இந்திரனுக்கும் வரி போட்ட மத்திய அரசு இனிமேல் மூச்சு விடுவதற்கு GST வசூலிக்க வாய்ப்புள்ளது என ஆஷிஷ் குப்தா எக்ஸ் பக்கத்தில் நக்கலடித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது
GST மறுசீரமைப்பு நடவடிக்கையால் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற முன்னணி ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்கள் மழை பெய்யும் பொது உணவு டெலிவரி செய்தால் தனியாக வசூலிக்கப்படும் கட்டணத்திற்கும் GST விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இது தொடர்பாக ஆஷிஷ் குப்தா என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில், பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. அப்புகைப்படத்தில் ஸ்விக்கியில் மழை கட்டணம் ரூ.25 என்றும் அதற்கு ஜிஎஸ்டி என்று ரூ.4.50 கட்டணம் என மொத்தமாக ரூ.29.50 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அந்த பதிவில், “மழை கடவுளான இந்திரனுக்கும் வரி போட ஆரம்பித்துள்ளார்கள். இனிமேல் வெயில் அடித்தால் அதற்கு ஒரு கட்டணம், ஆக்சிஜனுக்கு ஒரு கட்டணம், மூச்சு விடுவதர்க்கு ஒரு கட்டணம் என்று கூட வசூலிக்க வாய்ப்புள்ளது என ஆஷிஷ் குப்தா எக்ஸ் பக்கத்தில் நக்கலடித்து உள்ளார்.