நாம் தமிழர் கட்சி நிர்வாகியால் மாணவி பலாத்காரம் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உத்தரவு..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிங்ஸ்லி கார்டன் மெட்ரிகுலேஷன் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல்துறை தலைவர் பவானீஸ்வரி தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, 15 நாட்களுக்குள் முழு விசாரணையையும் முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் முகாம் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் முருகானந்தம், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் ஜெய் முரளிதரன், சமூக பாதுகாப்பு ஆணையர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் கிங்ஸ்லி கார்டன் மெட்ரிகுலேஷன் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில், NCC திட்டத்திற்கு மாணவர்களை தயார்படுத்துவற்கான முகாம் பள்ளி நிர்வாகத்தால் நடத்தப்பட்டது. இந்த முகாமில், போலியான பயிற்றுநர்கள் கலந்துகொண்டு, அங்கு பயிலும் பள்ளி மாணவிகள் சிலரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட NCC பயிற்றுநர்கள் 6 பேரில் 5 பேரும், இந்த சம்பவத்தை காவல் துறைக்கு தெரிவிக்காமல் மறைத்த பள்ளியின் நிர்வாகத்தினர் 4 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், வழக்கின் முக்கிய எதிரி சிவராமனுக்கு அடைக்கலம் கொடுத்து காவல்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போலியான NCC பயிற்றுநர்கள் இதேபோன்று மேலும் சில பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், இத்தகைய பயிற்சி வகுப்புகளை மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது.

இந்த பள்ளிகள், கல்லூரிகளிலும் மேற்கூறிய பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவங்களை பற்றி முழுமையான விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் தக்க நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், காவல்துறை தலைவர் பவானீஸ்வரி தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அண்ணாமலை சூசகம்: பாஜகவின் ‘மாமன் – மச்சான்’ கூட்டணிக்கு நடிகர் விஜய் வந்தால் ஏற்போம்..!”

பல்லடம் அருள்புரத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் மக்கள் மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தின் கிளையை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று திறந்து வைத்து, மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து பல்லடம் அருகே நாதகவுண்டன்பாளையத்தில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.என்.எஸ்.பழனிச்சாமி நினைவு மண்டபத்துக்கு வந்து அண்ணாமலை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அத்திக்கடவு – அவிநாசி திட்டம் முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி வந்தோம். தற்போது அந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது விவசாயிகளுக்கான வெற்றி. பாஜக அணில் போல் வேலை செய்துள்ளோம். அத்திக்கடவு – அவிநாசி 2-வது திட்டத்தை துவங்க வேண்டும். ஆனைமலை நல்லாறு திட்டம் மற்றும் பாண்டியாறு புன்னம்புழா திட்டத்தையும் கொண்டுவர அரசு தீவிரம் காட்ட வேண்டும்.

பெருமாநல்லுரில் போராட்டத்தின் போது உயிர் நீத்த 3 விவசாயிகளுக்கு பாஜக சார்பில் மணி மண்டபம் கட்டுவோம். கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா மாநில அரசு நடத்திய விழா ஆகும். மத்திய அரசு சார்பில் அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்றார். கருணாநிதிக்கு கும்பிடு போடுவது தவறில்லை. ஒருவரது காலில் விழுவது தான் தவறு. முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆ.பி. உதயகுமார் சசிகலா முன்பு எவ்வாறு நிற்பார் என்பது அனைவருக்கும் தெரியும். பன்முகத் திறன் கொண்ட கருணாநிதியை கும்பிட்டதில் எந்த தவறும் இல்லை. திமுகவை எதிர்க்கிற ஒரே அரசியல் கட்சி பாஜக தான். அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும்போது அவருடன் கருணாநிதிக்கு செலுத்த வேண்டிய மரியாதையை செலுத்தவே நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.

ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையில் நான் தரகர் என பழனிசாமி கூறுகிறார். கள்ள உறவு என்று கொச்சையான வார்த்தையை தெரிவித்துள்ளார். ஒரு முதிர்ச்சியான அரசியல்வாதி போன்று, அவரது பேச்சு இல்லை. பாஜக கூட்டணி மாமன், மச்சான் கூட்டணியாக உள்ளது. இந்த கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதிமுக, திமுக பாஜக பங்காளிகள் தான். எந்த பங்காளியுடனும் சேரப்போவதில்லை. எங்கள் தலைமையில் மாமன் – மச்சான் கூட்டணி வேற்றுமையில் ஒற்றுமையாகும். நடிகர் விஜயும் மாமன் – மச்சான் தான். அவர் மாமன் – மச்சான் கூட்டணிக்கு வந்தால் ஏற்போம்,” என அண்ணாமலை பேசினார்.

கனிமொழி: ஒன்றுமே செய்யாத மத்திய அரசுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும்…!?

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 253 -வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் இருக்கும் முழு உருவ சிலைக்கு தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் மற்றும் திமுக துணைப்பொது செயலாளர் கனிமொழி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் தான் ஒண்டி வீரன் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. திமுக ஆட்சியில் அருந்ததிய சமுதாயத்திற்கான மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் சிலரால் வழக்கு தொடர்ந்த போதிலும் அந்த வழக்கில் மிகப்பெரிய வெற்றியை முதலமைச்சர் பெற்று கொடுத்துள்ளார். வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் உழைக்கக்கூடிய அரசாக செயல்படுகிறது. மத்திய அரசின் பட்ஜெட்டில், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ஒதுக்க கூடிய நிதி ஒதுக்கப்படவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியும் ஒதுக்கப்படவில்லை.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதி முதல்வரால் கேட்டும் அது கிடைக்கப்பெறவில்லை என எதுவும் கிடைக்காத நிலையில், தமிழ்நாட்டுக்கு ஒன்றுமே செய்யாத மத்திய அரசுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும்? பாஜக உடனான திமுகவின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை. மக்களிடம் பழகும் போது எளிமையாக அன்பாக பழகக் கூடியவர் முதலமைச்சர். அதே வேளையில் தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக போராடும்போது தலைவர் கலைஞரைப் போல் உறுதியாக இருப்பார் கனிமொழி பேசினார்.

UPSC lateral entry: நேரடி நியமன அறிவிப்பு விளம்பரத்தை ரத்து செய்து மத்திய அரசு..!

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி, மத்திய அரசு பணிகளில் நேரடி நியமன (Lateral entry) அறிவிப்பு விளம்பரத்தை ரத்து செய்யுமாறு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணைய (யுபிஎஸ்சி) தலைவருக்கு, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சர் ஜித்தேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கடந்த சனிக்கிழமை அன்று மத்திய அரசு, 10 இணை செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள் / துணைச் செயலாளர்கள் என 45 பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நேரடி நியமனம் (Lateral entry) மூலமாக நிரப்ப அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அரசுத் துறைகளில் சிறப்பு நிபுணர்களை (தனியார் நிறுவனங்களில் இருந்தும்) நியமிப்பதை இந்தத் திட்டம் நோக்கமாக கொண்டது. இந்த விளம்பரத்தை நிறுத்திவைக்குமாறு மத்திய அமைச்சர் தற்போது யுபிஎஸ்சி தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அமைச்சர் தனது கடிதத்தில், “கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட்ட பெரும்பாலான பதவிகள் தற்காலிகமானவையே. இவற்றில் அனுகூலமானவை என்று சொல்லப்படும் விஷயங்கள் உட்பட எங்கள் அரசின் முயற்சிகள் அனைத்தும் நிறுவனங்களின் தேவையின் அடிப்படையிலானது. வெளிப்படையானது.

நேரடி நியமன செயல்முறையானது அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள சமத்துவம், சமூக நீதி, அதிலும் குறிப்பாக இடஒதுக்கீடு விதிகளுடன் இணைக்கப்பட வேண்டும் என்று நமது பிரதமர் உறுதியாக நம்புகிறார். நேரடி நியமன முறை என்ற கருத்தாக்கம் இரண்டாவது ஏஆர்சி-யால் அஙகீகரிக்கப்பட்டது. பின்பு கடந்த 2013-ம் ஆண்டு ஆறாவது ஊதியக் குழுவால் ஆதரிக்கப்பட்டது. அதன் செயல்முறை வரலாற்று ரீதியில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை கொண்டிருக்கவில்லை.

பிரதமர் மோடியைப் பொறுத்தவரையில் அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு என்பது நமது சமூக அமைப்பில் ஒரு மூலக்கல் போன்றதாகும். அது வரலாற்று அநீதியை போக்குவதுடன் அனைவரையும் உள்ளடக்குவதை ஊக்குவிக்கிறது. சமூக நீதிக்கான அரசியலமைப்பு ஆணையை நிலைநிறுத்துவது மிகவும் முக்கியமானதாகும். இதனால் விளிம்பு நிலைச் சமூகங்களைச் சேர்ந்த தகுதிவாய்ந்த நபர்கள் அரசுப் பணிகளில் தங்களின் பிரதிநிதித்துவத்தைப் பெறுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியில் இருப்பவரும் மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வான் திங்கள்கிழமை, இட ஒதுக்கீடு நடைமுறைகளை பின்பற்றாமல் அரசு பணிகளில் நியமனம் மேற்கொள்வது குறித்து கவலை தெரிவித்த நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் மத்திய அரசின் இந்தத் திட்டம், தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், ஆதிவாசிகள் மீதான நேரடியான தாக்குதல் என்று சாடியிருந்தார்.

இதனிடையே, லேட்டரல் என்ட்ரி என்பது சமூக நீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நியாயமான, சமத்துவமான முறையில் பதவி உயர்வு வழங்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்திட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

அதேபோல், “மத்திய அரசின் உயர் பதவிகளில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை நேரடியாக நியமிக்கும் முறையில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படாது. அதனால், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு இந்த பதவிகள் கிடைக்காத நிலை ஏற்படும். அதுமட்டுமின்றி, ஏற்கனவே பல்வேறு நிலையிலான பணிகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்புகளும் பாதிக்கப்படும்.

சமூக நீதிக்கு எதிரான எந்த முடிவாக இருந்தாலும், அதை எந்த அரசு எடுத்திருந்தாலும் அதை ரத்து செய்வது தான் சமூக நீதி அரசுக்கு அழகாகும். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு சமூக நீதியில் அக்கறை இருந்தால், நேரடி நியமன முறையை கைவிட வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார்.

அரசுப் பணிகளில் நேரடி நியமன முறை என்பது, மத்திய அரசுப் பணிகளில் மத்திய மற்றும் மூத்த நிலையிலான சில பதவிகளுக்கு, இந்திய ஆட்சிப் பணி போன்ற பாரம்பரிய அரசுப் பணியாளர்களில் இருந்து இல்லாமல் வெளியில் இருந்து தனியாக ஆட்களைச் சேர்க்கும் முறையைக் குறிக்கும்.

அண்ணாமலை பதிலடி கருணாநிதிக்கு கும்பிடு போடுவது தவறில்லை..! ஒருவரது காலில் விழுவது தான் தவறு..!

பல்லடம் அருள்புரத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் மக்கள் மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தின் கிளையை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று திறந்து வைத்து, மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து பல்லடம் அருகே நாதகவுண்டன்பாளையத்தில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.என்.எஸ்.பழனிச்சாமி நினைவு மண்டபத்துக்கு வந்து அண்ணாமலை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அத்திக்கடவு – அவிநாசி திட்டம் முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி வந்தோம். தற்போது அந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது விவசாயிகளுக்கான வெற்றி. பாஜக அணில் போல் வேலை செய்துள்ளோம். அத்திக்கடவு – அவிநாசி 2-வது திட்டத்தை துவங்க வேண்டும். ஆனைமலை நல்லாறு திட்டம் மற்றும் பாண்டியாறு புன்னம்புழா திட்டத்தையும் கொண்டுவர அரசு தீவிரம் காட்ட வேண்டும்.

பெருமாநல்லுரில் போராட்டத்தின் போது உயிர் நீத்த 3 விவசாயிகளுக்கு பாஜக சார்பில் மணி மண்டபம் கட்டுவோம். கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா மாநில அரசு நடத்திய விழா ஆகும். மத்திய அரசு சார்பில் அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்றார். கருணாநிதிக்கு கும்பிடு போடுவது தவறில்லை. ஒருவரது காலில் விழுவது தான் தவறு. முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆ.பி. உதயகுமார் சசிகலா முன்பு எவ்வாறு நிற்பார் என்பது அனைவருக்கும் தெரியும். பன்முகத் திறன் கொண்ட கருணாநிதியை கும்பிட்டதில் எந்த தவறும் இல்லை. திமுகவை எதிர்க்கிற ஒரே அரசியல் கட்சி பாஜக தான். அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும்போது அவருடன் கருணாநிதிக்கு செலுத்த வேண்டிய மரியாதையை செலுத்தவே நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.

ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையில் நான் தரகர் என பழனிசாமி கூறுகிறார். கள்ள உறவு என்று கொச்சையான வார்த்தையை தெரிவித்துள்ளார். ஒரு முதிர்ச்சியான அரசியல்வாதி போன்று, அவரது பேச்சு இல்லை. பாஜக கூட்டணி மாமன், மச்சான் கூட்டணியாக உள்ளது. இந்த கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதிமுக, திமுக பாஜக பங்காளிகள் தான். எந்த பங்காளியுடனும் சேரப்போவதில்லை. எங்கள் தலைமையில் மாமன் – மச்சான் கூட்டணி வேற்றுமையில் ஒற்றுமையாகும். நடிகர் விஜயும் மாமன் – மச்சான் தான். அவர் மாமன் – மச்சான் கூட்டணிக்கு வந்தால் ஏற்போம்,” என அண்ணாமலை பேசினார்.

ஆர்.பி.உதயகுமார்: மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது..!

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கல்லுப்பட்டி ஒன்றியம் சார்பில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, கல்லுப்பட்டி, பேரையூர் ரோட்டிலுள்ள சிவன் கோயில் அருகே நடைபெற்றது. மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணிச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கி முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பேசுகையில், “இன்றைக்கு ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து சூழ்ந்து கொண்டிருக்கிறது. அதைக் காப்பாற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்து வருகிறார்.

முல்லைப் பெரியாறு அணை குறித்து ஒரு மத்திய அமைச்சர், “முல்லைப் பெரியாறு அணை உடைந்து விட்டால் கேரளா என்ன ஆகும்?” என்று கூறுகிறார். முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்று பாதுகாப்பு குழு வல்லுநர்கள் கூறியதை தொடர்ந்து உச்ச நீதிமன்றமும் கூட கூறியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை தென் மாவட்ட மக்களின் ஜீவாதார உரிமை. அப்படியிருந்தும் முல்லை பெரியாறு அணை குறித்து முதல்வர் வாய் திறக்காமல் மவுன சாமியாராக தான் உள்ளார். இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை?

இன்றைக்கு கருணாநிதிக்கு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளார்கள். அது குறித்து எங்களுக்கு வருத்தம் இல்லை. ஆனால், அந்த விழாவுக்கு மத்திய அமைச்சர், இணையமைச்சர், அண்ணாமலை வருகிறார்கள். இதுவரை பாஜக எதிர்ப்பாளராக தன்னை காட்டிக் கொண்ட திமுகவும், அதன் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் வெளிச்சம் போட்டு காட்டவிட்டது. என் அப்பாவுக்கு நாணயத்தை வெளியிட மத்திய அரசையும், அதன் அமைச்சர்களையும், பாஜகவினரை வாருங்கள், வாருங்கள் என்று அழைக்கிறார். ஆனால், இன்றைக்கு நிதி நிலை அறிக்கையில் தமிழகத்துக்கு போதுமான நிதி ஒதுக்காதபோது இப்படி அவரை மத்திய அரசை வலியுறுத்த வில்லை. கீழே இறங்கி சென்று உதவி கேட்கவில்லை.

ஆனால், அப்பாவின் நாணயம் வெளியிடும் விழாவுக்கு கீழே இறங்கி சென்று பாஜகவினர் அனைவரையும் வரவேற்கிறார். கேட்டால், திமுகவினர், மாற்று கட்சியினருக்கு, மாற்று கொள்கை கொண்டவர்களுக்கும் மரியாதை கொடுக்க தெரிந்தவர்கள் என்று காரணம் கூறுகிறார். அப்படியென்றால், நிதி ஆயோக்கை கூட்டத்தை ஏன் ஸ்டாலின் புறக்கணித்தார்? ஆனால், ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளார். ஏனென்றால் தனது தந்தை பெயரில் நாணயத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகத்தான் அந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளார். பாஜகவின் வாழ்நாள் அடிமையாக திமுக மாறிவிட்டது,” என ஆர்.பி.உதயகுமார் விமர்ச்சித்தார்.

அண்ணாமலை விமர்சனம்: அரசியல் முதிர்வில்லா எடப்பாடி பழனிசாமி ஒரு கிணற்று தவளை…!

கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பாக நடந்த கருத்தரங்கில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், இங்கு எதை செய்தாலும் அரசியலாக பார்க்கப்படுகிறது. 5 முறை முதல்வராக இருந்த தலைவருக்கு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நாங்கள் சிந்தாந்த ரீதியாக எதிரும்புதிருமாக தான் இருக்கிறோம். கலைஞர் நாணய வெளியீடு நிகழ்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது.

நாணய வெளியீடு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி அரசியலை கலப்பது வேதனை அளிக்கிறது. எம்.ஜி.ஆருக்கு உரிய மரியாதையை கூட்டணியில் இல்லாத போதும் பாஜக அரசு 2017-ல் செய்தது. அதே போல 2024-ல் கலைஞருக்கு மரியாதை கொடுத்துள்ளோம். கலைஞர் உடல் நலக்குறைவில் இருந்த போது மோடி அவரை டெல்லிக்கு அழைத்தார், அது அரசியலுக்கு அப்பாற்பட்டது. ராஜ்நாத் சிங் கலைஞருக்கு முழு மரியாதை செய்ய வேண்டும் என எண்ணி நினைவிடம் சென்றார்.

ஆட்சியில் இருக்கும் போது, மத்தியில் உறவு வைத்து தமிழகத்திற்கு நிதியயை பெற்று கொண்டு மாநில அரசு செய்ததாக எடப்பாடி காட்டி கொண்டார். ஜெயலலிதாவிற்கு விழா எடுக்க வேண்டும் என்றால் முதல் ஆளாக பாஜக இருக்கும். டீ பார்ட்டிக்கு சென்றால்தான், நாணய வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வருவார் என கூறுவது அரசியல் புரிதலில் எடப்பாடி பழனிசாமி கிணற்று தவளையாக உள்ளதை காட்டுகிறது. இன்னும் நிறைய அரசியல் முதிர்வை எடப்பாடியிடம் எதிர்பார்க்கிறோம் என அண்ணாமலை பேசினார்.

ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்: “பாஜகவின் வாழ்நாள் அடிமையாக திமுக மாறிவிட்டது…! ”

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கல்லுப்பட்டி ஒன்றியம் சார்பில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, கல்லுப்பட்டி, பேரையூர் ரோட்டிலுள்ள சிவன் கோயில் அருகே நடைபெற்றது. மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணிச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கி முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பேசுகையில், “இன்றைக்கு ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து சூழ்ந்து கொண்டிருக்கிறது. அதைக் காப்பாற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்து வருகிறார்.

முல்லைப் பெரியாறு அணை குறித்து ஒரு மத்திய அமைச்சர், “முல்லைப் பெரியாறு அணை உடைந்து விட்டால் கேரளா என்ன ஆகும்?” என்று கூறுகிறார். முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்று பாதுகாப்பு குழு வல்லுநர்கள் கூறியதை தொடர்ந்து உச்ச நீதிமன்றமும் கூட கூறியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை தென் மாவட்ட மக்களின் ஜீவாதார உரிமை. அப்படியிருந்தும் முல்லை பெரியாறு அணை குறித்து முதல்வர் வாய் திறக்காமல் மவுன சாமியாராக தான் உள்ளார். இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை?

இன்றைக்கு கருணாநிதிக்கு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளார்கள். அது குறித்து எங்களுக்கு வருத்தம் இல்லை. ஆனால், அந்த விழாவுக்கு மத்திய அமைச்சர், இணையமைச்சர், அண்ணாமலை வருகிறார்கள். இதுவரை பாஜக எதிர்ப்பாளராக தன்னை காட்டிக் கொண்ட திமுகவும், அதன் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் வெளிச்சம் போட்டு காட்டவிட்டது. என் அப்பாவுக்கு நாணயத்தை வெளியிட மத்திய அரசையும், அதன் அமைச்சர்களையும், பாஜகவினரை வாருங்கள், வாருங்கள் என்று அழைக்கிறார். ஆனால், இன்றைக்கு நிதி நிலை அறிக்கையில் தமிழகத்துக்கு போதுமான நிதி ஒதுக்காதபோது இப்படி அவரை மத்திய அரசை வலியுறுத்த வில்லை. கீழே இறங்கி சென்று உதவி கேட்கவில்லை.

ஆனால், அப்பாவின் நாணயம் வெளியிடும் விழாவுக்கு கீழே இறங்கி சென்று பாஜகவினர் அனைவரையும் வரவேற்கிறார். கேட்டால், திமுகவினர், மாற்று கட்சியினருக்கு, மாற்று கொள்கை கொண்டவர்களுக்கும் மரியாதை கொடுக்க தெரிந்தவர்கள் என்று காரணம் கூறுகிறார். அப்படியென்றால், நிதி ஆயோக்கை கூட்டத்தை ஏன் ஸ்டாலின் புறக்கணித்தார்? ஆனால், ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளார். ஏனென்றால் தனது தந்தை பெயரில் நாணயத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகத்தான் அந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளார். பாஜகவின் வாழ்நாள் அடிமையாக திமுக மாறிவிட்டது,” என ஆர்.பி.உதயகுமார் விமர்ச்சித்தார்.

அதிமுக போல பாஜகவுடன் கள்ளக் கூட்டணி வைக்கும் அவசியம் திமுகவுக்கு இல்லை..!

முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருணாநிதி நூற்றாண்டை குறிக்கும் விதமாக 100 ரூபாய் நினைவு நாணயத்தில் தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் போதித்த கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார். அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

கருணாநிதி உருவம் பொறித்த நாணயத்தில் இந்தி எழுத்து ஏன் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கேட்பதால் அவருக்கு என்ன ஆச்சு என்ற கவலை மேலும் அதிகரிக்கிறது. இந்தியாவில் உள்ள நாணயங்கள் எதுவாக இருந்தாலும் அதில் ஆங்கிலமும் இந்தியும் இருப்பது வழக்கம். அ.திமு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நாணயம் வெளியிடப்பட்டிருப்பதையும் அதிலும் இந்தி எழுத்துகள் இருப்பதையும் கூடவா எடப்பாடி பழனிசாமி அறியவில்லை?

கருணாநிதிக்காக வெளியிடப்பட்டுள்ள நாணயத்தில்தான் ‘தமிழ் வெல்லும்’ என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது. இதைக்கூட உணராமல் எடப்பாடி பழனிசாமி உளறியிருப்பதால் அவரை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பதில்லை எனப் புரியவில்லை.

எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் கருணாநிதிக்கு நிறுவப்பட்ட சிலையை, பாஜக தலைவராக ஒரு காலத்தில் இருந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்ததை இப்போது விமர்சிக்கிற எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்ட கருணாநிதி சிலையைத் திறந்து வைத்தது காங்கிரஸ் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்திதான் என்பதையாவது அறிவாரா?

உறவுக்கு கை கொடுப்போம்-உரிமைக்கு குரல் கொடுபபோம் என்பதே கருணாநிதி எங்களுக்கு கற்றுத் தந்திருக்கும் அரசியல் இலக்கணம். அந்த வகையில்தான் மத்திய அரசின் நாணயம் வெளியீட்டு விழாவும், ஆளுநரின் தேநீர் விருந்தும் நடைபெற்றது. திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தமிழ்நாட்டிற்குரிய நிதியை வழங்காமலும்-தமிழ்நாட்டிற்கானத் திட்டங்களை செயல்படுத்தாமலும் வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஒருமுறையாவது படித்துப் பார்க்கட்டும்.

ஆதரித்தாலும் எதிர்த்தாலும் அதில் உறுதியாக இருக்கின்ற இயக்கம் திமு கழகம் என்பதை இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையாரே கருணாநிதியின் தலைமைப் பண்பு குறித்து பாராட்டியிருக்கிறார். அதே தலைமைப் பண்பையும் பக்குவமான அணுகுமுறையையும் இன்றைய கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிறைந்திருக்கிறது.

அதிமுகவைப் போல பாஜகவுடன் கள்ளக்கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. பாஜகவை எப்படியாவது தமிழ்நாட்டில் வளரச் செய்ய வேண்டும் என்று சொந்தக் கட்சியான அதிமுகவையே அழித்துக் கொண்டிருக்கிறார் என்று அவரது கட்சித் தொண்டர்களே குமுறுகின்ற நிலையை மறைப்பதற்கு, திமுக மீது பழி போட்டுத் திசை திருப்ப நினைக்கும் எடப்பாடி பழனிசாமியின் நாடகத்தை பொதுமக்கள் நம்பமாட்டார்கள்.

அத்திக்கடவு- அவினாசி திட்டம்: அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்பது மேற்கு மாவட்ட மக்களின் நெடுங்கனவு. அதனை 1972 -ஆம் ஆண்டில் முதன் முதலில் செயல்படுத்த கருணாநிதி முனைந்தவர். அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும், ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சி அமைந்தபோது மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளையும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் அந்தத் திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதை மேற்கு மாவட்ட மக்கள் அறிவார்கள்.

அதனால் தான் மேற்கு மாவட்ட மக்களும், விவசாயிகளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் தலைமையிலான அரசுதான் உறுதியான நடவடிக்கைகள் மூலம் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியுள்ளது. கருணாநிதியை மத்திய அரசே கொண்டாடுவதையும், மேற்கு மாவட்ட மக்களின் நெடுங்காலக் கனவை திராவிட மாடல் அரசு நிறைவேற்றியிருப்பதையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் ‘காந்தாரி’ போலக் கதறுகிறார் எடப்பாடி பழனிசாமி. பதற்றத்தில் அவர் பேசுவதெல்லாம் பிதற்றலாக உள்ளது என ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவல் அரணாக இருந்த தலைவர் கருணாநிதி..!

முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நூறு ரூபாய் நினைவு நாணயம் வெளியிடப்படுகிறது. இந்த நாணையத்தை கருணாநிதியின் பிறந்த நாளான கடந்த ஜுன் 3-ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் போனது.

நாணயத்திற்கான நடைமுறைகள் முடிந்த நிலையில், நாணய வெளியீட்டு விழாவை இன்று நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் இன்று நடக்கிறது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருணாநிதி நூற்றாண்டை குறிக்கும் விதமாக 100 ரூபாய் நினைவு நாணயத்தில் தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் போதித்த கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார். அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில் பெருந்தன்மையோடு கலந்து கொண்டுள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிகாரிகள், விழாவில் பங்கேற்றுள்ள அனைவரையும் வரவேற்பதாகக் கூறினார். நாணய வெளியீட்டுக்காக ஒத்துழைத்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். இந்த விழாவுக்கு திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் முன்னிலை வகித்து வரவேற்பு உரையாற்றினார்.

தொடர்ந்து முதலமைச்சர் விழாவில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், “அனைத்துக் கட்சியினருடனும் நட்பு பாராட்டும் ராஜ்நாத் சிங் கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிட பொருத்தமானவர். சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை கருணாநிதி பெற்றுத் தந்தவர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை இந்தியாவே கொண்டாடுகிறது. மாநில உரிமைகளுக்காகப் போராடிய கருணாநிதி நெருக்கடி நேரங்களில் நாட்டுக்கு கைகொடுத்தார். தமிழகத்தில் நடப்பது ஒரு கட்சி சார்ந்த அரசல்ல; இங்கே ஓர் இனத்தில் அரசு நடக்கிறது.” போன்ற கருத்துகளை முன்வைத்தார்.

என்னுடைய உணர்வுகளை எப்படி விவரிப்பது என்று சொல்ல முடியாத மகிழ்ச்சியில் நான் இப்போது இருக்கிறேன். நம்மை எல்லாம் ஆளாக்கிய தலைவரைச் சிறப்புச் செய்யும் வகையில் நாணயம் வெளியிடப்படுகிறது. ‘நா-நயம்’மிக்க தலைவரான கலைஞருக்கு, நாணயம் வெளியிடப்படுவது மிக மிகப் பொருத்தமானது.

நூற்றாண்டு விழா நாயகருக்கு 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது. இதுவரை நாம் கொண்டாடினோம், இதோ இந்தியாவே கொண்டாடுகிறது என்பதன் அடையாளம் தான் இந்த விழா. இதுபோன்ற எத்தனையோ சிறப்புகளுக்குத் தகுதியானவர் தான் நம்முடைய தலைவர். உலகம் இன்று ஒப்புக் கொண்ட உண்மை!

தமிழ்நாடு சட்டமன்றத்தில், தலைவரின் திருவுருவப் படத்தை, அன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள திருவுருவச் சிலையை, அன்றைய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைத்தார். அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்ட திருவுருவச் சிலையை அன்னை சோனியா காந்தி திறந்து வைத்தார்.முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்பட்ட திருவுருவச் சிலையை, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்.

இன்று தமிழினத் தலைவர் கலைஞர் கருணாநிதியின் நாணயத்தை, நமது நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட வருகை தந்துள்ளார். இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவல் அரணாக இருந்த தலைவர் கருணாநிதியின் உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட, இந்திய நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் வந்திருப்பது மிக மிகப் பொருத்தமானதுதான். எண்பது ஆண்டு காலம் பொது வாழ்க்கையில் இயங்கி, அதில் அரை நூற்றாண்டு காலம், தமிழ்நாட்டின் திசையைத் தீர்மானித்த தலைவர் கருணாநிதிக்கு, இந்தியாவே வருகை தந்து சிறப்பித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

கடந்த ஓராண்டு காலமாக கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, அவரது சாதனைகளைச் சொல்லும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினோம். தலைவர் கலைஞரைப் போற்றும் விதமாகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினோம். அவற்றில் முத்தாய்ப்பான சிலவற்றை மட்டும் சொல்ல வேண்டுமென்றால், கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், 1 கோடியே 15 லட்சம் மகளிர் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை பெறும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’, கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம். இந்தப் பெருமைக்கெல்லாம் மகுடமாக, இன்று கலைஞர் உருவம் தாங்கிய நாணயம் வெளியிடப்படுகிறது.

தலைவர் கருணாநிதியை கவுரவிக்கும் வகையில் 100 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது அவருக்கு செலுத்தப்பட்டுள்ள மரியாதையாக அமைந்துள்ளது. அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாணய வெளியீட்டு விழாவில் பங்கேற்று, அதனை வெளியிட்ட பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு நன்றி.

இயற்பியல் பேராசிரியராக தனது தொழில் வாழ்க்கையை ராஜ்நாத் தொடங்கினார். அதன் பின்னர் அரசியலில் ஆர்வம் கொண்டு, கடுமையாக உழைப்பு எம்எல்ஏ, மாநில அமைச்சர், உத்தரப் பிரதேச முதல்வர், இப்போது பாதுகாப்பு துறை அமைச்சர் என படிப்படியாக வளர்ச்சி கண்டவர். இந்த நிகழ்வில் பங்கேற்க நான் அழைக்க விரும்பியவர்களில் அவர் ஃபர்ஸ்ட் சாய்ஸாக இருந்தார். அரசியல் களத்தில் கருத்தியல் ரீதியாக வேறுபட்டு இருந்தாலும் பல்வேறு தரப்பினருடன் நேர்மறை ரீதியாக உறவு பாராட்டுபவர் அவர்.

இன்றைக்கு நாம் பார்க்கும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி, தலைவர் கருணாநிதிதான். அவர் உருவாக்கிய கட்டமைப்புகளைப் பட்டியலிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு நாள் போதாது. அவரது சாதனைகளைச் சொல்ல, இதோ நாம் இந்த விழாவை நடத்திக் கொண்டிருக்கிறோமே, இந்த கலைவாணர் அரங்கத்தில் இருந்தே தொடங்கலாம்.

பாலர் அரங்கமாக இருந்த இதனை, மிகப் பெரியதாகக் கட்டி எழுப்பி, ‘கலைவாணர் அரங்கம்’ என்று மாற்றினார். தாய்மொழியாம் தமிழ்மொழிக்குச் ‘செம்மொழி’ தகுதியைப் பெற்றுத் தந்தார். மெட்ராசை ‘சென்னை’ ஆக்கினார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் போன்ற எண்ணற்ற திட்டங்களை உருவாக்கினார். 44 அணைக்கட்டுகள், ஏராளமான கல்லூரிகள் – பல்கலைக் கழகங்கள், சென்னையைச் சுற்றி மட்டும் அண்ணா சாலை, அண்ணா மேம்பாலம், வள்ளுவர் கோட்டம், கத்திபாரா பாலம், கோயம்பேடு பாலம், செம்மொழிப் பூங்கா, டைடல் பார்க், தலைமைச் செயலகமாக கட்டப்பட்டு, இன்று பெரிய அரசு மருத்துவமனையாக இருக்கும் ஓமந்தூரார் மருத்துவமனை, மெட்ரோ ரயில், அடையாறு ஐ.டி. காரிடார், நாமக்கல் கவிஞர் மாளிகை என அனைத்தும் கலைஞரால் உருவாக்கப்பட்டவை. இதனை யாராலும் மறைக்க முடியாது.

கடந்த 15-ஆம் நாளன்று இந்திய நாட்டின் 78-ஆவது விடுதலை நாளைக் நாம் கொண்டாடினோம். அன்று நான் மட்டுமல்ல, நாட்டிலுள்ள அத்தனை மாநில முதலமைச்சர்களும் கொடியேற்றினார்களே, அதற்கான உரிமையைப் பெற்றுத் தந்தவரும் முதலமைச்சர் கருணாநிதிதான்! ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் சொன்னாரே… “முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு / இறை என்று வைக்கப்படும்” என்று. அப்படி ஆட்சி நடத்தியவர் கலைஞர். அதனால்தான் இன்று அகில இந்தியாவும் போற்றும் தலைவராக கலைஞர் உயர்ந்து நிற்கிறார்.

1971-ஆம் ஆண்டு இந்தியாவைப் பாகிஸ்தான் அச்சுறுத்தியபோது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாகிஸ்தான் படையெடுப்பு கண்டனத் தீர்மானம், 1972-ஆம் ஆண்டு பாகிஸ்தான் போரின்போது அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் நாட்டுப் பாதுகாப்புக்காக ஆறு கோடி ரூபாய் நிதி, போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதி மற்றும் நிலம், 1999-ஆம் ஆண்டு கார்கில் போரின் போது இந்தியாவிலேயே அதிகத் தொகையை, அன்றைய பிரதமர் வாஜ்பாயியிடம் மூன்று தவணைகளாக மொத்தம் 50 கோடி ரூபாய் வழங்கியவர் தலைவர்.

மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்த அதேவேளையில், நாட்டின் பாதுகாப்பு என்று வருகிறபோது கை கொடுத்தவர்தான் கருணாநிதி. நாணயம் என்பதற்கு இன்னொரு பொருளும் இருக்கிறது. கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்குப் பெயரும் நாணயம்தான்! “சொன்னதைச் செய்வோம் – செய்வதைத்தான் சொல்வோம்” என்று சொல்லி, சொன்னதையெல்லாம் செய்து காட்டியது, தலைவரின் நாணயத்துக்கு அடையாளம்! அவரது வழியில் இன்றைய திராவிட மாடல் அரசு – கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி கலைஞர் அரசாகச் செயல்பட்டு வருகிறது.

“சட்டசபையை அதிகார அமைப்பாக இல்லாமல் சமூகத்திற்கு நன்மை செய்யும் அமைப்பாகக் கருதவேண்டும்” என்றார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். அப்படித்தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இது, எனது அரசல்ல; நமது அரசு! ஒரு கட்சியின் அரசல்ல; ஒரு இனத்தின் அரசு! திராவிடக் கருத்தியல் கொண்ட அரசு! இதனை என்னுள் ஏற்படுத்தியவர் தலைவர் கருணாநிதி. அந்த வகையில் கலைஞரே இயக்கிக் கொண்டிருக்கிறார்.

“ஒரு மனிதனின் வாழ்க்கை அவனது மரணத்திற்கு பிறகு கணக்கிடப்பட வேண்டும்” என்று சொன்னவர் தலைவர் கருணாநிதி. இன்றைக்கு அவரது முகம் தாங்கிய நாணயத்தில் ‘தமிழ் வெல்லும்’ என்ற சொல்லும் இடம் பெற்றுவிட்டது என்றால், இதுவும் கலைஞரின் சாதனைதான்! தனது சாதனைப் பெருவாழ்வால் தமிழினத்தின் நெஞ்சத்தில் நிறைந்துவிட்ட தலைவர் கருணாநிதி புகழ் வாழ்க” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.