மழைநீர், வீணாகக் கடலில் கலப்பதைத் தடுத்து விவசாயத்திற்கு பயன்படும் வகையில் மேற்கு தொடர்ச்சி மலையில் 6000 அடி உயரத்திற்கு மேல் உள்ள இராஜமலையில் உற்பத்தி யாகும் அமராவதி ஆற்றின் குறுக்கே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையிலிருந்து தெற்கே தேசிய நெடுஞ்சாலை 25 கிமீ தொலைவில் கட்டப்பட்ட ஆழமான அணைக்கு 1953 ஆண்டு அன்று இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சென்னை மாகாண முதல்வராக இருந்த போது அமராவதி அணை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு 1957-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராசர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.

அமராவதி ஆற்றங்கரை கொழுமத்தில் பழமையான காசி விஸ்வநாதர் திருக்கோவில் மற்றும் அருள்மிகு கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவில் உள்ளது. மேலும் அமராவதி நகரில் இந்திய சைனிக் பள்ளி அமைந்துள்ளது. இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்காவில் அமைந்துள்ளது. இங்கு தென்னிந்தியாவின் இயற்கைச்சூழலில் வளர்க்கப்படும் மிகப்பெரும் முதலைப் பண்ணை உள்ளது.
அமராவதி அணை கடல் மட்டத்திலிருந்து 1524 அடி மேல் மலைப்பகுதி தோற்றுவாயிலிருந்து காவிரியோடு கலக்கும் வரை இருகரையிலும் வரலாற்று சிறப்புமிக்க காந்தளூர்,கோவில்கடவு,மறையூர்,தளிஞ்சி, அமராவதி, கல்லாபுரம், ருத்திரா பாளையம், கொழுமம் கொமரலிங்கம் என பல ஊர்கள் உள்ளன.

இந்த அமராவதி அணை கட்டப்பட்டு 69 ஆண்டுகள் மேலாகியும் இன்று வரை அசராமல் விவசாயிகளின் பாசனத் தேவையையும், பொதுமக்களின் குடிநீர்த் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. இந்த அணையைக் கட்டி, திறந்து வைத்த காமராசருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நினைவுத்தூண் அமைக்கப்பட்டது. தற்போது அந்த நினைவுத்தூண் மற்றும் அணையின் பல பகுதிகள் பராமரிப்பின்றி முட்புதர்கள் அடர்ந்து காணப்படுகிறது.
காமராசரின் 124-வது பிறந்தநாள் கடந்த வாரம் தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், அவரின் சாதனையைப் போற்றும் இந்த அமராவதி அணை அவல நிலையை நினைத்தும், முட்புதர்களை அகற்ற வலியுறுத்தியும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.