திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுக்கா, கொறுக்கை ஊராட்சியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் விழாவில் தவெக தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜி.பி. பாரதி அவர்களின் தலைமையில் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் வி. குணசேகரன், த. ராமலிங்கம் வி. பரமசிவம், வி. சுப்பிரமணியன், வெ. லோகராஜன் மற்றும் மு. முருகா அவர்களின் முன்னிலையில் 500-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைத்துக் கொண்டனர்.

இந்த மாற்றுக் கட்சியில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் விழாவிற்கு வருகை தந்த தெற்கு ஒன்றிய செயலாளர் பி. கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணா, மாவட்ட கொள்கை பரப்பு இணை செயலாளர் லட்சுமணன், மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் சிவகுரு மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, ஊராட்சி, கிளை, சார்ந்த அனைத்து பொறுப்பாளர்களும், ஏராளமான மகளிர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சி மாவட்ட கொள்கை பரப்பு இணை செயலாளர் வெ. சிவசக்தி தொகுத்து வழங்கி மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் அரவிந்த் அவர்கள் நன்றி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட கழக செயலாளர் சார்பாக கட்சி துண்டும் இனிப்புகளும் வழங்கப்பட்டது.