அன்புமணி ராமதாஸ்: உங்களுகாக காத்துக் கொண்டிருக்கிறேன்..!

உங்கள் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என பட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மகாபலிபுரம் அருகே திருவிடந்தையில் நாளை மறுநாள் பாமகவின் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் மாநாடு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்,” உங்கள் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். அமைதியான முறையில், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், கட்டுப்பாடோடு, பாதுகாப்புடன் இங்கே நீங்கள் வந்து செல்ல வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் எக்ஸ் பக்க வீடியோவில் கோரிக்கை வைத்தார்.

அன்புமணி ராமதாஸ்: ‘ஆபரேஷன் சிந்தூர்’.. முப்படைகளுக்கும் அனைவரும் துணை நிற்போம்..!

ஜம்மு- காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பதிலடி முப்படைகளுக்கும் அனைவரும் துணை நிற்போம் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 22- ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது இந்திய ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் இந்திய கப்பல் படை அதிகாரி உள்ளிட்ட 27-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதனால் நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தாக்குதலுக்கு காரணமாக பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் இந்தியா எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தலாம் என கூறப்பட்ட நிலையில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது. இதை அடுத்து ராணுவம், காவல்துறை, பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் ஒருவேளை போர் ஏற்பட்டால் எப்படி தற்காத்துக் கொள்வது என்பது குறித்த போர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட தயாராக இருந்தன.

இதற்கிடையே, திடீரென நள்ளிரவில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. சிந்தூர் என்றால் தாலி கட்டிய பின் பெண்கள் நெற்றியில் இடும் திலகம் என்று அர்த்தம். பஹல்காம் தாக்குதலில் பல இளம் பெண்கள் தங்கள் துணையை இழந்த நிலையில் அதற்கு பதிலடியாகவே இந்தியாவின் ஆபரேஷனுக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

முப்படைகளும் இணைந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. குறிப்பாக காஷ்மீர் தாக்குதலை தொடர்புடைய ஜெய்ஸ் – இ – முகமது தலைமையகம் உள்ளிட்ட முக்கிய தீவிரவாத தளங்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில் ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு இடங்களில் தேசிய கொடியுடன் மக்கள் மகிழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.. இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், ,” நாட்டின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் சரியானவையே: மத்திய அரசுக்கு அனைவரும் துணை நிற்போம்! காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை அழிக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 9 பயங்கர முகாம்கள் மீது இந்தியாவின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளன.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய அனைத்து நடவடிக்கைகளும் சரியானவை; தேவையானவை. இதில் மத்திய அரசுக்கும், முப்படைகளுக்கும் அனைவரும் துணை நிற்க வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பி. கே. சேகர்பாபு: அன்புமணி ராமதாஸ் வழக்கிற்கு பயந்து மண்டியிடுவதற்கு பெயர் என்ன..!?

அன்புமணி ராமதாஸ் வழக்கிற்கு பயந்து மத்திய அரசிடம் மண்டியிடுவது கோழையா? உறவுக்கு கைகொடுப்போம்.. உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தோடு மத்திய அரசு முறையாக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய அனைத்து வகையான சிறப்புகளையும் இடைமறித்து நம் மாநில வளர்ச்சியை குறைக்கும் போது, நெஞ்சை நிமிர்த்தி மத்திய அரசுக்கு சவால்விடும் முதலமைச்சர் கோழை என அமைச்சர் பி. கே. சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.

கும்பகோணம் அருகே வன்னியர் சங்கம் சார்பாக சோழ மண்டல சமய சமுதாய நல்லிணக்க மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், நாங்கள் கேட்பது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி நூறு சதவிகித மக்களுக்கும் இடஒதுக்கீட்டை வழங்குங்கள் என்பதுதான். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்கிறார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருந்து மு.க.ஸ்டாலினுக்கு மனமில்லை. இதனை நடத்த அதிகாரமிருந்தும் உரிமை இல்லை என்று சொல்வது கோழைத்தனம் இல்லையா என்று கேள்வி எழுப்பி இருந்தார். அன்புமணி ராமதாஸின் இந்த பேச்சிற்கு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் பி. கே. சேகர்பாபு பேசுகையில், வழக்கிற்கு பயந்து மத்திய அரசிடம் மண்டியிடுவது கோழையா? உறவுக்கு கைகொடுப்போம்.

உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தோடு மத்திய அரசு முறையாக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய அனைத்து வகையான சிறப்புகளையும் இடைமறித்து நம் மாநில வளர்ச்சியை குறைக்கும் போது, நெஞ்சை நிமிர்த்தி மத்திய அரசுக்கு சவால்விடும் முதலமைச்சர் கோழை என்று கூறுபவர்கள் கோழை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்களாக மட்டுமே இருக்க முடியும். ஒரு காலத்தில் இந்தியாவின் இரும்பு மனிதராக சர்தார் வல்லபாய் படேலை போற்றப்பட்டதுண்டு. மத்திய அரசிடம் மாநில உரிமைக்காக குரல் கொடுக்கக் கூடிய இரும்பு மனிதராக இன்று முதன்மையான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்பதை அன்புமணி ராமதாஸுக்கு சொல்ல விரும்புகிறோம் என பி. கே. சேகர்பாபு தெரிவித்தார்.

அன்புமணி ராமதாஸ்: 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்காக சிறப்புத் திட்டம் இல்லாதது ஏமாற்றம்..!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு ரூ.86 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கோடிக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பும், ஊதியமும் வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. அதேநேரத்தில் தமிழகத்துக்காக சிறப்புத் திட்டம் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் வருமான வரி விலக்குக்கான வருவாய் வரம்பு ரூ.12 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டு இருப்பதும், மக்களின் நலன் சார்ந்து மேலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரத்தில் தமிழகத்துக்காக சிறப்புத் திட்டம் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்திருக்கிறார். நாடு முழுவதும் உள்ள மக்களால் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த வருமான வரி விகிதங்கள் பெருமளவில் மாற்றியமைக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. புதிய வருமானவரி முறையின்படி ரூ.12 லட்சம் வரையிலான வருவாய்க்கு வரி செலுத்தத் தேவையில்லை. இதன் மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை வருவாய் ஈட்டும் நடுத்தர வர்க்கத்தினர், இதுவரை வரியாக செலுத்தி வந்த தொகையை கல்வி உள்ளிட்ட செலவுகளுக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தொழில்நுட்பக் கல்விக்கும், மருத்துவக் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை ஆகும். 2014-ம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்ட 5 ஐஐடிகளில் கூடுதலாக 6500 மாணவர் சேர்க்கை இடங்களை ஏற்படுத்தப்படும்; ரூ.500 கோடியில் கல்விக்காக செயற்கை அறிவுத்திறன் உயர்சிறப்பு மையம் ஏற்படுத்தப்படும்;அடுத்த ஐந்தாண்டுகளில் மருத்துவப் படிப்புக்கு 75 ஆயிரம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும்; நடப்பு நிதியாண்டில் மருத்துவப் படிப்புக்கு கூடுதலாக 10 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்படும்; 36 வகையான உயிர்காக்கும் மருந்துகளுக்கு சுங்கவரி முற்றிலுமாக ரத்து செய்யப்படும்; அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கவை.

வேளாண்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் 100 மாவட்டங்களில் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்குவதற்கும், முதலீடுகள், தொழில்நுட்பம், திறன் மேம்பாடு ஆகியவற்றின் வாயிலாக 100 மாவட்டங்களில் வேளாண்மை சார்ந்த வேலைவாய்ப்புகளின் தன்மையையும், ஊதியத்தையும் அதிகரிக்கச் செய்வதற்கான திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கிராமப்புற மக்கள் வேலைவாய்ப்புகளைத் தேடி நகர்ப்புறங்களுக்கு இடம் பெயருவது தவிர்க்கப்படும். அந்த வகையில் இத்திட்டமும் வரவேற்கத்தக்கது. காய்கறிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவும், அவற்றின் சாகுபடியை பெருக்கவும், வினியோகத்தை மேம்படுத்தவும், மதிப்புக் கூட்டவும் மாநிலங்களுடன் இணைந்து சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.

கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட 6.65% அதிகமாக ரூ.1.28 லட்சமாகவும், மருத்துவத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.95,958 கோடியாக அதிகரிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் பாதுகாப்புத் துறைக்கு அடுத்தபடியாக ஊரக வளர்ச்சித் துறைக்கு மிக அதிகமாக ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கதாகும்.

2024-25 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு ரூ.86 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கோடிக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பும், ஊதியமும் வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்காக 2025-26 ஆம் ஆண்டில் இத்திட்டத்துக்கான நிதியை அதிகரிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களும் கோரிக்கை விடுத்த நிலையில், அதுகுறித்து நிதியமைச்சரின் உரையில் எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை என்பதும் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

மறைமுக வரிகளைப் பொறுத்தவரை செல்பேசிகள், மின்சார வாகனங்களில் பயன்படுத்துவதற்கான லித்தியம் பேட்டரிகள் ஆகியவற்றின் மீதான வரிகள் குறைக்கப்பட்டிருப்பது சாதகமான பயன்களை வழங்கும். அதேநேரத்தில் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான மறைமுக வரிகள் குறைக்கப்படாதது வருத்தமளிக்கிறது. பிஹார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பல புதிய திட்டங்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்தத் திட்டமும் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

சேகர்பாபு விளக்கம்: மன்னிப்பா… மன்னிப்பு கேட்கின்ற பழக்கம் எங்களுக்கு இல்லை..!

மன்னிப்பு கேட்கின்ற பழக்கம் எங்களுக்கு இல்லை. தவறு என்று இருந்தால், முதலமைச்சர் அதற்கு உண்டான பிராயசித்தத்தை தேடுவார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை எழில் நகரில் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் 5 வகுப்பறைகளுடன் சீரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தில் அமைந்துள்ள மாண்டிசேரி மழலையர் வகுப்புகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

அப்போது, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்தின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும். அதானி சந்திப்பு பற்றி முதலமைச்சர் விளக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.” என மு.க.ஸ்டாலின் பதிலளித்து இருந்தார்.

முதலமைச்சரின் இந்த பதில், பாமகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், மன்னிப்பு கேட்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு சேகர்பாபு பதிலளித்தார். அப்போது, எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்?. தேவையில்லாமல் தினந்தோறும் ஒரு அறிக்கை விடுகிறார். இதில் என்ன தவறு இருக்கிறது? தமிழில் உபயோகப்படுத்துகிற வார்த்தை தானே அது?. அதை எப்படி தவறு என்று சொல்ல முடியும்?. கடந்த காலங்களில் அவர் விட்ட அறிக்கை எல்லாம் எடுத்து பார்த்தால், கொச்சையாக யாரையும் தரம் தாழ்ந்து பேசும் சூழலில் இருப்பவர். எங்கள் முதலமைச்சர் கன்னியத்துக்கு பாதுகாவலராக இருப்பவர்.

கன்னியக்குறைவாக அவர் எதுவும் பேசவில்லை. அப்படி பேசுகின்ற சூழலும் எங்களுடைய முதலமைச்சருக்கு எப்போதும் ஏற்படாது. மன்னிப்பு கேட்கின்ற பழக்கம் எங்களுக்கு இல்லை. தவறு என்று இருந்தால், முதலமைச்சர் அதற்கு உண்டான பிராயசித்தத்தை தேடுவார். அவர் கூறிய வார்த்தையில் தவறு எதுவும் இல்லை என சேகர்பாபு தெரிவித்தார்.

தமிழிசை கேள்வி: அப்போ நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்பொழுது வேலையில்லாமல் தான் கருத்து சொன்னீர்களா..!?

நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்பொழுது சொன்ன கருத்துக்கள் எல்லாம் மக்களுக்காக இல்லாமல் வேலையில்லாமல் இருந்து கொண்டு சொன்ன கருத்துக்கள் தானா..!? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக சென்னை எழில் நகரில் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் 5 வகுப்பறைகளுடன் சீரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தில் அமைந்துள்ள மாண்டிசேரி மழலையர் வகுப்புகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

அப்போது, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்தின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும். அதானி சந்திப்பு பற்றி முதலமைச்சர் விளக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.” என மு.க.ஸ்டாலின் பதிலளித்து இருந்தார்.

இந்நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, மக்கள் நலனில் அக்கறை கொண்டு எந்தக் கட்சித் தலைவர் கருத்து சொன்னாலும் அதை மதிக்க வேண்டும் என்பது ஜனநாயகம் மக்களுக்காக கருத்து சொன்னால் அவர்கள் வேலை இல்லாமல் தான் கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்பொழுது சொன்ன கருத்துக்கள் எல்லாம் மக்களுக்காக இல்லாமல் வேலையில்லாமல் இருந்து கொண்டு சொன்ன கருத்துக்கள் தானா… ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம்…என பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலை: திமுக ஆட்சியில் இல்லாதபோது அங்கும், இங்கும், ஓடியதை ஸ்டாலின் மறந்துட்டாரு ..!

திமுக ஆட்சியில் இல்லாத கடந்த 2011 – 2021 பத்து ஆண்டுகள், அங்கும், இங்கும், ஆளுநர் மாளிகைக்கும் எனத் தான் ஓடி ஓடிச் சென்றதை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் மறந்து விட்டார் என அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், தங்கள் ஆட்சியின் ஊழல்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் மக்களிடம் இருந்து மறைக்க, அம்பானி, அதானி என்று திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட்டு வந்த திமுக, தற்போது, அதானி நிறுவனத்துடன் திமுக அரசுக்கும், குடும்பத்தினருக்கும் தொடர்பு என்ற செய்திகள் வெளிவந்ததும், அதனை மறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது குறித்து, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான, ஐயா திரு ராமதாஸ் அவர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தரக்குறைவான முறையில் முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் பதிலளித்திருப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.

திமுக ஆட்சியில் இல்லாத கடந்த 2011 – 2021 பத்து ஆண்டுகள், அங்கும், இங்கும், ஆளுநர் மாளிகைக்கும் எனத் தான் ஓடி ஓடிச் சென்றதை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் மறந்து விட்டார் போலும். ஐயா திரு. ராமதாஸ் அவர்கள் மீதான அவரது இன்றைய விமர்சனத்தை, அன்று அவர் மீது வைத்திருந்தால், அதனை அவர் எப்படி எதிர்கொண்டிருப்பார்?

அரசியலில் திமுகவின் இரட்டை வேடத்தைக் கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு. குறிப்பாக, தமிழக அரசியல் வரலாற்றில், முக்கியமான பங்கினை வகிக்கும் ஐயா திரு. ராமதாஸ் அவர்கள் கேட்டிருக்கும் கேள்வியின் உண்மையை எதிர்கொள்ள இயலாமல், இது போன்ற தரக்குறைவான, முற்றிலும் ஏற்கத் தகாத முறையில் பதிலளித்திருப்பது, முதலமைச்சரின் இயலாமையைத்தான் காட்டுகிறது. அவர் வகிக்கும் தமிழக முதலமைச்சர் பதவிக்கு அது அழகல்ல என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன் என அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின்: ராமதாஸுக்கு வேறு வேலையில்லை..! கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை..!

ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை” தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை எழில் நகரில் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் 5 வகுப்பறைகளுடன் சீரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தில் அமைந்துள்ள மாண்டிசேரி மழலையர் வகுப்புகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

அப்போது, செய்தியாளர் ஒருவர், குளிர்கால கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள் எதை வலியுறுத்தி பேச இருக்கின்றனர்? என்ற கேள்விக்கு “ஏற்கனவே நாங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து குளிர்கால கூட்டத்தொடரில் என்னென்ன பேச வேண்டும் என்பது குறித்து விவாதித்து, தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதை வலியுறுத்திப் பேச வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். அந்த அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவார்கள். அதானி விவகாரம் குறித்த செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு, “அதானி விவகாரம் குறித்து துறையின் அமைச்சரே கூறியிருக்கிறார். அதை ட்விஸ்ட் செய்ய வேண்டாம்.

தொடர்ந்து அதானி- முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு குறித்த ராமதாஸின் அறிக்கை தொடர்பான செய்தியாளரின் கேள்விக்கு, “பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.” என மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

பாமக, விசிக கொடிக்கம்ப பீடங்களை உடைத்த பெண்..! எங்களுக்கு எந்த கட்சியும் தேவையில்லை..!

எங்களுக்கு எந்தக் கட்சியும் தேவையில்லை’ என விசிக, பாமக கொடிக்கம்ப பீடங்களை ஆவேசமாக உடைத்த பெண்மணி. கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த செல்லதுரை என்பவர் சில தினங்களுக்கு முன்பு புவனகிரியில் இருந்து மஞ்சக்கொல்லை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது உடையூர் கிராமத்தில் இளைஞர்கள் சிலர் சாலையில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.

அதைப்பார்த்த அவர், ஓரமாக சென்று மது அருந்துமாறு அந்த இளைஞர்களிடம் கூறியுள்ளார். இதில் இளைஞர்களுக்கும் செல்லதுரைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞர்கள் அவரை தாக்கியுள்ளனர். காயமடைந்த செல்லதுரை, சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரில் உடையூர் கிராமத்தைச் சேர்ந்த 6 பேரை புவனகிரி காவல்துறை கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாமகவினர் மற்றும் கிராம மக்கள் விருத்தாசலம் – புவனகிரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீதமுள்ள நபர்களையும் கைது செய்வதாக உறுதி அளித்தது இத்தனை தொடர்ந்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.

இதற்கிடையே, மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமரன் மனைவி அருட்செல்வி என்பவர் நேற்று முன்தினம் ஆத்திரத்துடன் கடப்பாறையால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்ப பீடத்தை சேதப்படுத்தினார். அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை கடப்பாரையை பிடுங்கி அருகே இருந்த வாய்க்காலில் வீசினர்.

ஆனால், அருட்செல்வி அதே பகுதியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி கொடிக்கம்ப பீடத்தை மற்றொரு இரும்பு கம்பியால் சேதப்படுத்தியதோடு, ‘‘மதுவால் ஊருக்குள் பிரச்சினை வருகிறது, எங்கள் ஊருக்கு எந்த கட்சியின் கொடிக்கம்பமும் தேவையில்லை, நாங்கள் இந்த ஊரில் அமைதியாக வாழ வேண்டும்’’ என தெரிவித்தார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

பேசுப் பொருளாக மாறியுள்ள ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ ராமதாஸ் திடீர் பதிவு..!

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவலை கால வகையினானே என பாமக நிறுவனர் ராமதாஸின் திடீர் பதிவு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மக்களவை தேர்தல் வரை அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, திடீரென்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பாமக அணிக்கு தாவியது. இதற்கு பாமகவில் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அன்புமணியின் நிர்பந்தத்தால் இந்த கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானதாக அப்போதே கூறப்பட்டது.

தொடர்ந்து பல எதிர்ப்புகளை மீறி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக போட்டியிட்ட 10 இடங்களிலும் சவுமியா அன்புமணி போட்டியிட்ட தர்மபுரி தொகுதியை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்தனர். இந்த படுதோல்வி இன்னும் பாமகவினர் மனதில் நீங்காத நிலையில் மத்தியில் ஆட்சி அமைத்த பாஜக அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தலுக்கு பின் பாமகவை பாஜக கண்டு கொள்ளவில்லை என தெரிகின்றது.

இதனிடையே இரு தினங்களுக்கு முன் பாமக தலைவர் அன்புமணி எம்பிக்கு ரயில்வே வாரிய ஆலோசனை குழு உறுப்பினர் பதவியை மத்திய அரசு அளித்தது. மத்தியில் கேபினட் அமைச்சராக பதவி வகித்த அன்புமணிக்கு சாதாரண ஆலோசனை குழு உறுப்பினர் பதவி வழங்கி அவரை சிறுமைப்படுத்தி விட்டதாக பாமகவினர் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்துள்ளன.

மேலும் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் ஏதாவது பெரிய பொறுப்பு வரும் என்ற கனவில் இருந்த நிலையில் சாதாரண ஆலோசனை குழு உறுப்பினர் பதவி வழங்கியிருப்பது பெரும் ஏமாற்றத்தை ராமதாஸ்ஸூக்கு ஏற்படுத்தி இயிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவலை கால வகையினானே’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸின் இந்த திடீர் பதிவு பாஜக தலைவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் வட மாவட்டத்தில் மட்டும் வாக்கு வங்கி வைத்துள்ள பாமகவுக்கு சவாலாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அண்மையில் தவெக மாநாடு அமைந்துள்ளது. மேலும் பாமகவின் கொள்கைகள் சிலவற்றை தவெக பின்பற்றுவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று விஜய் பனையூரில் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில், ராமதாஸின் இந்த பதிவு பேசுப் பொருளாக மாறியுள்ளது.