ஆதவ் அர்ஜுனா இந்த அவையில் இல்லை, அதனால் அவை நடவடிக்கைகள், சபாநாயகர் சொன்னது போல் ஒன்றரை மணிக்குள் முடிந்துவிடும் என விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். தமிழக சட்டசபையில் நேற்று சமூகநீதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதங்கள் நடைபெற்றன.
அப்போது பிரேமலதா பேசுகையில், விருத்தாசலத்தை கோயில் நகரமாக்கி தர வேண்டும் என கேட்டுக் கொண்டார். அத்துடன் அவர் தனது தொகுதி சார்ந்த விஷயங்களை பேசினார். பிறகு, “தம்பி ஆதவ் இல்லை, அதனால் நான் எனது பேச்சை 10 நிமிடத்தில் முடித்துவிட்டேன். அவையை 1.30 மணிக்கு முடிக்க வேண்டும் என சபாநாயகர் அறிவித்திருந்தார். எனவே அவை நடவடிக்கைகளும் சீக்கிரம் முடிந்துவிடும்” என்றார். அப்போது அமைச்சர் செங்கோட்டையன், “உங்களை போல் அனைவரும் 10 நிமிடங்களில் பேசி முடித்துவிட்டால் பிரச்சினையே இல்லை” என்றார்.
சட்டசபையில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஆரோக்கியமாக செயல்பட்டு கொண்டிருந்தாலும் ஆதவ் அர்ஜுனா எழுந்துவிட்டாலே பிரச்சினைதான் என ஒரு பேச்சு எழுகிறது. அவர் திமுகவை கடுமையாக விமர்சிப்பதும் அதற்கு திமுகவினர் பதிலடி கொடுப்பதும் இப்படியே மாரி மாறி பேச்சு வளர்ந்து கொண்டே இருப்பதால் அவை நடவடிக்கைகளை அன்றைய மானியக் கோரிக்கைகளை விட்டுவிட்டு வேறு ரூட்டில் செல்கின்றன என்கிறார்கள் என ஆதவ் அர்ஜுனா செயல்பாட்டை பிரேமலதா விஜயகாந்த் சட்டசபை போட்டு உடைத்தார்.