மே 15-ந் தேதி நடந்த பொது நல வழக்கு ஒன்றில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், வேலையில்லாமல் வழக்கு போடும் இளைஞர்களை கரப்பான் பூச்சி உடன் ஒப்பிட்டு பேசிய கரப்பான் பூச்சி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வைத்துள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கரப்பான் பூச்சி கட்சி, மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பும், டெல்லி, சென்னை உட்பட நாடு முழுக்க தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேல், கரப்பான் பூச்சி கட்சி சார்பில், தர்மேந்திர பிரதானுக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அந்த போராட்டம், சென்னை உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவியது. இதையடுத்து அழுத்தத்தின் காரணமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்திருக்கிறார்.

இது குறித்து தர்மேந்திர பிரதான் தனது எக்ஸ் பக்கத்தில், “நான் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சீர்திருத்தங்களுக்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளேன். ஒரு வலுவான தொலைநோக்கு பார்வை கொண்ட கல்வி முறை இருந்தால் மட்டுமே.. அது நம்முடைய நாட்டின் அடித்தளமாக இருந்து நாட்டை வலுப்படுத்தும் என்பதில் நான் எப்போதும் அசைக்கும் முடியாத நம்பிக்கையை கொண்டிருக்கிறேன்.
இளைஞர்களின் உணர்வுகள் மற்றும் அவர்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நான் ஆழமாக மதிக்கிறேன். நாட்டின் இளம் தலைமுறை கனவுகளை நினைவாக்குவது நம் அனைவரின் அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையும் கடமையாகும். மரியாதைக்குரிய பிரதமரின் தொலைவு தலைமையின் கீழ் நாட்டிற்கு சேவை செய்ய எனக்கு கிடைத்த வாய்ப்பிற்காக நான் பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இருப்பினும் கடந்த மே 3-ந் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் கண்டறியப்பட்டன. மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து.. விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்தது. தேர்வை ரத்து செய்து, மீண்டும் தேர்வு நடத்துவதற்கான தேதியை அறிவித்தது மத்திய அரசு. மேலும் அடுத்த ஆண்டு முதல் தேர்வு கணினி சார்ந்த தேர்வு முறையில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த காலகட்டத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கும் நீட் மறு தேர்வை சீராக நடத்துவதே எங்களது முதன்மையான கடமையாக இருந்தது. இதற்காக அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் கொள்கையின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகளும், குறிப்பாக.. மாவட்ட நிர்வாகங்களும் முக்கிய பங்காற்றின.
மேலும் மாணவர்கள் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் ஜூன் 21 அன்று நீட் தேர்வு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. முதல் நாளிலிருந்தே இதன் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன். இந்த சூழ்நிலையில் இருந்து ஒருபோதும் விலகி செல்லவில்லை. தேர்வு மாபியாக்களால் எந்த ஒரு திறமையான மாணவரின் எதிர்காலமும் வீணாகி விடக்கூடாது, எந்த ஒரு மாணவருக்கும் அநீதி ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

ஜூலை 16 அன்று வெளியிட்ட நீட் முடிவுகளில் மாணவர்கள் திருப்பதியடைந்தனர். இதில் ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்த பல திறமையான மாணவர்களும் வெற்றி பெற்றனர். இருப்பினும் இந்த காலகட்டத்தில் பல மாணவர்களை நல்வழிப்படுத்த தவறி, பொறுப்பான பதவிகளின் இருக்கும் சிலர் தடைகளை உருவாக்க முயன்றனர். இது எனது மனதை மிகவும் வேதனைப்படுத்தியது.
நமது ஜனநாயகத்தின் மீது நான் எப்பொழுதும் அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டிருக்கிறேன். இளைஞர்களின் விருப்பங்கள் கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை ஆழமாக மதித்து வருகிறேன். அவர்கள் இந்தியாவின் எதிர்காலம் மட்டுமல்ல, புதிய மற்றும் வளர்ந்த இந்தியாவின் தூண்கள் மற்றும் சிற்பிகள் ஆவார்.
கடந்த 10 நாட்களாக நான் நிகழ்வுகளை பார்த்து மிகவும் மன வேதனை அடைந்தேன். இது எனக்கு தனிப்பட்ட கௌரவம் சார்ந்த விஷயம் அல்ல. இளைஞர் சக்தியை குழப்பமான சூழலில் சிக்க வைக்க விடமாட்டோம் என்பதை எனது உறுதியான நிலைப்பாடாகும். ஜந்தர் மந்தரிலும், நாட்டின் இதர பகுதிகளிலும் நிலவும் இத்தகைய சூழ்நிலையை.. தேசவிரவாத சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக் கூடாது.
நாட்டின் ஒற்றுமையை நிலைத்திருக்க வேண்டும். நாட்டின் எந்த ஒரு மாணவரின் எதிர்காலமும் சட்ட சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது. நமது குழந்தைகள் தங்கள் நேரத்தை படிப்பில் செலவிட்டு.. தங்கள் வாழ்க்கையை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.என்பதை கருத்தில் கொண்டு எனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் அனுப்பி வைத்துள்ளேன்.” என தர்மேந்திர பிரதான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் நடந்த முறைகேடுகள், கேள்வித்தாள் லீக், மாணவர்களின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பிய இவர்கள் முதலில் இணையத்தில் தங்கள் குரல்களை எழுப்பினர். கடந்த மே 15-ந் தேதி அதற்கு அடித்தளமிட்டது நடந்த ஒரு வழக்கின் விசாரணையின் போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், பொது நல வழக்கு ஒன்றில், வேலையில்லாமல் வழக்கு போடும் இளைஞர்களை கரப்பான் பூச்சி உடன் ஒப்பிட்டு பேசியதாக தகவல் பரவியது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அவர்கள் இதுபோல சொன்ன பிறகே கரப்பான்பூச்சி கட்சி ஒரு நையாண்டி தொடங்கப்பட்ட இயக்கம் டெல்லி முதல் மும்பை வரை ஆயிரக்கணக்கான மாணவர்களை தெருக்களில் இறக்கியது. மத்திய அரசை பல சுற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்தது கரப்பான்பூச்சி. இறுதியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா வரை அரசியல் அழுத்தத்தை உருவாக்கியதும் கரப்பான்பூச்சி.