திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒருவார கால அறிமுக பயிற்சி ஐந்தாம் நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் பி. ராஜாராமன் அவர்கள் தலைமை வகித்து, சமூகப் பொறுப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் சமூகப் பங்களிப்பின் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியின் வரவேற்புரையை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான முனைவர் லோ. சதீஸ்குமார் அவர்கள் வழங்கி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முத்துப்பேட்டை வனச்சரகர் பி. சதீஸ்கண்ணன், அவர்கள் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனவளக் காப்பு, சதுப்பு நிலக்காடுகள் பாதுகாப்பு, வன விலங்கு பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து சிறப்புரை ஆற்றினார்.

மாணவர்கள் பொறுப்புடன் செயல்படுவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் போட்டித்தேர்வுக்ளுக்கு எவ்வாறு தயாராகவேண்டும் எவ்வாறு எதிர்கொண்டு வெற்றியடைய வேண்டும் எனது ஆலோசனைகள வழங்கி கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியின் நிறைவாக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வை. கார்த்திக் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.