தவெக அரசின் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் CTR. நிர்மல் குமார் பாஜக மற்றும் அதிமுகவில் இருந்த போதும் அவரது சொந்த ஊரில் நிறைய முறைகேடு செய்து நிலத்தை அபகரிப்பு செய்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். தவெக அரசின் தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் CTR. நிர்மல் குமார் அவர்கள் மீது அவர் சொந்த ஊரான உசிலம்பட்டி அருகே உள்ள நடைமுறைக்குளத்தை சேர்ந்த ஓ ஊக்கிரபாண்டியன் கொடுத்த புகார். பலமுறை அவர்கள் தமிழக அரசுக்கு முதல்வரின் தனி பிரிவுக்கு புகாரை அனுப்பியுள்ளார். பாஜகவில் இருந்த போதும் அதிமுகவில் இருந்த பொழுதும் அவரது சொந்த ஊரில் நிறைய முறைகேடு செய்து நிலக்கத்தை அபகரிப்பு செய்துள்ளார்.
அதில் ஒன்று மதுரை மாவட்டம் நடுமலை குளம் கிராமம் சர்வே எண் 166/17 A1, மற்றும் 166/17 B1 ஆகிய சேவை எண்ணுக்கு உட்பட்ட இடம் உக்கிரபாண்டியன் என்பவருக்கு பாத்தியப்பட்டது. அந்த இடத்தில், அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரும், அவரது மகனும், இப்போதைய மின்சார துறை அமைச்சருமான CTR. நிர்மல் குமார் என்பவரும் சேர்ந்து முறையில்லாமல் பத்திர பதிவு செய்து, விதிமீறல் கட்டுமானப்பணி மேற்கொண்டு இருக்கிறார்கள். வீடுகள் கட்டுவதாக அனுமதி பெற்று அங்கே கல்யாண மண்டபம் வேறு காட்டியுள்ளார்கள்.
உக்கிரபாண்டியன் இடத்தை தனக்கு சொந்தமாக்கின்கொண்டது, கல்யாண மண்டபம் கட்டியது என விதிகள் மீறப்பட்டுள்ளது. அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கடந்த ஆட்சியில் அவர் பலமுறை புகார் அளித்துள்ளார். பலமுறை ஊரக வளர்ச்சி அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த புகாரின் மீது அப்போதைய அதிமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக ஆட்சியில் இருந்தபோது முதல்வர் தனிப்பிரிவுக்கும் அனுப்பியுள்ளார். நடவடிக்கை இல்லை என அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகத் தமிழக அரசியலில் தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க திமுக தரப்பில் ரூ. 50 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக அமைச்சர் CTR. நிர்மல் குமார் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் சூழலில், தற்போது அவர் மீது இந்த நில அபகரிப்புப் புகார் கிளம்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.