தைகளுக்கு தவறான முன்னுதாரணமும் வன்முறை தவறில்லை என்ற நிலைப்பாடும் ஏற்பட்டுவிடும். அவரது மனம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால்தான் கூலி படங்களுக்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது. ஜனநாயகன் படத்தில் அதிக வன்முறை காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் இரு அநாகரீக வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டு, நிறைய சர்ச்சைக்குரிய சீன்கள் வெட்டப்பட்ட நிலையில் தணிக்கை வாரியம் 12 இடங்களில் கத்தரி போட்டது.
இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் வாங்க தயாரிப்பு நிறுவனம் முயற்சித்தும் அது முடியாமல் போனது. கடைசியில் ஜனநாயகன் படத்திற்கு ஏ சான்றிதழை தணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த திரைப்படத்திற்கு 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது.
இதுகுறித்து தியேட்டர்களில் போர்டு வைக்கப்பட்டுள்ளது. மீறி அழைத்து வரும் பெற்றோரை தியேட்டர் நிர்வாகத்தினர் அனுமதிக்க மறுத்து வருகிறார்கள். இதனால் குழந்தை ரசிகர்கள் கொண்ட விஜய்யின் திரைப்படத்தை காண முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில் ஜனநாயகன் படத்தை முதல்வர் விஜய், அவரது தாய், தந்தை, அரசு அதிகாரிகளுடன் நேற்று முன் தினம் இரவு பார்த்துவிட்டார். அது போல் நேற்று தியேட்டர்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தவெக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், ரசிகர்கள் பார்த்தனர். அந்த வகையில் இராமநாதபுரம் மாவட்டம், கேணிக்கரை ரோட்டில் உள்ள ஜெகன் சினிமா தியேட்டருக்கு அமைச்சர் ராஜீவ் தனது குழந்தை, உறவினர் குழந்தையுடன் ஜனநாயகன் படம் பார்க்க வந்தார்.
ஏ சான்றிதழ் பெற்ற படத்தை குழந்தைகள் பார்க்கக் கூடாது என்ற விதி இருக்கும் போது அதை அமைச்சரே மீறியிருக்கிறார். மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கும் அமைச்சரே இப்படி விதிகளை மீறுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்கிறார்கள். இதை பார்த்த மற்றவர்களும் குழந்தைகளுடன் கிளம்பி வந்து தியேட்டரில் சண்டையிட்டால் என்ன செய்வது? என்ற கேள்வி எழுகிறது.
மேலும் ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்ட ‘ஜனநாயகன்’ படத்திற்கு விதிகளை மீறி தனது 2 குழந்தைகளுடன் தவெக அமைச்சர் ராஜீவ் பார்த்துள்ளார். சட்ட விதிக்கு புறம்பாக ‘ஏ’ சான்றிதழ் வங்கப்பட்ட படத்துக்கு குழந்தைகளை படம் பார்க்க அழைத்துச் சென்ற அமைச்சருக்கும், அனுமதித்த தியேட்டர் நிர்வாகத்திற்கும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.