திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் ஓய்வு பெற்ற ரயில்வே தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி ரயில்வே அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ரயில்வே ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பயண சலுகை அட்டை ஆன்லைன் முறையை கைவிட்டு சாதாரண நடைமுறையில் பழைய நடைமுறையில் காகித பாஸ் வழங்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டம் தெரிவித்தனர்.
மேலும் தமிழக முழுவதும் ஓய்வு பெற்ற 12 லட்சம் ரயில்வே தொழிலாளர்கள் உள்ள நிலையில், அவர்களின் கல்வி தகுந்த குறைந்தபட்சமாக இருப்பதால் அவர்களுக்கு ஆன்லைன் முறை மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால் சாதாரண நடைமுறையில் பேப்பர் பாஸ் வழங்க வேண்டும். எட்டாவது ஓய்வூதியம் குழு பரிந்துரைக்கும் ஊதியத்திற்கு ஏற்ப ஓய்வூதியத்தை உயர்த்தி உடனடியாக வெளியிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலிறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம் திருத்துறைப்பூண்டி ஓய்வு பெற்ற ரயில்வே தொழிலாளர் சங்க பொருளாளர் ஆறுமுகம் தலைமையில், கிளை தலைவர் வேணுகோபால் செயலாளர் சந்தன மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ரயில்வே தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சிங்காரவேலு, நாகராஜன், வேதாரத்தினம், முருகேசன், வேதையின், உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஓய்வு பெற்ற ரயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண்டு தென்னக ரயில்வே நிர்வாகத்திற்குஎதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.