கே.பி.முனுசாமி: அதிமுக உடையவில்லை..! பதவி ஆசை பிடித்தவர்கள் வெளியேற்றம்..!

அதிமுக உடையவில்லை; பதவிஆசை பிடித்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயல் வீரர்கள்மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டதிற்கு ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகிக்க, மாவட்டச் செயலாளர் அசோக்குமார் எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் அதிமுக துணைபொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுகவின் 53-ஆம் ஆண்டு தொடக்க விழாவும், செயல்வீரர்கள் கூட்டமும் சிறப்பாக நடந்து வருகின்றன. அவற்றில் ஒற்றுமையுடன் நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர். ஆனால், ‘அதிமுக மூன்றாக, நான்காக உடைந்து விட்டது’ எனசிலர் பேசி வருகின்றனர். பதவி ஆசைக்காக செயல்பட்ட அவர்களின் சுயரூபம் தெரிந்ததால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

கட்டுக்கோப்போடு உள்ள அதிமுக இயக்கத்தை யாராலும் உடைக்க முடியாது. தொண்டர்கள் நம் பக்கம் உள்ளனர். அதே ஒற்றுமையுடன் செயல்பட்டு, வரும் சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் மகத்தான வெற்றிக்காகப் பாடுபட வேண்டும் என கே.பி.முனுசாமி பேசினார்.

எல்.முருகன்: இது 1967 இல்லை…! மொழி அரசியல் இனி எடுபடாது..!

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மொழியை வைத்து மக்களை இனி ஏமாற்ற முடியாது என தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு எல்.முருகன் பதிலளித்தார். அப்போது, ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியது, முழுக்க முழுக்க மக்களை திசை திருப்பும் செயல். ‘இந்தி வாரம்’ என்பது மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் வழக்கமாக கடைபிடிக்கப்படுவதுதான்.

மத்தியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 10 ஆண்டு காலம் இருந்தபோதும், அதில் திமுக அமைச்சர்கள் இருந்ததுறைகளில் கூட இந்தி வாரம் கடைபிடிக்கப்பட்டது. தமிழை பாதுகாப்பதிலும், உலக அளவில் எடுத்துச் செல்வதிலும் முதன்மையாக பிரதமர் மோடி இருக்கிறார்.

சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் குழந்தைகள் செய்தது தவறு. அந்த தவறுக்கு அவர்கள் மன்னிப்பும் கேட்டுவிட்டனர். அப்படி இருக்க, அதில் ஆளுநரை சம்பந்தப்படுத்துவது, எந்த விதத்திலும் நியாயம், தர்மம் அல்ல. அவர் ஒரு சிறப்பு அழைப்பாளராக மட்டுமே அந்த விழாவில் கலந்து கொண்டார்.

மேலும், மழை, வெள்ளத்தை சமாளிக்கதிமுக அரசு சரியாக திட்டமிடவில்லை. ஒருநாள் மழையையே சரியாக கையாளவில்லை. இதில் இருந்து மக்களை திசைதிருப்ப, அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக, திமுக – இண்டியா கூட்டணி செயல்படுகிறது. மொழியை வைத்து ஏமாற்ற இது 1967 இல்லை. மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றனர்.

‘இந்தி வாரம்’ நடத்த கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக நிர்வாகிகள், தாங்கள் நடத்தும் CBSC பள்ளிகளில் இந்தியை பாடமாக வைக்க மாட்டோம் என்று கூறி, அப்பள்ளிகளை இழுத்து மூட தயாரா, எனவே மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனிமேல் நடக்காது. திமுக ஆக்கப்பூர்வமான அரசியலில் ஈடுபட்டு, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என எல்.முருகன் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின்: ‘இந்தி மாதம்’ கொண்டாடப்படுவதை இந்தி பேசாத மாநிலங்களில் தவிர்க்க வேண்டும்..!

சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து ‘இந்தி மாதம்’ நிறைவு நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு ஆளுநர் ரவியும் அழைக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இந்தி பேசாத மாநிலங்களில் ‘இந்தி மாதம்’ கொண்டாடப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா நிகழ்ச்சிகளுடன் இணைந்து நிறைவடையும் ‘இந்தி மாத’ நிறைவுவிழா நடைபெறுவது குறித்து பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை வழங்கவில்லை. சட்டமியற்றுதல், நீதித்துறை மற்றும் தகவல் தொடர்பு போன்ற அலுவல் நோக்கங்களுக்காக மட்டுமே இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் பேசும் நாட்டில், இந்திக்கு தனி இடம் அளிப்பதும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

எனவே, இந்தி பேசாத மாநிலங்களில் இதுபோன்ற இந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்க்கலாம் அல்லது ஒன்றிய அரசு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினால், அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் மொழிக்கான மாதக் கொண்டாட்டங்களையும் அதேபோல் கொண்டாடவேண்டும்.

இந்திய அரசு செம்மொழியாக அங்கீரித்துள்ள அனைத்து மொழிகளின் சிறப்பையும் செழுமையையும் கொண்டாட இதேபோன்று சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று தாம் பரிந்துரைப்பதாகவும் இது அனைவரிடையேயும் ஒரு சுமுகமான உறவை மேம்படுத்தும்”என அந்த மு.க.ஸ்டாலின் கடிதத்தில் தெரிவித்தார்.

கண்டா வர சொல்லுங்க… MP காணவில்லை..!

மதுரை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சு.வெங்கடேசன் 2-வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் அவரை காணவில்லை என மதுரை நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வண்டியூர், சவுராஷ்டிராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சு.வெங்கடேசனுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், “கண்டா வர சொல்லுங்க… என்ற தலைப்பில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் 2 முறை எம்.பி.யாக வெற்றி பெற்றும் வண்டியூர் மக்களுக்கு நன்றி கூட சொல்ல மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த வண்டியூர் மக்களுக்கு இதுவரை நீங்கள் செய்தது என்ன?” என கேள்வி கேட்டு வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த சுவரொட்டி தி.மு.க., கம்யூனிஸ்டு கூட்டணி கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

மு.க. ஸ்டாலின் அறிவிப்பு: அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவச உணவு..!

சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் ஏழை, எளிய மக்களுக்காக இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில், “நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை – எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

தலைவிரித்து ஆடும் ஊழல்: நல்லா.. இருக்கும் சாலைக்கு 3 கோடியா..?

ஒரு சாமானியன் மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தின் கீழ் வீடு கட்டி முடித்து பில் வாங்குவது என்றால் சாமானியனின் முழு ஆவியும் போய் அவருடைய வாயில் இருந்து நுரை தள்ளிவிடும் அளவிற்கு அவர் படும் பாடு அந்த இறைவனே ஒரு கணம் விழி பிதுங்கி நிற்பார். இது இன்றல்ல நேற்றல்ல பல ஆண்டுகளாகவே சாமானியன் படும் துயரம் சொல்லில் அடங்காது.

பத்து ஆண்டுகால அதிமுகவின் ஊழல் ஆட்சியை வீட்டிற்கு அனுப்பி தமிழகத்தில் விடியலை உருவாக்குவோம் என விடியல் வசனங்களை பேசி ஆட்சி பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக தமிழகம் முழுவதும் சாலைகள் சீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டது. அதன் வரிசையில் கரூர் மாவட்டத்தில் சாலைப்பணிகள் மேற்கொள்ள ரூ.170 கோடி நிதியில் எம்.சி.எஸ்.சங்கருக்கு மட்டும் ரூ.140 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளன என முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் மாவட்ட வருவாய் அலுலவர் எம்.லியாகத்திடம் புகார் மனு அளித்தார்.

அந்த புகார் மனுவில் கரூர், ஈசநத்தம் சாலையில் உள்ள வால்காட்டுப்புதூர், வாங்கல் சாலையில் உள்ள என்.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே இருக்கும் சாலையில் புதிய சாலை அமைத்ததாக கூறி மோசடி நடந்துள்ளதாகவும் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். மேலும் முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் நன்றாக உள்ள சாலைகள் புதிதாக அமைக்கப்பட உள்ளதாக கூறி சுமார் 3 கோடி அரசு பணம் எடுக்கப்பட்டுள்ளன என புகாரில் தெரிவித்து மட்டுமின்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில். ஒப்பந்ததாரருமான எம்.சி.எஸ் சங்கர் ஆனந்த், கரூர் மாவட்டத்தில் கடந்த 8-ம் தேதி அவசர அவசரமாக சாலை போடும் பணி நடைபெற்றுள்ளது. இதனிடையே, விசாரணை நிறைவடையும் வரை சாலை போடும் பணியை நிறுத்தசொல்லி மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் எம்.ஆர். விஜயபாஸ்கர் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தில் 4 முறையும், தலைமைச் செயலாளரிடமும் எம்.ஆர் விஜயபாஸ்கர் புகார் அளித்து மட்டுமின்றி தமிழக ஆளுநருக்கும் தபால் மூலம் புகார் அனுப்பியுள்ளதாக தெரிய வருகின்றது.

இந்நிலையில் நெடுஞ்சாலை துறையின் கரூர் கோட்ட பொறியாளர் சத்தியபாமாவை, நெடுஞ்சாலை துறை முதன்மை செயலாளர் பணியிடைநீக்கம் செய்துள்ளார். மேலும் உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் பூபாலன் சிங், கரூர் கோட்டை கணக்கர் பெரியசாமி ஆகியோரை, திருப்பூர் மண்டல பொறியாளர் வளர்மதி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

நெடுஞ்சாலைத்துறை கிராமப்புற சாலைகள் கோட்ட பொறியாளர் நித்திலன், உதவி கோட்ட பொறியாளர் முகமது ரஃபிக், கோட்ட கணக்கர் சத்யா, உதவி பொறியாளர்கள் தீபிகா, கார்த்திக்கை ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து அரசு முதன்மை செயலாளர் உத்தரவிட்டார்.
கடந்த அரை நூற்றாண்டுகளாகவே அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளும் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி தமிழகம் முழுவதும் ஊழல் தலைவிரித்து, ஊழல் அதிகாரிகளை தட்டி கேட்க திறனில்லாத ஆட்சியாளர்கயாகவே வளம் வருகின்றார்கள் என்பதே ஒவ்வொரு சாமானியனின் மன குமுரலாக உள்ளது

தாராபுரத்தில் பயங்கரம்: நடத்துனரை தாக்கிய வாலிபர் தப்பி ஓட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருப்பூர் முதல் தேனி வழித்தடத்தில் செல்லும் தாராபுரம் கிளை பேருந்து நேற்று M.ரத்தினசாமி ஓட்டுநர் மற்றும் K. கோபாலகிருஷ்ணன் நடத்துனராகவும் பணிபுரிந்தனர். அப்போது தாராபுரம் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் முன்னால் சென்ற தாராபுரம் ரிலையன்ஸ் பங்க் உரிமையாளர் சக்திவேல் அவர்களுடைய மகன் நிர்மல்குமார் நமது பேருந்திற்கு முன்னாள் இருசக்கர வாகனத்தில் வழி கொடுக்காமல் சென்ற போது ரத்தினசாமி ஹாரன் அடித்து விலகிச் செல்ல முற்பட்டபோது வழி கொடுக்காமல் சென்றுள்ளார்.

மேலும் அந்த வாலிபர் வேகத்தடை அருகே பேருந்துவிற்கு முன்னாள் இருசக்கர வாகனத்தை நிறுத்தி பேருந்துவை மறித்து பேருந்தின் உள்ளே ஏறி ஓட்டுனரை அடிக்க சென்றபோது நடத்துனர் இருவரையும் சமாதானம் செய்ய முற்பட்டபோது நடத்துனரை கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி விட்டார். படுகாயம் அடைந்த நடத்துனர் K. கோபாலகிருஷ்ணன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என தெரிய வருகின்றது.

வி.கே. சசிகலா வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு நிவாரணம் வழங்கல்

தொடர் கன மழை காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கபட்ட மக்களுக்கு பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரன பொருட்க்களை வழங்கி வருகிறார்கள்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றார். அந்த வகையில், சென்னையில் தி.நகர்- லாலா தோட்டம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளை வி.கே. சசிகலா பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய நிலையில், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி, கோரிமேடு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வி.கே. சசிகலா நிவாரண உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர், பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அப்போது, சசிகலா பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று, பெண்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, அப்பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

ஜோதி நிர்மலாசாமி: சார் பதிவாளர் அலுவலகத்தில் புதிய வசதி

வணிகவரி மற்றும் பதிவுத்துறை் செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழக சட்டசபையில் 2020-21-ம் ஆண்டிற்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் மானியக் கோரிக்கையின்போது, வணிகவரி மற்றும் பதிவு அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அன்பொது , அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பொருத்தப்பட்டுள்ள காட்சிக் கருவியில் அடையாளவில்லை எண்ணோடு ஆவணதாரர்களின் பெயரும் காட்சிப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

அதன்டிப்படையில் மேம்படுத்தப்பட்ட காட்சிக்கருவிகளை அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களிலும் பொருத்துவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையால் பதிவின்போது ஆவணதாரர்களின் வரிசைக்கிரம எண்ணோடு அவர்களின் பெயரும் அறிவிக்கப்படும். இதன் மூலம் சரியான முன்னுரிமை உறுதிப்படுத்தப்படுவதுடன், பதிவு அலுவலகங்களில் கூட்ட நெரிசலும் தவிர்க்கப்படும். பதிவு செய்யும் பொதுமக்களுக்கு வெளிப்படையான குழப்பமற்ற வரிசைக் கிரமத்தை கடைபிடிக்க இது ஏதுவாக இருக்கும் என தெரிவித்தனர்.

தெற்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்கும்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் கனமழை பொழிந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் நீர் தேங்கி உள்ளது மட்டுமின்றி பல இடங்களில் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்து சென்னை மாநகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், புதுச்சேரி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதைபோல சென்னை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கரூர், நாமக்கல், கோயம்புத்தூர், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை தொடரும் என தெரிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி தெற்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி பின்னர் 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வழுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.