நிர்மலா சீதாராமன்: போதைப் பொருட்கள் மூலம் திமுகவுக்கு வந்த செருக்கை, ஓட்டு மூலமாக நொறுக்க வேண்டும்..!

தஞ்சாவூர் மேல வீதியில் பாஜக சார்பில் 1 கி.மீ. தொலைவுக்கு ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு எம்.முருகானந்தத்தை ஆதரித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில் “தஞ்சாவூர் பல எழுத்தாளர்களையும், இசைக் கலைஞர்களையும் உருவாக்கிய மண். இங்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு கஜா புயல் வீசி விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டபோது, நானும், இங்கு போட்டியிடும் கருப்பு முருகானந்தமும் பல உதவிகளை செய்து அவர்களது வாழ்வாதாரத்தை மீட்டுள்ளோம்.

கச்சத்தீவு விவகாரத்தை ஏன் இப்போது பேச வேண்டும் என்கிறார்கள். கச்சத்தீவை திமுக தாரைவார்த்து கொடுத்ததால்தான், இன்று வரை மீனவர்கள் பிரச்சினை தீராமல் உள்ளது என்ற உண்மையை அனைவரும் பேச வேண்டும். ‘டிஎம்கே’ என்றழைக்கப்படும் திமுக, ‘டிரக்’ முன்னேற்ற கழகமாக மாறியுள்ளது. போதைப் பொருட்கள் மூலம் திமுகவுக்கு வந்த செருக்கை, ஓட்டு மூலமாக நொறுக்க வேண்டும். திமுகவை நாம் ஓட ஓட விரட்ட தேர்தலில் மக்கள் கருப்பு எம்.முருகானந்தத்தை ஆதரிக்க வேண்டும்” என நிர்மலா சீதாராமன் பேசினார்.

நிர்மலா சீதாராமனின் கணவர்: ”மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட நிலைதான் நாடுமுழுவதும் ஏற்படும்”

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.கவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி தேர்தலைச் சந்திப்பதால் இந்த நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கிய தேர்தலாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சியில் பொருளாதாரம் கடுமையாகப் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாகப் பொதுமக்களின் வாங்கும் சத்தி குறைந்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

தொடர்ச்சியாக பா.ஜ.க அரசின் பொருளாதார திட்டங்களைப் பொருளாதார நிபுணர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால் இவர்களின் குரலை மத்திய அரசு காது கொடுத்துக் கேட்பதே இல்லை. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பிரகலா பிரபாகர் கூட பா.ஜ.கவின் பொருளாதார கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மணிப்பூர் நிலைமைதான் இந்தியாவிற்கே ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரகலா பிரபாகர் கொடுத்த பேட்டியில் , ” பா.ஜ.கவும் பிரதமர் மோடியும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை முழுமையாக மாற்றிவிடுவார்கள். இந்தியாவின் வரைபடத்தையே இவர்கள் மாற்றி விடுவார்கள். மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட நிலைதான் நாடுமுழுவதும் ஏற்படும். மேலும் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் தேர்தலே நடைபெறாது” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர்கள் கேள்விக்கு நிர்மலா சீதாராமன் கிண்டலான பதில்..!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அங்கு நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை போக்க மத்திய அரசு என்ன செய்ய போகிறது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு பதிலளித்த அவர் முதலமைச்சர் சித்தராமையா 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான நீர்ப்பாசன பணிகளை செயல்படுத்த விடாமல் தடுப்பதாவும், ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பை உறுதி செய்யும் ஜல் ஜீவன் திட்ட பணிகளையும் அவர் நிறுத்தி வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

அப்போது மத்திய பாஜக அரசு மாநிலங்களை வஞ்சிப்பது குறித்து நேருக்கு நேர் விவாதிக்கலாமா என கேட்ட போது கிண்டல் செய்யும் வகையில் ஒலி எழுப்பி நிர்மலா சீதாராமன் பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் போராட்டம்: “நிவாரணம் கேட்கவில்லை; உரிமையைத் தாருங்கள்..!”

மத்திய இடைக்கால பட்ஜெட்டை 2024 பிப்ரவரி 1-ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த நிதி நிலை அறிக்கையில், தமிழ்நாடு திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நாட்டில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்த பிறகு வரி வசூல் அதிகரித்திருப்பதாக நிதி அமைச்சர் பெருமைப்பட்டுக் கொள்கிறார். ஆனால் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை இந்த ஆண்டு வழங்குவது குறித்து எந்தவொரு அறிவிப்பு இல்லாமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இதனால் இந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டுக்கு ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய வரிகள் மீது கூடுதல்வரிகள் மற்றும் மேல் கட்டணமாக சுமார் 7.5 லட்சம் கோடி ரூபாயினை மத்திய அரசு தொடர்ந்து வசூலித்து வருகிறது. இதனால் மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய பங்கை மத்திய அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. கூடுதல் வரி மற்றும் மேல் கட்டணங்களை மாநிலங்களுடன் பகிர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் மத்திய அரசு கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணாகச் செயல்பட்டு வருவது கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டு மக்கள் நலனை முழுமையாகப் புறக்கணித்து, தமிழக வளர்ச்சிக்கு வஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தயாரித்து அளித்துள்ளார் . இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள்” என்று கூறியிருந்தார்.

அதன்படி, இன்று நாடாளுமன்ற வளாக காந்தி சிலை முன்பு திமுக கூட்டணிக் கட்சி எம்பி.,க்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். டிஆர் பாலு, ஆ.ராசா, திருமாவளவன் உட்பட திமுக கூட்டணிக் கட்சி எம்பி.,க்கள் கருப்பு சட்டை அணிந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். கையில் பதாகைகளை ஏந்தியவாறு திமுக கூட்டணியின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பி.,க்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். பாஜக அல்லாத மாநிலங்களுக்கு நிதி தராமல் வஞ்சிக்கப்படுவதை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது போன்ற முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

நிர்மலா சீத்தாராமனுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி…! தமிழகம் கொடுக்கும் ஒரு ரூபாய்க்கு மத்திய அரசிடம் திரும்ப பெறுவது 29 பைசா..!

சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழகத்துக்கு மத்திய அரசு ஒன்றுமே கொடுப்பதில்லை என்று சொல்கிறார்கள். தமிழகத்துக்கு மத்திய அரசு நிறைய கொடுத்துள்ளது. 4 வந்தே பாரத் ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்படுகின்றன. 2014 – 2023 வரை தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பெற்ற வரி ரூ.6.23 லட்சம் கோடி. அதேநேரம் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதி ரூ.6.96 லட்சம் கோடி. தமிழகத்தில் இருந்து பெற்ற வரியைவிட கூடுதலாகவே நிதி கொடுத்துள்ளோம். தமிழகம், கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மாதம் தோறும் தவறாமல் நிதி கொடுத்து வருகிறோம்.

இன்னொன்று, மத்திய அரசு செஸ் வரியை வசூலித்து தமிழகத்துக்கு எதுவுமே கொடுக்கவில்லை என்கிறார்கள். பல முறை சொல்லிவிட்டேன். செஸ் வரியை கொண்டு பள்ளிக்கூடம் கட்டுவது போன்ற பணிகள் செய்யப்படுகின்றன. அப்படியாக, தமிழகத்துக்கு மொத்தமாக செஸ் வரி மூலமாக 2014-15 முதல் இன்றுவரை 57,557 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு 37,965 கோடி ரூபாய் கொடுத்துள்ளோம். அதேபோல் பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்காக, 11,116 கோடி ரூபாயும், கிராமங்களில் வீடுகள் கட்டுவதற்காக 4,839 கோடி ரூபாயும் கொடுத்துள்ளோம், கிராமங்களில் சாலை அமைக்கும் திட்டத்துக்கு 3,637 கோடி ரூபாய் என செஸ் வரியாக வசூல் செய்ததை தமிழகத்துக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது.

ஜி.எஸ்.டி வரி குறித்து எப்போதும் கேள்வி கேட்கப்படுகிறது. தமிழகத்தில் வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி வரி தமிழகத்துக்கு கிடைப்பதில்லை என்று சொல்கிறார்கள். இது உண்மை இல்லை. மாநிலங்களில் இருந்து வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி வரி முழுமையாக மாநிலங்களுக்கே வழங்கப்படுகிறது. எஸ்.ஜி.எஸ்.டி எனப்படும் ஸ்டேட் ஜி.எஸ்.டி வரி நூறு சதவீதம் மாநிலங்களுக்கே செல்கிறது.

ஐ.ஜி.எஸ்.டியில் 50 சதவீதம் மாநிலத்துக்கும் 50 சதவீதம் பிரித்து வழங்கப்படும். உதாரணத்துக்கு, 2022 -23 மார்ச் 31 வரை தமிழகத்துக்கு எஸ்.ஜி.எஸ்.டி வரியில் 36,353 கோடி ரூபாயும், ஐ.ஜி.எஸ்.டி வரியில் மாநிலத்துக்கு 32,611 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. இதே ஐ.ஜி.எஸ்.டி வரியில் மத்திய அரசுக்கே 27,360 கோடி ரூபாய்தான். ஆக, மத்திய அரசை விட மாநில அரசுக்கே நிதி அதிகம் கிடைக்கிறது. அனைத்து மாநிலங்களுக்கும் இதே நிலைமைதான்.

வரிகளில் இருந்து எந்த மாநிலங்களுக்கு எவ்வளவு நிதி கொடுக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்வது நிதி ஆணையம்தான். தமிழ்நாட்டின் மேல் விரோத மனப்பான்மை உடன் கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காமல் இருந்தது இல்லை. ஒவ்வொரு மாதமும் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதி சரியாக கொடுக்கப்பட்டு வருகிறது. அதுதவிர சில மாதங்களில் முன்கூட்டியே நிதி ஒதுக்கப்படுகிறது” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் ஒரு விழாவில் பேசிய கருத்துக்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று அளித்த பேட்டியில், மத்திய அரசு 2024-15 ல் இருந்து 2022-23 வரை ஏறத்தாழ 4.75 லட்சம் கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு வழங்கி இருக்கிறது. இதில் ரூ.2.46 லட்சம் கோடி என்பது மத்திய வரிகளில் இருந்து வரி பகிர்வாகவும், ரூ.2.28 லட்சம் கோடி மானியம் மற்றும் உதவித்தொகை அடிப்படையில் அமைந்திருக்கிறது. அதே நேரத்தில் நேரடி வரி வருவாயாக ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் இருந்து ரூ.6.23 லட்சம் கோடி வசூலித்துள்ளது.

மறைமுக வரி வருவாய் குறித்து எந்த தகவலும் அவர்கள் நம்மிடம் பகிர்நது கொள்ளவில்லை. சட்டமன்றத்தில் ஏற்கனவே நான் சொன்னதைபோல, நம்மிடத்தில் இருந்து செல்லக்கூடிய ஒவ்வொரு ரூபாய்க்கும் நாம் அவர்களிடத்தில் பெறுவது 29 பைசாதான் திரும்ப பெறுகிறோம். ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த விகிதாச்சாரம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. உதாரணத்துக்கு பாஜக ஆளும் மாநிலங்களில் 2014-2015ல் இருந்து 2022-23 வரை ரூ.2.23 லட்சம் கோடிதான் மத்திய அரசுக்கு வரி வருவாய் மூலம் கொடுக்கிறார்கள் என்றால், மத்திய அரசிடம் இருந்து அவர்களுக்கு வரக்கூடிய பணம் ரூ.15.35 லட்சம் கோடியாகத்தான் சில மாநிலங்களில் இருக்கிறது.

உதாரணமாக உத்தரபிரதேசத்தை எடுத்துக் கொண்டால், தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதி மத்திய அரசிடம் இருந்து வரவில்லை என்பதை 12-வது முதல் 15-வது நிதிக்குழுவின் புள்ளி விவரங்களை பார்த்தாலே தெரியும். தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் இந்திய அளவில் இருக்கும் மக்கள் தொகையில் 6.124 சதவீதம் வைத்திருக்கும் மாநிலத்திற்கு நிதித்துறையில் இருந்து வெறும் 4.79 சதவீதமாக மட்டுமே கிடைக்கிறது. செஸ், சர்சார்ஜ் மூலம் மாநில நிதியை மத்திய அரசு அபகரிக்கிறது. 2011-12ல் மத்திய அரசின் மொத்த வருவாயில் செஸ், சர்சார்ஜின் பங்கு 10.4 சதவீதமாக இருந்தது.

2021-22 ல் மத்திய அரசுக்கு செஸ், சர்சார்ஜ் மூலம் கிடைக்கும் வருவாய் 28.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. செஸ், சர்சார்ஜ் தொகையில் இருந்து மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்க தேவையில்லை என்பதால் மொத்த தொகையும் மத்திய அரசுக்கு சென்றுவிடுகிறது. தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய தொகை வரவில்லை என்று புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது. நிதி ஆளுமையை மாநில அரசுகள் இழந்துள்ளன. எனவே இந்த நிதி நெருக்கடியிலும்கூட மக்கள் நலம் காக்கும் ஒரு அரசாக நாம் செயல்பட்டு வருகிறோம்.

மேலும் மத்திய அரசின், வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.72 ஆயிரம் மத்திய அரசு கொடுக்கிறது. ஆனால் அவர்கள் கொடுப்பதைவிட இரட்டிப்பான தொகையை தமிழ்நாடு கொடுக்கிறது. நகர்ப்புற வாழ்விட பகுதிகளில் வீடு கட்டும் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.1.5 லட்சம் கொடுக்கிறது. தமிழ்நாடு அரசு ரூ.7 லட்சம் கொடுக்கிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கும் தமிழ்நாடு அரசுதான் அதிக நிதியை கொடுத்துக்கொண்டு இருக்கிறது.

சென்னை மெட்ரோ-2 ரயில் திட்டத்துக்கு ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான தொகை ரூ.63,246 கோடி. இதற்கு மத்திய அரசும், மாநில அரசும் 50 சதவீதம் நிதி வழங்க வேண்டும். 2021-22 ல் மத்திய நிதி அமைச்சர் அடிக்கல் நாட்டியபோதும் சொன்னார். ஆனால் இன்று வரை அதற்கான பணம் ஒதுக்கப்படவில்லை. ஆனால், மகாராஷ்டிராவில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.28.493 கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவில் ரூ.17,532 கோடி ஒதுக்கியுள்ளது.

டெல்லி-உத்தரபிரதேசத்தில் ரூ.16,189 கோடி, மேற்கு வங்கத்தில் ரூ.13,109 கோடி, குஜராத்தில் ரூ.12,167 கோடி, உத்தரபிரதேசத்தில் ரூ.11,565 கோடி வழங்கியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு வெறும் ரூ.3,273 கோடி மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது. இதில் இருந்தே எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு கோடி, தமிழ்நாட்டிற்கு ஏன் இவ்வளவு குறைவு என்பதை புரிந்துகொள்ள முடியும். சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு மத்திய அரசு உறுதி அளித்தபடி இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அதேபோன்று ரயில்வே திட்டங்களுக்கும் 2.5 சதவீதம் மட்டும்தான் நிதி ஒதுக்கப்படுகிறது. ரயில்வே திட்டத்திற்கான கடைசி 5 வருடத்தில் ரூ.18 ஆயிரம் கோடி மட்டுமே கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருப்பி திருப்பி கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு இரண்டு மடங்காக பணம் கொடுத்திருக்கிறோம் என்கிறார். பண மதிப்பையும், விலைவாசி மதிப்பையும் ஒப்பிட்டு பார்த்தால், பணத்தின் மதிப்பு இன்று எந்தளவுக்கு குறைந்திருக்கிறது என்று தெரியும். இப்போதும் நமது முதலமைச்சர், வெள்ள நிவாரண உதவி கோரி ஒன்றிய அரசிடம் கேட்டுள்ள நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று வெள்ள நிவாரண நிதியை வழங்க வேண்டும். மிக்ஜாம் புயலுக்காக சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு ரூ.1,486 கோடியும், தென்மாவட்டங்களில் வெள்ள நிவாரண நிதியாக ரூ.541 கோடி என இதுவரை ரூ.2,027 கோடி வெள்ள நிவாரண நிதியாக மக்களுக்கு பணமாக வழங்கி இருக்கிறோம் என தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

வங்கிகளில் ஆடு, மாடுகளுக்கு இறப்பு சான்றிதழ் கேட்குறாங்க..!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பக்தர்கள் பல்வேறு குறைகளை தெரிவித்தனர். குறிப்பாக கோயிலுக்கு பின் பகுதியில் சுவாமி வீதியுலா வரும் இடம் கழிப்பிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோயில் வளாகத்தில் இருந்த பழமையான மாமரம் முன்னறிவிப்பின்றி அகற்றப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களை தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த கோயில் செயல் அலுவலர் கோபால மணிகண்டன், அப்பகுதியில் வேலி அமைத்துக் கொடுப்பதாக தெரிவித்தார்.

அப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘செயல் அலுவலர் அப்பிரச்னையை சரி செய்துள்ளாரா? என்பதை 10 நாட்களில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பார்வையிடுவார். அதன் பிறகும் பணி நடைபெறவில்லை எனில் நானே அங்கு வந்து அது சரி செய்யப்படும் வரை அங்கிருந்து நகர மாட்டேன்,’ என்றார். இதற்கு அறநிலையத்துறை இணை ஆணையர் நிச்சயம் அந்த பணிகளை செய்து முடிப்போம், என்றார்.

இதற்கிடையே, நிர்மலா சீதாராமனிடம் ஒருவர், அதில், மழை வெள்ளத்தால் உயிரிழந்த கால்நடைகளால் ஏற்பட்ட இழப்புக்கு லோன் கேட்டு வங்கி சென்றால் ஆடு, மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்களிடம் இறப்பு சான்றிதழ் வாங்கி வர சொல்கிறார்கள். நாங்கள் யாரை போய் கேட்பது என்று வேதனை தெரிவித்தனர். இதை கேட்ட நிர்மலா சீதாராமன், நான் சொல்கிறேன் என கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெள்ளம் பாதித்த பகுதிகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழை காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தினார். மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக அமைச்சர்கள், அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தென்மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்துள்ளது. இதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடியை அவசர நிவாரண நிதியாக மக்களின் வாழ்வாதார உதவிக்காவும், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களின் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காகவும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, மத்திய குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய நிதி அமைச்சரை அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார்.

அதன்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த அவரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த நிர்மலா சீதாராமன், அங்கு வைக்கப்பட்டிருந்த மழை வெள்ள பாதிப்புகள் குறித்த புகைப்படங்களை பார்வையிட்டார். மாவட்டத்தில் மழை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பு குறித்து தமிழக அரசின் உயர் அதிகாரிகள் அவரிடம் விளக்கி கூறினர்.

தொடர்ந்து ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் வெள்ள பாதிப்புகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை, மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆய்வின் போது, தமிழக அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த உயர் அதிகாரிகள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கமாக மத்திய நிதியமைச்சரிடம் எடுத்துக் கூறினர்.

திருநாவுக்கரசர் சொன்னது: போயஸ் வீட்டில் சேலை இழுப்பு நாடகதிற்கு ஒத்திகை செய்தாராம் ஜெயலலிதா…!

மணிப்பூர் விவகாரம் குறித்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது கொதித்து எழுந்த கனிமொழி எம்பி மணிப்பூரில் திரௌபதியின் சேலைகள் உருவப்படுவதாக பேசியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார்.

அவர் பேசுகையில், மணிப்பூர் விவகாரம் குறித்து கனிமொழி இன்று பொங்குகிறாரே, அன்று 1989 -ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்த சம்பவத்தை மறந்துவிட்டாரா…? அவர் அவமானப்படுத்தப்பட்ட போது அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.

இதனால் கோபமடைந்த ஜெயலலிதா இனி இந்த அவைக்கு முதல்வராகத்தான் வருவேன் என சபதம் போட்டார். அப்படிப்பட்ட திமுக இன்று திரௌபதி குறித்து பேசுகிறார்கள். இது என்ன அநியாயம் என நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் நிர்மலா சீதாராமனின் தகவலுக்கு முதலமைச்சர் மு.க . ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஜெயலலிதாவின் சேலை கிழிப்பு சம்பவம் சட்டசபையில் நடைபெறவே இல்லை. இது ஜெயலலிதா போட்ட நாடகம் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதற்காக ஜெயலலிதா தனது வீட்டில் ஒத்திகை பார்த்ததாக அவருடன் இருந்த திருநாவுக்கரசரே தெரிவித்துள்ளார் என முதலமைச்சர் மு.க . ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஜெயலலிதா சேலை இழுப்பு விவகாரத்தில் திருநாவுக்கரசர் கூறியது, எம்ஜிஆர் இறப்புக்கு பிறகு நீண்ட ஆண்டுகள் கழித்து முதலமைச்சராக கருணாநிதி வந்தார். அப்படி முதலமைச்சரான போது அவரே நிதித்துறையையும் தன் வசம் வைத்துக் கொண்டார். 1989 -ம் ஆண்டு மே மாதம் மார்ச் 25 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த பட்ஜெட் காப்பியை அதிமுக எம்எல்ஏ கிழிக்க முயற்சித்தார். இதை உணர்ந்த கருணாநிதி இரு கைகளை பரப்பி பட்ஜெட் பேப்பரை எடுக்காத வண்ணம் குனிந்தபடியே தடுத்தார். அப்போது அவருடைய கண்ணாடி கீழே விழுந்தது. உடனே திமுகவினர் கருணாநிதியை மூக்கில் குத்தியதால்தான் அவரது கண்ணாடி கீழே விழுந்ததாக சொன்னார்கள்.

இதனால் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா மீது அடி விழுந்தது. எதிர்க்கட்சித் துணைத் தலைவரான என் மீது அடி விழுந்தது. கொறடா கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் கொறடா பின்னாடி இருந்தார். ஜெயலலிதாவுக்கு விழுந்த அடியில் பாதியை நான் வாங்கிக் கொண்டேன். என் உச்சி மண்டை வீங்கியது. ஜெயலலிதா குனிந்து கொண்டு கையை வைத்து படுத்துக் கொண்டார்.

ஓரளவுக்கு மேல் அடிப்பது குறைந்ததும் ஜெயலலிதாவை அழைத்துக் கொண்டு நாங்கள் வெளியேறினோம். ஆனால் ஜெயலலிதாவின் சேலையை எல்லாம் உருவினார்கள் என வதந்தி பரவியது. கருணாநிதி முகத்தில் குத்தும் விழவில்லை, ஜெயலலிதாவின் சேலையும் இழுக்கப்படவில்லை. ஆனால் சேலை இழுப்பு விவகாரத்தில் ஜெயலலிதா அவருடைய வீட்டில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்ததை நானே பார்த்தேன் என திருநாவுக்கரசர் எம்.எல்.ஏவாக இருந்த போது சட்டசபையில் கூறியிருந்தார்.

சட்டசபையில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா தலைமுடி கலைந்தபடியே வந்து தனது சேலையை துரைமுருகன் உருவியதாகவும் அங்கிருந்தவர்கள் எல்லாம் தன்னை பார்த்து சிரித்ததாகவும் கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார். ஆனால் இந்த சம்பவத்தை துரைமுருகன் மறுத்துள்ளார். கடந்த 2003 -ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது பட்ஜெட் விவாதத்தின் போது மீண்டும் இந்த பிரச்சினை எழுந்தது.

அப்போது பேசிய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இதே சட்டசபையில் எம்ஜிஆர் தாக்கப்பட்டார். அவர் மீது செருப்புகள் வீசப்பட்டன. 1989 இல் துரைமுருகன் என் சேலையை பிடித்து இழுத்தார். இதில் என் சேலை கிழிந்துவிட்டது. ஆளும் கட்சியினர் அப்போது என்னிடம் கண்ணியமாக நடந்து கொள்ளவில்லை என்றார். உடனே துரைமுருகன், நீங்கள் கூறுவது தவறு. நீங்கள் கூறும் இடத்தில் இருந்து நான் அதிக தூரத்தில் இருந்தேன் என தெரிவித்தார்.

புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார் நிர்மலா சீதாராமன்..!

4 வருடங்களுக்கு முன் நிலம் ஆர்ஜிதம் செய்யாத இடத்தில் எப்படி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்…? அப்படியானால் யாரை ஏமாற்ற அடிக்கல் நாட்டினீர்கள்…?

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று லோக்சபாவில் பேசுகையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தாமதமாக தமிழக அரசே காரணம். நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த தாமதத்துக்கு மத்திய அரசு காரணம் இல்லை.” எனத் தெரிவித்தார்.

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் நேற்று மாலை பள்ளி முடித்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 9 வயது மாணவி மீது சாலையில் சுற்றுத் திரிந்த மாடு முட்டித் தாக்கியதில் சிறுமி காயமடைந்த அமைந்தகரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அந்த மாணவியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “குழந்தைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை மருத்துவர்கள் உடனடியாக வழங்கி தொடர்ந்து கவனித்து வருகின்றனர். தலை, கை ஆகிய பகுதிகளில் அடிபட்டு உள்ளதை, சி.டி ஸ்கேன் எடுத்து பெரிய பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர். கண் அருகே இரத்தக் கசிவு இருப்பதை கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் நாடாளுமன்றத்தில் பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரை எய்ம்ஸ் குறித்து சொன்ன பதில், உண்மைக்கு மாறானது. மத்திய நிதி அமைச்சராக இருப்பவர் இப்படி மக்களை குழப்பும் வகையில் பேசக்கூடாது. வாய் கூசாமல் பொய் பேசியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

அதாவது மெகா அண்டப்புளுகு என்று சொல்வார்களே, அப்படியான புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார் மத்திய நிதி அமைச்சர். மத்திய பாஜக அரசு கடந்த 2015-ம் ஆண்டு 7 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்தது. அதில் உத்தர பிரதேசம், அசாம், ஜம்மு காஷ்மீர், பீகார், தமிழ்நாட்டின் மதுரை உள்ளிட்ட 7 இடங்களில் மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. ஆனால் உத்தர பிரதேசம் கோரக்பூரில் மருத்துவமனை இயங்கி வருகிறது. அசாம், ஜம்முவில் மருத்துவக் கல்லூரிகள் மட்டும் இயங்கி வருகின்றன. பீகார் உள்ளிட்ட இடங்களிலும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆனால் மதுரை நிலைமை நமக்கே தெரியும். 2017-ல் ஜார்க்கண்டில் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை, தெலுங்கானாவில் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாம் இயங்கி வருகின்றன. 2022-ல் மணிப்பூர், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அறிவித்த மருத்துவமனைக்கு இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் 2019-ல் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, நிலம் ஆர்ஜிதம் செய்யப்படவில்லை என நிதி அமைச்சர் இன்று சொல்கிறார்.

ஆனால் 4 வருடங்களுக்கு முன் நிலம் ஆர்ஜிதம் செய்யாத இடத்தில் எப்படி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்? அப்படியானால் யாரை ஏமாற்ற அடிக்கல் நாட்டினீர்கள்? அடிக்கல் காட்டப்பட்ட இடம் என்பது ஆர்ஜிதம் செய்யப்பட வேண்டிய இடமே அல்ல. அது அந்த மாவட்ட நிர்வாகத்தின் வசமிருந்த இடம். அதனை மத்திய அரசுக்கு மாற்றிக் கொடுத்த பின்னர் தான், பிரதமர் வந்து அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு பின், மத்திய அரசின் குழுவினர் வந்து ஆய்வு செய்து, 15 கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டி முடிக்கப்பட்டது.

அது 2021-ல் திமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே நடந்தது. மதுரை எய்ம்ஸ் கட்டுவதற்கான நிலத்தை மதுரை மாவட்ட நிர்வாகம் மத்திய அரசுக்கு மாற்றியதற்கான கோப்புகளை அடிக்கல் நாட்டு விழா நடந்த பின்னர், கடந்த 2020 நவம்பர் 3 அன்று டெல்லிக்கு சென்று மத்திய அரசின் உரிய அலுவலர்களிடம் அன்றைய அதிமுக ஆட்சியாளர்கள் ஒப்படைத்துள்ளனர். ஆனால் அதெல்லாம் தெரியாமல் நிதி அமைச்சர் இவ்வாறு பேசி உள்ளார். இப்படி தவறான தகவலை மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது என்பது மிகவும் மோசமானது.

மற்ற மாநிலங்களில் எல்லாம் மத்திய அரசே முழு நிதியையும் ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மட்டும் ஜப்பான் நிதியை நாடிச் செல்வது ஏன்? மற்ற மாநிலங்களை விட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளதாக கூறியுள்ளார். மேலும் நிதி தேவை உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் கூறி உள்ளார். அதையெல்லாம் காலதாமதம் ஆனதற்கு காரணமாக சொல்கிறார். ஆனால் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையை ஆயிரம் படுக்கைகளுடன் ஒன்றரை ஆண்டுகளில் கட்டி முடித்து உள்ளோம். இன்று அது செயல்பாட்டிற்கே வந்துவிட்டது.” எனத் தெரிவித்தார்.

திமுக எம்எல்ஏ பரந்தாமன் பதிலடி: நிர்மலா சீதாராமன் புரிதல் இல்லாமல் யாரோ எழுதிக்கொடுத்ததை பேசுகிறார்..!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தமிழர்கள் பற்றி சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திராவிடம் பற்றி எல்லாம் குறிப்பிடப்படவில்லை மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் சேலை இழுக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டது.. என்பது மாதிரியான கருத்தையும் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த இரண்டு விஷயங்கள் குறித்து எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஐ பரந்தாமன் பதில் கூறுகையில், ” மணிப்பூரில் நடந்த மனிதாபிமானமற்ற, இந்திய நாடே வெட்கப்படக்கூடிய மிகப்பெரிய மோசமான ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அதை பற்றி மத்திய அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காதது குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் மணிப்பூர் சென்று பார்வையிட்டு வந்த பின்னர், பிரதமர் நரேந்திர மோடியின் மீது, இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தார்கள். அதன் மீது நடைபெற்ற விவாதத்தில் பேசினார்கள்.

அப்போது மத்திய அரசு எங்கெல்லாம் தவறு செய்கிறது.. ஜிஎஸ்டி வரி விதிப்பால் நாட்டுக்கு எப்படி பாதிப்பு ஏற்படுகிறது.. மொழி திணிப்பால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஏதேச்சதிகாரம், ஒரே நாடு ஒரே மொழி இது மாதிரி எல்லாம் இந்திய ஜனநாயகத்திற்கு எதிராக செய்து கொண்டு வருகிறார்கள் என்று திமுக எம்பி கனிமொழி பேசினார். அப்போது அவர் நீங்க இந்தி மொழியை திணிக்கிறீர்கள்.. இந்தியாவின் பிற மொழிகளையும் பாருங்க என்பது தான் கனிமொழி பேச்சின் அர்த்தமாக இருந்தது.

தமிழில் உள்ள இலக்கியத்தை படிங்க.. உதாரணத்திற்கு சிலப்பதிகாரத்தை பாருங்கள் என்று மேற்கோள் தான் காட்டினார். சட்டசபையில் ஜெயலலிதா சேலையை திமுகவினர் பிடித்து இழுத்ததாக நிர்மலா சீதாராமன் பேச்சு.. சம்பவம் உண்மையா ? ஆனால் இன்றைக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும் போது , மணிப்பூர் சம்பவத்தை பற்றி மருத்துக்குக் கூட பேசவில்லை. மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று பேசவில்லை.. அதைவிட்டுவிட்டு அரசியல் மேடை போல் அவையை மாற்றி உள்ளது பாஜக அரசாங்கம்.. வடக்கே வேங்கடமும், தெற்கே குமரியும் தெற்கிலும், கிழக்கிலும் கடலும் தமிழகத்தின் எல்லைகளாக இருந்தது என்று பாடப்புத்தகத்தில் மாணவர்கள் படிக்கிறார்கள்.

இதில் மாபொசியின் விளக்கத்தை சொன்னார்கள் .. மொழி வாரியாக மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு எல்லைகள் மாறி உள்ளது. ஆனால் சிலப்பதிகாரத்தில் சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது என்று கற்பனையான ஆதாரமற்ற விஷயத்தை எழுதி கொடுத்ததை நிர்மலா சீதாராமன் படித்துள்ளார். இந்தியா என்ற சப்ஜெக்ட் எல்லாம் சிலப்பதிகாரம் காலக்கட்டத்தில் இல்லை.. பல சமஸ்தானங்கள் இருந்தது. வெள்ளையர்கள் வசதிக்காக இந்தியா என்று நிர்வாக ரீதியாக உருவாக்கப்பட்டது.

நிர்மலா சீதராமன் புரிதல் இல்லாமல் பட்ஜெட். வரி உள்பட பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார் என்று பார்த்தால், வரலாறு குறித்தும் அரசியல் குறித்தும் புரிதல் இல்லாமல் யாரோ எழுதிக்கொடுத்ததை பேசுகிறார். இரண்டாவது ஜெயலலிதா சப்ஜெக்ட்டை எடுத்ததே மிகப்பெரிய அநாகரீகம்.. சாதாரண சாமானிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.. பெண்கள் வல்லுறவுக்கு ஆக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்கள் வெளிப்படையாக மானபங்கம் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அதை பற்றி பேசுவதற்கு கொஞ்சம் கூட நாகரீகம் தெரியாமல் , நிர்மலா சீதாராமன், அரசியல் நாடகம் செய்த ஜெயலலிதாவின் செயலை, அதாவது ஜெயலலிதாவின் அரசியல் விளையாட்டை போய் பேசுவது, இவர்களின் சிறு புத்தி மற்றும் சிறுபிள்ளைத்தனமாகும். ஒன்றுமே இல்லை நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பிளையிங் கிஸ் கொடுத்ததாக பாஜக எம்பிக்கள் கூறினார்கள் அவர்களிடம் எப்படி தரமான வாதத்தை பார்க்க முடியும்” என்று திமுக எம்எல்ஏ பரந்தாமன் கூறினார்.