Rahul gandhi: நாட்டில் ஊழல் பள்ளியை நடத்தி வரும் நரேந்திர மோடி..!”

ஊழலை ஒழிக்கப்போவதாக கூறி ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஊழலின் புற்றாகவே கடந்த 10 ஆண்டுகாள ஆட்சியை நடத்தி வந்துள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி ஊழலை ஒழிக்கும் என மேடைக்கு மேடை மோடி முழங்குகி வருகிறார். இந்நிலையில் நாட்டில் ஊழல் பள்ளியை நரேந்திர மோடி நடத்தி வருகிறார் என்று காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில் “முழுமையான ஊழல் அறிவியல் பாடத்தின் கீழ், நிதி வர்த்தகம் குறித்து பாஜக தலைவர்களுக்கு பிரதமர் மோடி வகுப்பு எடுக்கிறார். சோதனைகளை நடத்தி எப்படி நன்கொடைகளை வசூலிப்பது? நன்கொடைகளை பெற்ற பிறகு ஒப்பந்தங்களை எப்படி வழங்குவது?. ஊழல்வாதிகளை வாஷிங் மெஷின் மூலம் எப்படி சலவை செய்வது? விசாரணை அமைப்புகளை, மீட்பு முகவர்களாக்கி, சிறையில் தள்ளுதல் மற்றும் ஜாமீன் வழங்குதல் விளையாட்டுகளை எப்படி விளையாடுவது?

உள்ளிட்ட பாடங்களை பிரதமர் மோடி கற்பித்து வருகிறார். ஊழல் பாடம் பாஜக தலைவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஊழலின் குகையாக பாஜக மாறியுள்ளது. பாஜகவின் ஊழலுக்கு நாடு விலை கொடுக்கிறது. மோடியின் ஊழல் பள்ளியையும் ஊழல் பாடத்தையும், இந்தியா கூட்டணியின் அரசு மூடிவிடும்” என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi: “செல்வந்த தொழிலதிபர்களின் கருவியாக மோடி இருக்கிறார்..! ”

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 26-ஆம் தேதி தேர்தல் நடைபெறயுள்ளது.

இந்நிலையில் கேரள மாநிலம், கோழிக்கோட்டில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “நாட்டில் உள்ள உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதும், இந்தியாவில் உள்ள பணக்கார தொழிலதிபர்களை பாதுகாப்பதும், அவர்களின் வங்கிக் கடன்களை ரத்து செய்வதும்தான் பிரதமர் மோடியின் வேலை.

இந்தியாவின் மிகப் பெரிய, பணக்கார தொழிலதிபர்களின் கருவியாக பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். அதாவது, இந்தியாவின் மிகப் பெரிய 5 அல்லது 6 முதலாளிகளின் கருவியாக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களை திசைதிருப்புவதே அவரின் இலக்காக உள்ளது.

நாட்டில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை பற்றி பிரதமர் மோடி பேசுவதில்லை. தேர்தல் பத்திரங்கள் என்பது பிரதமர் மோடியின் ஒருவித மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கைதான்.

சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை போன்ற மத்திய அமைப்புகள் சில குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன. பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் அரசியல் சட்டத்தை அழிக்கவும், மாற்றவும் முயற்சிக்கின்றன. நாட்டை ஆட்சி புரிவதற்கான புரிதல் பிரதமர் மோடியிடம் இல்லை” என்றார் ராகுல் காந்தி.

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளைச் சுட்டிகாட்டி மக்கள் மத்தியில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.

மனோ தங்கராஜ்: “நிர்மலா சீதாராமன் கணவனின் கேள்விகளுக்காவது பதில் அளிப்பாரா..!?”

“மத்திய நிதி அமைச்சரின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர், சென்ற வருடம் The Crooked Timber of New India என்ற நூலை வெளியிட்டு பாஜக 9 ஆண்டுகளில் எப்படி நாட்டை நாசகுப்பையாக்கியது என்பதற்கு துறைவாரியாக புள்ளிவிவரங்களோடு பட்டியலிட்டு பாஜகவின் போலி தேசப்பற்றை தோலுரித்தார். இன்று வரை அந்த தரவுகளுக்கோ குற்றச்சாட்டுகளுக்கோ எந்த மறுப்பும் பாஜகவிடம் இருந்து வெளிவரவில்லை.

தற்போது, அவர் பல நேர்காணல்களில் “மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் தேர்தல் என்பதே இருக்காது” என்று கடுமையாக எச்சரித்து வருகிறார். இதற்கு நிர்மலா சீதாராமன் அவர்கள் பதிலளிக்காமல் இருப்பது, தனது கணவருக்கு ஏன் பதிலளிக்கவேண்டும் என்ற இறுமாப்பு காரணமெனில், குறைந்தபட்சம் ஒரு இந்திய குடிமகன், ஒரு பொருளாதார நிபுணர் என்ற அடிப்படையிலாவது பதில் அளிக்கலாமே! ஏன் வாய்திறக்கவில்லை?”

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே மக்கள் விரோத செயல்களை செய்து வருகிறது. மேலும் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து வருகிறது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி நடவடிக்கையால் சிறு, குறு தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்ப்பரேட்களுக்கு நல்லது செய்வதாக கூறி, சாதாரண மக்களையும் பாஜக அரசு தண்டித்து வருகிறது.

“அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல லட்ச கோடிக்கணக்கான கடன்களை தள்ளுபடி செய்துள்ளனர். இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்வதற்காக மக்களை பலி கடாவாக மாற்றி, பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்டவற்றிற்கான விலையை ஏற்றியுள்ளது பாஜக அரசு. இந்த மக்கள் விரோத அரசுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பாஜகவின் வண்டவாளத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

பாஜக அரசு அமைந்த பிறகு பொருளாதார ரீதியாக நாடு எவ்வளவு மோசமாகியுள்ளது என்பதை புத்தக வாயிலாகவும் உலகறிய செய்துள்ளார். இந்நிலையில், இதனை குறிப்பிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் நிர்மலா சீதாராமனுக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.

Rahul Gandhi: பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் எந்த திட்டமும் மக்களுக்கான திட்டம் இல்லை…!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகக் காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல்காந்தி மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி வருகை புரிந்தார் தொழிலாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

பின்னர் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து கூடலூரில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ” நான் தமிழ்நாட்டிற்கு வருவதும், தமிழ்நாட்டு மக்களை சந்திப்பதும் மகிழ்ச்சியாக உள்ளது. நாம் மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். மத்திய பா.ஜ.க அரசை எதிர்த்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய பிரதமர் ஒரு நாடு, ஒரு தலைவர், ஒரு மொழி என்று தவறாக இந்த நாட்டை வழிநடத்தப் பார்க்கிறார்.

இந்த நாட்டில் பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு உணர்வுகளைக் கொண்ட மக்கள் வாழும் நாடு என்பதை மறந்துவிட்டு அவர்கள் செயல்படுகிறார்கள். எந்த மொழியும் எந்த ஆதிகத்தையும் செலுத்துவதை நாம் அனுமதிக்க மாட்டோம். அதை நான் அனுமதிக்க மாட்டேன். நமது பாரத பிரதமர் நமது நாட்டின் பன்முக தன்மையை மதிக்க மறுக்கிறார்.

நமது நாடு ஒரு மொழி ஒரு நாடு என்பது அல்ல பல்வேறு மொழி பல்வேறு மக்களை உள்ளடக்கிய நாடு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் பல்வேறு மொழி பல்வேறு இனம் ஆகியவற்றைக் கொண்டு வாழ்ந்து வருகிறோம். பல்வேறு ஒற்றுமைகளுடன் வாழ்வதுதான் நமது இந்திய நாடு.

பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கும் எந்த திட்டமும் மக்களுக்கான திட்டம் இல்லை. பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை குறித்து பா.ஜ.க அறிக்கையில் இடம் பெறவில்லை. ஆனால் காங்கிரஸ் அறிக்கையில் இந்தியாவில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கு ஆண்டிற்குப் பயிற்சிக் கட்டணமாக ஒரு லட்ச ரூபாய் தருகிறோம் எனவும், அக்னிவீர் திட்டம் தவறான திட்டம். அதை மாற்றி அமைக்கப் போகிறோம்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi: அரசியல் தளங்களில் இருந்து பொய்களை அள்ளி வீசுவதன்மூலம் வரலாற்றை மாற்ற முடியாது…!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ளன. பாஜக இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடாத நிலையில், பெண்கள், இளைஞர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், விவசாயிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ன. அதன் 25 முக்கிய அம்சங்களுடன் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் சிந்தனையை பிரதிபலிக்கிறது என்றும், காங்கிரஸ் தலைவர்களின் பேச்சு தேசிய ஒருமைப்பாடு மற்றும் சனாதன தர்மத்துக்கு எதிரானதாக உள்ளது என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டி இருந்த நிலையில், அதற்கு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிலடிகொடுத்துள்ளார்.

இதையடுத்து, பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகாரளித்தது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், “வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் இரு கொள்கைகளுக்கு இடையேயான யுத்தம். ஒரு பக்கத்தில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. மற்றொரு பக்கத்தில் எப்போதும் மக்களை பிளவுபடுத்த நினைக்கும் பாஜக இருக்கிறது.

நாட்டை பிளவுபடுத்தும் சக்தியின் பக்கம் நின்றவர்கள் யார்? மக்களின் ஒற்றுமை, சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்கள் யார் என்பது வரலாற்றில் பதிவு செய்யப்படும். ஆங்கிலேயர் காலத்தில் ஒத்துழையாமை இயக்கத்தில் சிறை சென்றவர்களுக்கு ஆதரவாக நின்றவர்கள் யார்? அரசுக்கு ஆதரவாக நடந்துகொண்டவர்கள் யார் என்பதும் நமக்கு தெரியும். அரசியல் தளங்களில் இருந்து பொய்களை அள்ளி வீசுவதன்மூலம் வரலாற்றை மாற்ற முடியாது” என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

மல்லிகார்ச்சுன் கார்கே: “மோடி அரசின் தோல்விகளை சுட்டிக்காட்டவே கருப்பு அறிக்கை ..!”

பாஜக தலைமையிலான மத்திய அரசின் வெள்ளை அறிக்கைக்கு எதிராக பிரதமர் மோடி அரசின் 10 ஆண்டு கால ஆட்சி குறித்து காங்கிரஸ் கட்சி கருப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. கருப்பு அறிக்கையை வெளிட்ட மல்லிகார்ஜுன கார்கே, “இன்று நாங்கள் அரசுக்கு எதிராக கருப்பு அறிக்கையை கொண்டு வந்துள்ளோம். நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்தர மோடி பேசும் போது எல்லாம் தனது அரசின் தோல்விகளை மறைக்கிறார். அதேநேரத்தில் நாங்கள் அரசின் தோல்வி குறித்து பேசும் போதெல்லாம் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

அதனால் கருப்பு அறிக்கை வெளியிட்டு நரேந்தர மோடி அரசின் தோல்விகளை மக்களுக்கு எடுத்துக்கூறுகிறோம். நாட்டில் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவால் 411 எம்எல்ஏகள் வாங்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல காங்கிரஸ் அரசுகளை கவிழ்த்துள்ளனர். அவர்கள் ஜனநாயகத்தை அழிக்கிறார்கள்” என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

சிவசேனா உத்தவ் தாக்கரே அணி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ்தலா 16 தொகுதிகள் என நாடாளுமன்ற தொகுதி பங்கீடு

மகராஷ்டிராவில் நீண்டகாலமாக பாஜக கூட்டணியில் சிவசேனா கட்சி இருந்தது. கடந்த 2019 சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு முதலமைச்சர் போட்டி காரணமாக சிவசேனாவும், பா.ஜனதா இடையேயான கூட்டணி முறிந்தது. இதைத்தொடர்ந்து சிவசேனா, கொள்கை முரண்பாடு கொண்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகாவிகாஸ் என்ற புதிய கூட்டணியை உருவாக்கி ஆட்சியை கைப்பற்றியது.

ஆனால் சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 30-க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்க, உத்தவ் தாக்கரே இரண்டரை ஆண்டு ஆட்சி முடிந்த நிலையில் கடந்த ஆண்டு கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் அணி பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. மேலும் சிவசேனா கட்சியும் ஏக்நாத் ஷிண்டே வசம் சென்றது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் ‛இந்தியா’ கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளது. முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணி கேட்ட தொகுதிகளை கொடுக்க காங்கிரஸ் மறுத்துள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் ‛இந்தியா’ கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மகராஷ்டிராவை பொறுத்தமட்டில் ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே அணி இடையே நல்ல நட்பு உள்ளது.

இதனால் அங்கு நாடாளுமன்ற தொகுதி பங்கீடு என்பது பிரச்சனையின்றி முடியும் என கூறப்பட்டது. அதாவது மகாராஷ்டிராவில் மொத்தம் 48 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தலா 16 தொகுதிகளில் களமிறங்கும் என்ற தகவல்கள் வெளியாகின. கடந்த வாரம் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்ய தாக்கரே, எம்பி சஞ்சய் ராவத் உள்ளிட்டவர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ஏஐசிசி பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மோடி அரசின் தாராளமய இறக்குமதி கொள்கையால் விவசாயிகளுக்கு நெருக்கடி

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “மோடி அரசின் தாராளமய இறக்குமதி கொள்கை, பல்வேறு மாநிலங்களில் விவசாயிகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மலிவான இறக்குமதிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் சோயாபீன்ஸ் குறைந்தபட்ச ஆதார விலையை விடவும் குறைவாக விற்கப்படுகின்றன.

இந்த இரு மாநிலங்கள் மற்றும் பிற மாநிலங்களில் மலிவான பாமாயில் இறக்குமதி காரணமாக பால் விலை குறைந்துள்ளது. இது நெய்யில் காய்கறி கொழுப்பினை கலப்பதற்கு வழிவகை செய்கின்றது. குறைந்த அளவே பால் கிடைப்பதால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் இரண்டு மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்யும் பாஜக அரசுக்கு குழந்தைகளின் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளை வாங்க பணமில்லையா…!?

மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் ஷங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் “குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் 142 குழந்தைகள் சேர்க்கப்பட்டன. அவர்களில் 42 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டர் ஆகியவை உள்ளன. இவர்கள் அண்டை மாவட்டங்களான ஹிங்கோலி, பர்பானி, வாஷிம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் 16 பேர் குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த 31 பேர் உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிர அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அரசை கடுமையாகக் கண்டித்தது மட்டுமின்றி பாஜக அரசு விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாயை செலவழிப்பதாகவும், ஆனால், குழந்தைகளின் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளை வாங்க பணம் இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.

மக்களவையில் ஸ்மிருதி இராணி: “இந்தியா ஊழல் செய்யாததால் நீங்கள் இந்தியா இல்லை”

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “மணிப்பூரில் பாரத மாதா கொல்லப்பட்டுவிட்டார்” என கூறி குற்றம் சாட்டினார். அவரது இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, “முதல்முறையாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பாரத மாதாவின் மரணம் குறித்துப் பேசுகிறார். அவரது கூட்டணி கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் கை தட்டுகிறார்கள்.

நீங்கள் இந்தியா கிடையாது. இந்தியா ஊழல் செய்யாததால் நீங்கள் இந்தியா இல்லை. இந்தியா தகுதியை நம்புகிறது; வாரிசு அரசியலை அல்ல. நாடு சுதந்திரம் அடையும் முன் வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கத்தை நாடு முழங்கியது. இதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இன்று நாடு, ஊழலே இந்தியாவைவிட்டு வெளியேறு என்கிறது; வாரிசு அரசியலே நாட்டை விட்டு வெளியேறு என்கிறது. தகுதியைத்தான் இந்தியா கோருகிறது.

நாட்டில் அவசரநிலையைப் பிறப்பித்த கட்சி காங்கிரஸ். 1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்ட கட்சி காங்கிரஸ். ஜம்மு காஷ்மீரில் கிரிஜா திக்கோ என்ற பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்டதைத் தெரிவித்த திரைப்படத்தை பிரச்சாரம் என்று கூறிய கட்சி காங்கிரஸ். அதே கட்சிதான், தற்போது மணிப்பூர் குறித்துப் பேசுகிறது.

அவையில் பேசிய ராகுல் காந்தி தான் மேற்கொண்ட யாத்திரை குறித்தும், ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 சட்டப்பிரிவு அமல்படுத்தப்படும் என்று உறுதி அளித்ததாகவும் கூறினார். (அவையில் இருந்து ராகுல் காந்தி வெளியேறியதைச் சுட்டிக்காட்டி) அவையில் இருந்து வெளியேறிய நபரால் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வரவும் முடியாது; ஒன்று மதம் மாறுங்கள்; இல்லாவிட்டால் கொல்லப்பட தயாராகுங்கள்; இல்லாவிட்டால் காஷ்மீரைவிட்டு வெளியேறுங்கள் என்று பண்டிட் மக்களை அச்சுறுத்துபவர்கள் காப்பாற்றப்படவும் மாட்டார்கள். மணிப்பூர் குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. நாங்கள் அவையில் இருக்கிறோம். ஆனால், அவர்கள் அவையில் இல்லை” என பேசினார்.