“திமுக அரசின் மூன்றாண்டு கால ஆட்சி சாதனை ஆட்சி இல்லை… வேதனை ஆட்சியே..!”

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வகுத்துத் தரும் தேர்தல் வியூகப்படி வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும், 2026 சட்டப்பேரவை பொது தேர்தலிலும் கட்சி மகத்தான வெற்றிபெறும் வகையில் நிர்வாகிகள் அனைவரும் தேர்தல் பணியாற்றி வெற்றிக்கனியை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் சமர்ப்பிப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் நலன் கருதி மின் கட்டண உயர்வை ரத்து செய்திடவும் மாதாந்திர மின் கட்டண முறையை அமல்படுத்தவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளை காப்பாற்றத் தவறியதாகவும், அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த பல திட்டங்களை முடக்கியது, நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்காதது, இலவச வேட்டி சேலை மற்றும் இலவச பள்ளி சீருடை வழங்குவதில் மெத்தனப்போக்கு ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திமுக அரசின் மூன்றாண்டு கால ஆட்சி சாதனை ஆட்சி இல்லை. வேதனை ஆட்சியே எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்கள் நலனில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தவில்லை எனக் கூறி, மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களை அறிவிக்காததற்கும், போதுமான நிதி ஒதுக்காததற்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், மருத்துவ காப்பீடு பிரீமியத்துக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்ததை ரத்து செய்ய வலியுறுத்தியும், வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

டி.ஆர்.பாலு சாடல்: “பாஜக கூட்டணிக்கு மக்களவைத் தேர்தலில் பூஜ்ஜியம் கொடுத்தற்காகத் தமிழ்நாடு மெட்ரோ ரயில் திட்டங்களுக்குப் பூஜ்ஜியம்–!”

பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைந்த பிறகு தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் நலன் தரும் திட்டங்கள் ஒன்றுகூட இல்லாதது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிஹார், ஆந்திரா மாநிலங்களுக்கு மட்டும் லட்சக்கணக்கான கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியவர்கள், தமிழ்நாட்டை வஞ்சித்தார்கள். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் போது, திருக்குறள் சொல்லுவார். இப்போது திருக்குறள் மட்டுமல்ல, தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தைகளே பட்ஜெட்டில் இடம்பெறாமல் பார்த்துக் கொண்டார்கள். இதனைக் கண்டித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களை நடத்தின.

பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் எதையும் அறிவிக்காமல் துரோகம் செய்த மத்திய அரசு, இன்றைக்கு ரயில்வே திட்டங்களிலும் தமிழர்களின் முதுகில் குத்தியிருக்கிறது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் முடிந்த பிறகு ரயில்வே திட்டங்கள் குறித்த அதிகாரபூர்வமான பிங்க் புத்தகம் வெளியாகியிருக்கிறது. அதில்தான் தமிழ்நாட்டு ரயில்வே திட்டங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதுமே ரயில்வே பிங்க் புத்தகம் அவையில் வைக்கப்பட்டுவிடும். இதுகாலம் வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த இந்த நடைமுறையை இந்த பட்ஜெட்டில் ஏனோ பின்பற்றவில்லை. பட்ஜெட் கூட்டத் தொடர் முடித்த பிறகு பிங்க் புத்தகம் வெளியிட்டிருப்பதே இவர்களின் சதியை வெளிக்காட்டியிருக்கிறது.

பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்குச் செய்த துரோகத்தைத் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியது போல, புறக்கணிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களிலும் எதிர்ப்பார்கள் என அஞ்சியே, பிங்க் புத்தகத்தை வெளியிடாமல் பதுக்கி வைத்து, கூட்டத் தொடர் முடிந்த பிறகு வெளியிட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ஒன்றிய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்புகள் எல்லாம் வெறும் கலர் மத்தாப்புகள் என்பது அம்பலத்துக்கு வந்துவிடும் என அச்சப்பட்டிருப்பது அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது.

நாட்டின் 80 சதவிகித மக்களை மறந்துவிட்டு, பணக்காரர்களை மட்டுமே மனதில் வைத்து, ரயில்வே கொள்கை வகுத்து வருகிறது ஒன்றிய அரசு. ரயில்வே திட்டங்களில் ஏழைகளைக் கண்டுகொள்வதே இல்லை. மறைமுக கொள்ளையை மறைக்கவே, தனியாகத் தாக்கல் செய்யப்பட்டு வந்த ரயில்வே பட்ஜெட்டைப் பொது பட்ஜெட்டுடன் இணைத்தார்கள். பொது பட்ஜெட்டில் சேர்த்து, ரயில்வேயின் முக்கியத்துவத்தைக் குலைத்தது ஒன்றிய அரசு. ரயில் போக்குவரத்திடம் இருந்து ஏழைகள், நடுத்தர மக்களைத் தள்ளி வைத்து விட்டது ஒன்றிய அரசு. எட்டாக்கனியாக மாறிக் கொண்டிருக்கிறது ஏழைகளின் ரதம்.

ஆண்டுக்கு 10 சதவிகிதம் கட்டண உயர்வு, டைனமிக் கட்டணம் என்ற பெயரில் கொள்ளை, ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும் Cancellation கட்டணம் தொடர்ந்து உயர்வு, ஏழைகள் பயணிக்கவே முடியாத பகட்டான ரயில்களின் படங்களைக் காட்டி மக்களை ஏமாற்றியது, மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட கட்டணச் சலுகையைப் பறித்தது, ஏழைகள் பயணிக்கும் ரயில்களை நிறுத்திவிட்டு, விளம்பரத்திற்காக இயக்கப்படும் ரயில்களுக்கு முக்கியத்துவம், குளிர்சாதன (ஏசி) ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்து ஏழைகள் பயணிக்கும் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கை குறைப்பு என பத்தாண்டு பாஜக ஆட்சியில் மக்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டார்கள்.

இதன் தொடர்ச்சியாகத்தான் இன்றைக்குத் தமிழ்நாட்டைத் துச்சமெனத் தூக்கியெறிந்திருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ஒரு முகமும் தேர்தலுக்குப் பிறகு இன்னொரு முகமும் மத்திய அரசு காட்டியிருக்கிறது. தமிழ்நாடு – புதுச்சேரியின் 40/40 வெற்றியை திமுக கூட்டணி பெற்றதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலோடு நிதி ஒதுக்கீடுகளை எல்லாம் குறைத்திருக்கிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட்டின் பிங்க் புத்தகத்தில் தெற்கு ரயில்வேயின் புதிய வழித்தடங்களுக்கு 976 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்து. ஆனால், இப்போது வெளியான பிங்க் புத்தகத்தில் அந்தத் தொகையை 301 கோடி ரூபாயாகக் குறைத்துவிட்டார்கள். அதாவது மூன்றில் ஒரு பகுதியாக்கிவிட்டார்கள். இரட்டைப்பாதை திட்டங்களுக்குத் தேர்தலுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட 2,214 கோடி ரூபாய் இப்போது 1,928 கோடி ரூபாய் ஆக்கிவிட்டார்கள். புதிய வழித்தடங்கள், இரட்டைப் பாதைத் திட்டங்கள் என அனைத்திலும் தேர்தலுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட நிதி அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முக்கிய ரயில் திட்டங்களுக்கு வெறும் 1,000 ரூபாயை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சென்னை – மாமல்லபுரம்- கடலூர் கடற்கரைப் பாதைக்கு 25 கோடி ரூபாய் முன்பு ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய்தான் ஒதுக்கியிருக்கிறார்கள். ஸ்ரீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி – இருங்காட்டுக்கோட்டை -ஆவடி லைனுக்கு முன்பு 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடிக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்ததை வெறும் 18 கோடி ரூபாயாகக் குறைத்துவிட்டார்கள். இப்படிப் பல திட்டங்களுக்கு நிதி பெரும் அளவில் குறைத்திருக்கிறது மத்திய அரசு. புதிய ரயில்வே திட்டங்களை அறிவிப்பதற்கு பதிலாக ஏற்கெனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களின் நிதியைப் பெருமளவில் குறைத்தது இதுவரை ரயில்வே துறையில் நடக்காத ஒன்று.

புயலால் அழிந்து போன தனுஷ்கோடி ரயில் பாதையில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்குவதற்காக 2019 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் 2019 மார்ச் 1-ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அடுத்த பொதுத் தேர்தலும் நடந்து முடிந்துவிட்டது. ஆனால், திட்டம் இன்னும் வரவில்லை. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய ராமேஸ்வரம் – தனுஷ்கோடி திட்டத்துக்கு இடைக்கால பட்ஜெட்டில் ஒரு கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அதனையும் இப்போது 56 லட்சம் ரூபாயாகக் குறைத்துவிட்டார்கள். பிரதமர் அடிக்கல் நாட்டிய வெறும் 17 கிலோ மீட்டர் தூர இந்த ரயில் பாதையைக் கூட முடிக்காதவர்கள், எப்படி பெரும் ரயில்வே திட்டங்களை முடிப்பார்கள்?

தமிழ்நாட்டின் பரப்பளவு, மக்கள் தொகை, இருப்புப் பாதைகளின் நீளம், தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசுக்கு கிடைக்கும் நிதி ஆகியவற்றை மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால், தமிழ்நாட்டுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நிதிகூட கிடைக்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. தமிழ்நாட்டின் மொத்த இருப்பு பாதையின் நீளம் ம் 5,952 கிமீ அளவைவிடக் குறைவான இருப்புப் பாதைகள் கொண்ட மாநிலங்களுக்கு எல்லாம் நிதியை வாரி வழங்கிய ஒன்றிய அரசு, தமிழ்நாட்டை மதிக்கவே இல்லை.

இந்தியாவின் வரைபடத்தில்தான் தமிழ்நாடு இருக்கிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மக்களை இணைப்பது, இருப்புப் பாதைகள்தான். ஆனால், இதயமே இல்லாமல் தமிழ்நாட்டு ரயில் திட்டங்களுக்கு 1000 ரூபாயைப் பிச்சை போடுவது போலப் போட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு 1 ரூபாய் வரி கட்டினால், நமக்கு 29 பைசாதான் கொடுக்கிறார்கள். ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு 3 ரூபாய் கொடுக்கிறார்கள்.

கோடிகளில் ஒதுக்கப்படும் ரயில்வே திட்டங்களுக்கு லட்சங்களை அல்ல, வெறும் ஆயிரங்களை ஒதுக்கித் தமிழ்நாட்டை ஓரங்கட்டியிருக்கிறார்கள். நான்கு வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்த விழாவிற்குச் செய்த செலவு 5.6 கோடி ரூபாய் அளவுக்குக்கூட பெறத் தகுதியில்லாத மாநிலமா தமிழ்நாடு? சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தைத் தொடர்ந்து நான்காவதாக பெரம்பூரில் புதிய ரயில் முனையம் அமையப் போகிறது என சொன்னீர்களே. அவையெல்லாம் என்ன ஆகும் என்பது ஒன்றிய அரசுக்கே வெளிச்சம். கடந்த மூன்று ஆண்டுகளில் காத்திருப்புப் பட்டியலில் இருந்தவர்கள் டிக்கெட்டை கேன்சல் செய்ததன் மூலம் ரயில்வே துறைக்குக் கிடைத்த 1,229 கோடி ரூபாய் வருவாய் எல்லாம் எங்கே போனது?

ரயில்வே துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள பிபேக் தேப்ராய் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது மோடி அரசு. ‘அனைத்தையும் தனியாரிடம் கொடு’ என்ற தாரக மந்திரத்துடன் பல பரிந்துரைகளை அளித்தது பிபேக் தேப்ராய் குழு. அதன் பிறகுதான் ரயில்வேயைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான வேலைகள் வேகமெடுத்தன. தனியார் ரயில்களைக் கொண்டு வந்தார்கள். இந்தத் திட்டங்களை எல்லாம் செயல்படுத்தத்தானோ என்னவோ தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களை ஒரேயடியாக அழித்துவிட வேண்டும் எனத் திட்டமிட்டு இந்த நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள் என அஞ்ச வேண்டியிருக்கிறது.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டமான மெட்ரோ ரயில் திட்டங்களில் கூட தமிழ்நாட்டுக்கு நிதியை ஒதுக்காமல் வஞ்சித்தனர். 2-ஆம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு இதுவரை மத்திய அரசிடம் இருந்து எந்த நிதியும் ஒதுக்கவில்லை. இதுபற்றி மக்களவையில் தி.மு.க எழுப்பிய கேள்விக்கு, ’’சென்னை மெட்ரோ ரயிலின் 2-ஆம் கட்டப் பணிகள் தற்போதைக்கு மாநில அரசின் திட்டமாகவே செயல்படுத்தப்படுகிறது.

எனவே, அதற்கான செலவுகளைத் தமிழ்நாடு அரசே செய்கிறது” என்ற அதிர்ச்சி பதிலைத் தந்தார்கள். ரயில்வே திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கினார்கள். ஆனால், மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அதுகூட இல்லை என கையை விரித்துவிட்டார்கள். பாஜக கூட்டணிக்கு மக்களவைத் தேர்தலில் பூஜ்ஜியம் கொடுத்தற்காகத் தமிழ்நாட்டு மெட்ரோ ரயில் திட்டங்களுக்குப் பூஜ்ஜியம் அளித்திருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னை மெட்ரோவுக்கு ஒரு பைசாகூட வழங்காத மத்திய அரசு, பாஜக ஆளும் பல மாநில மெட்ரோ பணிகளுக்குக் கோடிகளைக் கொட்டிக் கொடுத்திருக்கிறது.

ஆட்சி அமைக்க வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் ஒரு அரசு செயல்படும். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களிக்காத பெண்களுக்கும் சேர்த்துதான் 1.15 கோடி மகளிருக்குக் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசு செயல்படுத்தி வருகிறது. அப்படித்தான் பாஜகவுக்கு எம்.பி-க்கள் தராத மாநிலங்களுக்கும் பாகுபாடு இல்லாமல் மத்திய நிதி அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை: 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு..!:

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணியளவில் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த மாதம் 15-ஆம் தேதி நடைபெறும் திமுக-வின் முப்பெரும் விழா குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் அமைப்பு ரீதியாக மாவட்டங்களை அதிகரித்து புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், கட்சி வளர்ச்சி குறித்தும், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கட்சியின் முப்பெரும் விழா குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘நாடாளுமன்ற தேர்தல் 2024 -40/40 திசையின் தீர்ப்பு’ என்ற நூல் வெளியிடப்பட்டது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி பெற்று கொண்டார். தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றியை தென் திசையின் தீர்ப்பு புத்தகம் ஆவணமாக பதிவு செய்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் 40 தொகுதியிலும் திமுக கூட்டணி எப்படி வெற்றியை சாத்தியமாக்கியது என்பது உள்ளிட்டவை புத்தகத்தில் இடம்பெற்றது.

பின்னர் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் 40 க்கு 40 வெற்றிக்கு உழைத்த நிர்வாகிகள், வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி. ⁠தொடர்ந்து 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம். சுணக்கமின்றி செயல்பட்டால் அடுத்த முறையும் திமுக ஆட்சிதான். ⁠200 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் இலக்கு. அந்தளவுக்கு நலத்திட்டங்களை மக்களுக்கு அளித்திருக்கிறோம். வாக்குகளாக மாற்ற களப்பணி அவசியம்.

ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை மாவட்ட செயலாளர்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். ⁠சில மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் வந்திருக்கின்றன. நிர்வாகிகள் குறித்தும புகார்கள் உள்ளன. அனைத்து புகார்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும்.. ⁠சார்பு அணிகளை மாவட்டச் செயலாளர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அனைத்து பூத் கமிட்டிகளையும் செம்மைப்படுத்த வேண்டும். ⁠கழகத்தின் அனைத்து அமைப்புகளிலும் செப்டம்பர் 15-க்கு முன்பாக பொது உறுப்பினர் கூட்டம் நடத்தப்பட வேண்டும். மினிட் புத்தகம் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். ⁠உங்கள் உழைப்பின் அடிப்படையிலேயே உயர்வு இருக்கும்.அரவனைத்துச் செல்பவரே மாவட்ட செயலாளர். வெற்றி பெறுபவரே வேட்பாளர்.

அமைச்சர்களும் கழகத்தின் அடிமட்டத் தொண்டர்களுக்கு உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டும்.⁠ முதலீட்டுகளை ஈர்க்க அமெரிக்காவில் இருந்தாலும் கழகத்தையும் அரசையும் கவனித்துக் கொண்டிருப்பேன். ⁠கலைஞர் 100 நாணயம் வெளியீட்டில் கலந்து கொள்ள வேண்டும். ⁠கழகத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க அர்ப்பணிப்போடு செயல்படுங்கள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

கடம்பூர் ராஜூ திட்டவட்டம்: `2026 சட்டமன்றத் தேர்தல்.. அதிமுக, திமுக-வா ? என்பதுதான் மையமாக இருக்கும்..!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் அ.தி.மு.க புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அதிமுக-வினருக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையினால் தான் தனி மெஜாரிட்டியுடன் மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக இன்றைக்கு கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி மற்றும் அனுபவத்தினால் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வர அண்ணாமலை முயற்சி செய்கிறார். ஆனால், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தெளிவாக தெரிவித்துவிட்டார். கூட்டணி பற்றி அண்ணாமலை பேச வேண்டிய அவசியம் இல்லை.

இருந்தபோதிலும் கொல்லைப்புறமாக அதிமுக கூட்டணிக்கு வர அண்ணாமலை முயற்சி செய்கிறார். மத்தியில் உள்ள பாஜக நிர்வாகிகள் அண்ணாமலையை கடிந்து கொள்வதால் கூட்டணி கருத்துக்களை கூறி வருகிறார். மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தபோது தமிழர் நலன் சார்ந்த திட்டங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதால்தான் அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது.

பாஜக எத்தனை முறை படை எடுத்தாலும் இங்கு வெற்றி பெறப் போவதில்லை. தமிழகத்தை பாஜக புறக்கணிக்கிறது என்ற எண்ணம் தமிழக மக்களிடம் உள்ளது. வரும் 2026 தேர்தலை பொறுத்தவரை அதிமுக அதிமுக, திமுக-வா ? எடப்பாடி பழனிசாமியா? ஸ்டாலினா? என்பதுதான் மையக்கருத்தாக இருக்கும். அதிமுக தனித்து நின்றாலும் மகத்தான வெற்றியைப் பெறுவோம். சட்டமன்ற தேர்தல் வரும்போது திமுக கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் அதிமுகவுடன் சேர வாய்ப்புள்ளது” என கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

பாஜக தலைவர் பதவியை கைப்பற்ற குஷ்பு ‘தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தாரா..!?’

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த குஷ்பு கடந்த 2010-ஆம் ஆண்டு காலகட்டத்தில் திமுக இணைந்து பணியாற்றினார். 2014- ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் 2020ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். மேலும் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இருப்பினும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான , தேசிய மகளிர், இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று திடீரென அறிவித்தார். அதற்கான கடிதத்தை துறை அதிகாரிக்கு அனுப்பியதாகவும், அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ராஜினாமா குறித்து குஷ்பு பேசுகையில், அரசியலில் 14 ஆண்டுகால சேவைக்குப் பிறகு, ஒரு இதயபூர்வமான மாற்றத்தை உணர்கிறேன். உயர்ந்த கட்சியாக விளங்கும் பாஜக வில் முழுமையாக செயல்படுவதற்காக தேசிய மகளிர் ஆணையத்திலிருந்து என் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். என்னுடைய விசுவாசமும், நம்பிக்கையும் எப்போதும் பாஜக உடன்தான் இருக்கும். தீவிர அரசியலில் ஈடுபட முடியாதபடி தேசிய மகளிர் ஆணையத்தில் அதற்கென சில கட்டுப்பாடுகள் இருந்தன.

அதனால், முன்னெப்போதும் இல்லாத உற்சாகத்துடன், நான் மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்துவிட்டேன். இப்போது நான் சுதந்திரமாக, முழுமனதுடன் சேவையாற்ற முடியும். சென்னை கமலாலயத்தில் நடக்க உள்ள கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். வதந்தி பரப்புபவர்கள் அமைதியாக இருக்கலாம். என்னுடைய இந்த மறுவருகை நேர்மையானது. கட்சி மீதும், மக்கள் மீதும் நான் கொண்ட அசைக்க முடியாத அன்பின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு என குஷ்பூ தெரிவித்தார்.

இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பில் சேர, வரும் 28- ஆம் தேதி லண்டன் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் லண்டன் செல்லும்பட்சத்தில் தமிழக பாஜக தலைவர் பதவி வேறொருவருக்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பதவியை கைப்பற்ற குஷ்பு முயற்சிப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

 

காமராஜர் தேசியக் கொடி இடத்தில் சுதந்திர தினம் கொண்டாடிய காங்கிரஸ் பிரமுகர்கள்..!

நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் இன்று பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையிலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புனித ஜார்ஜ் கோட்டையிலும் தேசிய கொடியேற்றி வைத்துச் சிறப்புரையாற்றினர்.

இந்நிலையில், மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் நள்ளிரவு 12 மணிக்கு அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் நுழைவு வாயில் அருகில் காங்கிரஸின் பகுதி தலைவர் ஜெ.வாசுதேசன் தலைமையில் சுதந்திர தின விழா நடைபெற்றது. மாவட்ட தலைவர் சிவ.ராஜசேகரன் பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இது தொடர்பாகச் சிவ.ராஜசேகரன் கூறுகையில், “நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் சத்தியமூர்த்தி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் நுழைவாயிலில் சுதந்திர கொடியை ஏற்றிய பிறகு தான் பொதுக்கூட்டங்களுக்கோ, போராட்டங்களுக்கோ செல்வார். நாடு சுதந்திரம் அடையும்போது அவர் உயிரோடு இல்லை. 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் பிறக்கும்போது, இளைஞர் காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட அந்த கொடிக் கம்பத்தில் அன்று நள்ளிரவில் 12 மணிக்குப் பெருந்தலைவர் காமராஜர் மூவர்ணக் கொடியை ஏற்றினார்.

அதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் பிறக்கும்போது, நள்ளிரவு 12 மணிக்கு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருப்பவர் தேசிய கொடியேற்றுவது வழக்கம். அவ்வாறு இன்று நான் கொடியேற்றி இருக்கிறேன். 8-வது முறையாக இங்கு நான் கொடியேற்றி இருப்பது எனக்குப் பெருமகிழ்ச்சியைத் தருகிறது” என சிவ.ராஜசேகரன் தெரிவித்தார்.

கடம்பூர் ராஜூ: கொல்லைப்புறமாக அதிமுக கூட்டணிக்கு வர அண்ணாமலை முயற்சி செய்கிறார்..!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் அதிமுக புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அதிமுக-வினருக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையினால் தான் தனி மெஜாரிட்டியுடன் மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக இன்றைக்கு கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி மற்றும் அனுபவத்தினால் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வர அண்ணாமலை முயற்சி செய்கிறார். ஆனால், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தெளிவாக தெரிவித்துவிட்டார். கூட்டணி பற்றி அண்ணாமலை பேச வேண்டிய அவசியம் இல்லை.

இருந்தபோதிலும் கொல்லைப்புறமாக அதிமுக கூட்டணிக்கு வர அண்ணாமலை முயற்சி செய்கிறார். மத்தியில் உள்ள பாஜக நிர்வாகிகள் அண்ணாமலையை கடிந்து கொள்வதால் கூட்டணி கருத்துக்களை கூறி வருகிறார். மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தபோது தமிழர் நலன் சார்ந்த திட்டங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதால்தான் அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது.

பாஜக எத்தனை முறை படை எடுத்தாலும் இங்கு வெற்றி பெறப் போவதில்லை. தமிழகத்தை பாஜக புறக்கணிக்கிறது என்ற எண்ணம் தமிழக மக்களிடம் உள்ளது. வரும் 2026 தேர்தலை பொறுத்தவரை அதிமுக அதிமுக, திமுக-வா ? எடப்பாடி பழனிசாமியா? ஸ்டாலினா? என்பதுதான் மையக்கருத்தாக இருக்கும். அதிமுக தனித்து நின்றாலும் மகத்தான வெற்றியைப் பெறுவோம். சட்டமன்ற தேர்தல் வரும்போது திமுக கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் அதிமுகவுடன் சேர வாய்ப்புள்ளது” என கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

அந்தரத்தில் தொங்கி..! வயநாட்டில் சிகிச்சையளித்த சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருது..!

நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று 15-ஆம் தேதி நாட்டு மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றியேற்றினார்.

முன்னதாக, காலை 8.45 மணிக்கு சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு கோட்டை கொத்தளத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முப்படை அதிகாரிகள், டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோரை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிமுகம் செய்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, சென்னை கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பிறகு, கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும் இடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து, தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, தமிழக மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். இதனை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் விதமாக விருதுகள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். அந்தவகையில், நர்ஸ் சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருதும், மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் விருதும் வழங்கினார் தமிழக முதல்வர். அந்தவகையில், தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த “தகைசால் தமிழர்” என்ற பெயரிலான விருது, ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான விருதுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இலக்கியவாதியுமான மூத்த தலைவர் குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கையால், இந்த விருதினை குமரி அனந்தன் பெற்றார்.

அதேபோல, கல்பனா சாவ்லா விருது, செவிலியர் சபீனாவுக்கு வழங்கப்பட்டது. வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு தமிழகத்தின் கூடலூரை சேர்ந்த செவிலியர் சபீனா, ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து சென்று சிகிச்சை அளித்தது குறித்த குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. செவிலியர் சபீனாவின் இந்த வீர செயலுக்காக அவருக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், செவிலியர் சபீனாவிற்கு கல்பனா சாவ்லா விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றினார்..!

நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று 15-ஆம் தேதி நாட்டு மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றியேற்றினார்.

முன்னதாக, காலை 8.45 மணிக்கு சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு கோட்டை கொத்தளத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முப்படை அதிகாரிகள், டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோரை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிமுகம் செய்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, சென்னை கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பிறகு, கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும் இடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து, தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.. இதையடுத்து, தமிழக மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார்.

மத்திய அரசு, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குமா..!? புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி மீண்டும் சட்டசபையில் மீண்டும் ஒருமனதாக தீர்மானம்..!

புதுச்சேரி யூனியன் பிரதேசமானது தமிழ்நாடு மாவட்டங்களைச் சூழ்ந்தது. வங்க கடல் பகுதியில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகியவையும் அரபிக் கடல் பகுதியில், மாஹேவும் உள்ளன. நாடு விடுதலைக்குப் பின்னர் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்டவை 1954-ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. இதன் பின்னர் மத்திய அரசின் கீழ் செயல்படும் யூனியன் பிரதேசங்களுள் ஒன்றாக புதுச்சேரியும் இடம் பெற்றது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடரில் சில நாட்களாக மாநில அந்தஸ்து தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பேசிய சட்டசபை சபாநாயகர் செல்வம், முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் புதுச்சேரி சட்டசபையில் 12 முறை மாநில அந்தஸ்து கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர், பிரதமர் அலுவலக அமைச்சராக இருந்தும் கூட மாநில அந்தஸ்தைப் பெற முடியவில்லை. புதுச்சேரியில் பாஜக- என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசும் 2023-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. ஆனாலும் மத்திய அரசு திருப்பித்தான் அனுப்பியது என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்திருந்தனர். மேலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க இந்தியா கூட்டணி எம்பிக்களும் குரல் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமியும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று புதுச்சேரி சட்டசபையில் மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம் தனிநபர் தீர்மானமாக தாக்கல் செய்யப்பட்டு பின்னர் அரசு தீர்மானமாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.