கடம்பூர் ராஜூ திட்டவட்டம்: `2026 சட்டமன்றத் தேர்தல்.. அதிமுக, திமுக-வா ? என்பதுதான் மையமாக இருக்கும்..!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் அ.தி.மு.க புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அதிமுக-வினருக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையினால் தான் தனி மெஜாரிட்டியுடன் மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக இன்றைக்கு கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி மற்றும் அனுபவத்தினால் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வர அண்ணாமலை முயற்சி செய்கிறார். ஆனால், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தெளிவாக தெரிவித்துவிட்டார். கூட்டணி பற்றி அண்ணாமலை பேச வேண்டிய அவசியம் இல்லை.

இருந்தபோதிலும் கொல்லைப்புறமாக அதிமுக கூட்டணிக்கு வர அண்ணாமலை முயற்சி செய்கிறார். மத்தியில் உள்ள பாஜக நிர்வாகிகள் அண்ணாமலையை கடிந்து கொள்வதால் கூட்டணி கருத்துக்களை கூறி வருகிறார். மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தபோது தமிழர் நலன் சார்ந்த திட்டங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதால்தான் அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது.

பாஜக எத்தனை முறை படை எடுத்தாலும் இங்கு வெற்றி பெறப் போவதில்லை. தமிழகத்தை பாஜக புறக்கணிக்கிறது என்ற எண்ணம் தமிழக மக்களிடம் உள்ளது. வரும் 2026 தேர்தலை பொறுத்தவரை அதிமுக அதிமுக, திமுக-வா ? எடப்பாடி பழனிசாமியா? ஸ்டாலினா? என்பதுதான் மையக்கருத்தாக இருக்கும். அதிமுக தனித்து நின்றாலும் மகத்தான வெற்றியைப் பெறுவோம். சட்டமன்ற தேர்தல் வரும்போது திமுக கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் அதிமுகவுடன் சேர வாய்ப்புள்ளது” என கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

பாஜக தலைவர் பதவியை கைப்பற்ற குஷ்பு ‘தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தாரா..!?’

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த குஷ்பு கடந்த 2010-ஆம் ஆண்டு காலகட்டத்தில் திமுக இணைந்து பணியாற்றினார். 2014- ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் 2020ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். மேலும் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இருப்பினும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான , தேசிய மகளிர், இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று திடீரென அறிவித்தார். அதற்கான கடிதத்தை துறை அதிகாரிக்கு அனுப்பியதாகவும், அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ராஜினாமா குறித்து குஷ்பு பேசுகையில், அரசியலில் 14 ஆண்டுகால சேவைக்குப் பிறகு, ஒரு இதயபூர்வமான மாற்றத்தை உணர்கிறேன். உயர்ந்த கட்சியாக விளங்கும் பாஜக வில் முழுமையாக செயல்படுவதற்காக தேசிய மகளிர் ஆணையத்திலிருந்து என் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். என்னுடைய விசுவாசமும், நம்பிக்கையும் எப்போதும் பாஜக உடன்தான் இருக்கும். தீவிர அரசியலில் ஈடுபட முடியாதபடி தேசிய மகளிர் ஆணையத்தில் அதற்கென சில கட்டுப்பாடுகள் இருந்தன.

அதனால், முன்னெப்போதும் இல்லாத உற்சாகத்துடன், நான் மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்துவிட்டேன். இப்போது நான் சுதந்திரமாக, முழுமனதுடன் சேவையாற்ற முடியும். சென்னை கமலாலயத்தில் நடக்க உள்ள கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். வதந்தி பரப்புபவர்கள் அமைதியாக இருக்கலாம். என்னுடைய இந்த மறுவருகை நேர்மையானது. கட்சி மீதும், மக்கள் மீதும் நான் கொண்ட அசைக்க முடியாத அன்பின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு என குஷ்பூ தெரிவித்தார்.

இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பில் சேர, வரும் 28- ஆம் தேதி லண்டன் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் லண்டன் செல்லும்பட்சத்தில் தமிழக பாஜக தலைவர் பதவி வேறொருவருக்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பதவியை கைப்பற்ற குஷ்பு முயற்சிப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

 

கடம்பூர் ராஜூ: கொல்லைப்புறமாக அதிமுக கூட்டணிக்கு வர அண்ணாமலை முயற்சி செய்கிறார்..!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் அதிமுக புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அதிமுக-வினருக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையினால் தான் தனி மெஜாரிட்டியுடன் மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக இன்றைக்கு கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி மற்றும் அனுபவத்தினால் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வர அண்ணாமலை முயற்சி செய்கிறார். ஆனால், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தெளிவாக தெரிவித்துவிட்டார். கூட்டணி பற்றி அண்ணாமலை பேச வேண்டிய அவசியம் இல்லை.

இருந்தபோதிலும் கொல்லைப்புறமாக அதிமுக கூட்டணிக்கு வர அண்ணாமலை முயற்சி செய்கிறார். மத்தியில் உள்ள பாஜக நிர்வாகிகள் அண்ணாமலையை கடிந்து கொள்வதால் கூட்டணி கருத்துக்களை கூறி வருகிறார். மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தபோது தமிழர் நலன் சார்ந்த திட்டங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதால்தான் அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது.

பாஜக எத்தனை முறை படை எடுத்தாலும் இங்கு வெற்றி பெறப் போவதில்லை. தமிழகத்தை பாஜக புறக்கணிக்கிறது என்ற எண்ணம் தமிழக மக்களிடம் உள்ளது. வரும் 2026 தேர்தலை பொறுத்தவரை அதிமுக அதிமுக, திமுக-வா ? எடப்பாடி பழனிசாமியா? ஸ்டாலினா? என்பதுதான் மையக்கருத்தாக இருக்கும். அதிமுக தனித்து நின்றாலும் மகத்தான வெற்றியைப் பெறுவோம். சட்டமன்ற தேர்தல் வரும்போது திமுக கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் அதிமுகவுடன் சேர வாய்ப்புள்ளது” என கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்: “முதல்வர் பதவிக்கு அண்ணாமலை ஆசைப்படுவதற்கு முன்பு…வார்டு தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு நின்று வெற்றி..!”

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தானில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உறுப்பினர் அட்டைகளை வழங்கிய முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், “தமிழகத்தில் பாஜக தலைமையில் அதிமுக கூட்டணி ஆட்சி என்று அண்ணாமலை பேசுகிறார்.

அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி 50 ஆண்டுகள் பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். எதையும் அறிவுசார்ந்து, நூறு தடவை யோசித்துத்தான் பேசுவார். அண்ணாமலைக்கு ஆட்சி, அரசியல், வரலாற்றைப் பற்றிப் பேசுவதற்கு என்ன அருகதை உள்ளது? இதே அண்ணாமலை தான் அதிமுக இருக்கக் கூடாது என்று சொன்னார். இவர் தாத்தா வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. இன்றைக்கு விரக்தியின் விளிம்பில் அண்ணாமலை பேசுகிறார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை என்ற காரணத்துக்காக மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல் வஞ்சிக்கிறது. ஆனால், அதிமுக ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் இருக்கும்போதும் மக்கள் சேவை செய்வதில் நாங்கள் பின்வாங்குவதில்லை. தமிழகத்துக்காக வாதாடி, போராடி நிதியைப் பெற்றுத் தராத அண்ணாமலை, முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார். அது பகல் கனவு. முதலில் அவர் வார்டு தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு நின்று வெற்றி பெற்று பொதுச்சேவை செய்து, அதன் பின்பு சட்டமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற்று பணியாற்றி கஷ்ட நஷ்டம் அறிந்து கொள்ள வேண்டும்.

அதிமுகவுக்கு மதிப்பெண் கொடுக்க நீங்கள் யார்? அண்ணாமலை ஐபிஎஸ் படித்த மேதாவியாக இருக்கலாம். அவருக்குத் தமிழகத்துக்கு ஒரு பைசாகூட நிதி பெற்றுத்தர அருகதை இல்லை. ஆனால் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். அதிமுக பற்றிப் பேச இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது?

மாநில தலைவராக உள்ள நீங்கள், டெல்லியில் சென்று முற்றுகையிட்டு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி வாங்கி வந்தீர்களா? வளர்ச்சி நிதி வாங்கிவந்தீங்களா? வறட்சி நிதி வாங்கி வந்தீர்களா? எட்டு முறை தமிழகத்திற்குப் பாரதப் பிரதமரை அழைத்து வந்த நீங்கள் கள்ளச் சாராய மரணங்கள் நிகழ்ந்த போதும், பேரிடர் காலத்திலும் அவரைக் கூட்டி வந்தீர்களா? இது எதுவும் அண்ணாமலை செய்யவில்லை” என ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் காட்டம்.! நீங்களும் பாஜகவும் எப்போதும் மக்களை ஏமாற்றுவதில் மறைமுகமாக ஈடுபட்டு வருகிறீர்கள்..!

சென்னை மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனம் மீதான பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் தேவநாதன் யாதவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்துள்ள நிலையில், அண்ணாமலை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என விமர்சித்திருந்தார். இந்நிலையில் அப்பாவி மக்கள் பணத்தை திருப்பித் தராதவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள் இது வெட்கக்கேடானது என அண்ணாமலையை காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவராக உள்ள பாஜக ஆதரவாளரான தேவநாதன் யாதவ் தனியாக 24 மணி நேர செய்தித் தொலைக் காட்சியையும் நடத்தி வருகிறார். மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தல் போட்டியிட்டார். இதுமட்டுமின்றி, 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் முதலீடு செய்துள்ள மயிலாப்பூர் இந்து சாஸ்வத நிதி லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தின் தலைவராகவும் தேவநாதன் இருந்து வருகிறார்.

மயிலாப்பூர் இந்து சாஸ்வத நிதி லிமிடெட் என்ற நிதி நிறுவனம் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு 10 முதல் 15 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறி 50 கோடி ரூபாயை மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. அது போல் ரூ 525 கோடி வரையிலான வைப்பு தொகையை திரும்ப தர நிதி நிறுவனம் மறுப்பதாகவும் முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிதி மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்த சென்னை குற்ற பொருளாதார பிரிவு போலீஸார் தேவநாதன் யாதவ்வை திருச்சியில் வைத்து கைது செய்தனர்.

இந்நிலையில் தேவநாதனின் கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் நிறுவனத் தலைவர் தேவநாதன் யாதவ் அவர்கள், தமிழகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் செய்தி அறிந்தேன்.

மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தில், முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் பாஜக தமிழ்நாடு உறுதியாக உள்ளது. தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்தி, முதலீட்டாளர்கள் அனைவருக்கும் இதனை உறுதி செய்ய வேண்டும். அதே நேரத்தில், திமுக அரசின் சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகத் தோல்வியைச் சுட்டிக் காட்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளை அச்சுறுத்தும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்றால், அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.” என அண்ணாமலை தெரிவித்தார்.

இதற்கிடையே அப்பாவி மக்கள் பணத்தை திருப்பித் தராதவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள் இது வெட்கக்கேடானது என அண்ணாமலையை அதிமுக காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,”கஷ்டப்பட்டு சம்பாதித்தவர்கள்/ஓய்வூதியப் பணம் பல ஆண்டுகளாக மயிலாப்பூர் அசோசியேஷனில் முதலீடு செய்திருக்கிறார்கள். தேவநாதன் யாதவை வேட்பாளராக பாஜக தேர்ந்தெடுத்தது, அந்த அசோசியேஷன் பணத்தை அவர் பாஜக 2024 தேர்தலுக்கு பயன்படுத்தியதாக தகவல். பணத்தை திருப்பி கொடுக்க நிறைய நேரம் கொடுக்கப்பட்டது.

அப்பாவி மக்கள் ஏமாற்றப்பட்டு, இப்போது பணத்தை திருப்பித் தராதவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள். வெட்கக்கேடானது. பண விஷயங்களில் நீங்கள் எப்போதாவது மக்களுக்காக உங்கள் அக்கறையை உயர்த்தியுள்ளீர்களா? நீங்களும் பாஜகவும் எப்போதும் மக்களை ஏமாற்றுவதில் மறைமுகமாக ஈடுபட்டு வருகிறீர்கள். மோசடி செய்ததற்காக அவர் சட்டத்தை எதிர்கொள்ள வேண்டும். அவர் குற்றவாளி இல்லை என்றால் சட்டம் அவரை விடுவிக்கும்.” என விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குமா..!? புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி மீண்டும் சட்டசபையில் மீண்டும் ஒருமனதாக தீர்மானம்..!

புதுச்சேரி யூனியன் பிரதேசமானது தமிழ்நாடு மாவட்டங்களைச் சூழ்ந்தது. வங்க கடல் பகுதியில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகியவையும் அரபிக் கடல் பகுதியில், மாஹேவும் உள்ளன. நாடு விடுதலைக்குப் பின்னர் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்டவை 1954-ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. இதன் பின்னர் மத்திய அரசின் கீழ் செயல்படும் யூனியன் பிரதேசங்களுள் ஒன்றாக புதுச்சேரியும் இடம் பெற்றது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடரில் சில நாட்களாக மாநில அந்தஸ்து தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பேசிய சட்டசபை சபாநாயகர் செல்வம், முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் புதுச்சேரி சட்டசபையில் 12 முறை மாநில அந்தஸ்து கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர், பிரதமர் அலுவலக அமைச்சராக இருந்தும் கூட மாநில அந்தஸ்தைப் பெற முடியவில்லை. புதுச்சேரியில் பாஜக- என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசும் 2023-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. ஆனாலும் மத்திய அரசு திருப்பித்தான் அனுப்பியது என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்திருந்தனர். மேலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க இந்தியா கூட்டணி எம்பிக்களும் குரல் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமியும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று புதுச்சேரி சட்டசபையில் மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம் தனிநபர் தீர்மானமாக தாக்கல் செய்யப்பட்டு பின்னர் அரசு தீர்மானமாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அண்ணாமலையை அவதூறு பேசிய செல்லூர் ராஜூ மீது காவல் நிலையத்தில் புகார்..!

மதுரை மாநகர் மாவட்ட பாஜக துணைத்தலைவர் ராஜ்குமார் எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், மதுரை பரவை பேரூராட்சியில் கடந்த 12 -ஆம் தேதி அதிமுக கட்சி சார்பில், உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் மதுரை மேற்கு தொகுதி எம் எல் ஏ செல்லூர் ராஜூ, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஒருமையில் தர குறைவாகவும், ஒரு சமுதாயத்தை இழிவு படுத்துகின்ற வகையிலும் விமர்சித்துள்ளார்.

இது போன்று அவர் தொடர்ந்து அண்ணாமலையை பொது இடங்களில் விமர்சித்து வருகிறார். எனவே அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்யாணத்துக்கு வாங்க..! ‘ கல்யாண பரிசா உங்களின் ஓட்டு போடுங்க…’

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 19 -ஆம் தேதி 102 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் முடிவுற்ற நிலையில் அடுத்து ஏப்ரல் 26 -ஆம் தேதி கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்னும் மீதம் 3 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், தெலுங்கானாவில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், தெலங்கானா மாநிலம், மேதக் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளராக ரகுநந்தன் ராவ் களம் இறங்கி உள்ளார். இவரது ஆதரவாளர்களில் ஒருவரான சுரேஷ் நாயக்கின் தம்பியின் திருமணம் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான திருமண பத்திரிகையில் பாஜக வேட்பாளர் ரகுநந்தனின் புகைப்படத்தை அச்சிட்டதோடு, அதன் கீழே ‘திருமண பரிசே உங்களின் ஓட்டு தான்’ என சுரேஷ் நாயக் அச்சிட்டுள்ளார். இது குறித்து சந்திரய்யா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் காடிபல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

‘வெற்றுச் சொம்பு மோடி’ – கர்நாடகாவில் களைகட்டும் காங்கிரஸ் பிரச்சாரம் !

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு செயல்பட்டு வந்தபோது, அங்கு பாஜக அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. மேலும், பாஜக அரசு அனைத்து ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் கேட்கிறது என்பதை அடிப்படையாக வைத்து காங்கிரஸ் பாஜகவை தொடர்ந்து விமர்சனம் செய்தது.

அதன்படி அங்கு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அனைத்து டெண்டர்களிலும் 40% கமிஷன் வாங்கும் பாஜகவினரை கிண்டல் செய்யும் விதமாக ‘PayCM – பே சிஎம்’ என்ற ‘க்யூ ஆர் கோடு’ ஒன்றை உருவாக்கி அதனை வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தனர். அந்த க்யூ ஆர் கோடினை ஸ்கேன் செய்தால் பாஜகவினர் ஊழல்கள் வெளியாகும் வண்ணம் அதனை வடிவமைத்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்துக்காக கர்நாடகா வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, ”என்னை 91 முறை காங்கிரஸ் கட்சி அவமானப்படுத்தியுள்ளது என அழாத குறையாக பேசியிருந்தார். இதனை கிண்டல் செய்யும் விதமாக காங்கிரஸ் கட்சியினர், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, ‘CryPM’ என்ற புதிய பிரசாரத்தைத் தொடங்கினர்.

காங்கிரஸ் கட்சியின் இதுபோன்ற பிரச்சாரம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் அங்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வெற்றுச் சொம்பு என மோடியை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருகிறது.

தமிழ்நாட்டை போல கர்நாடக மாநிலத்துக்கும் மத்திய பாஜக அரசு ஏதும் செய்யாமல் இருந்து வருகிறது. அதனைக் குறிப்பிடும் வகையில், ‘வெற்றுச் சொம்பு மோடி’ என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி முன்னெடுத்து வருகிறது. இந்த பிரச்சாரம் கர்நாடக மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

Siddaramaiah: ’24×7′ படத்தின் உண்மைக் கதை என்ன? எல்லாமே விளம்பரம் தான்..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பெங்களூருவில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சி முதலீட்டுக்கு எதிரானது, தொழில்முனைவோருக்கு எதிரானது, தனியார் துறைக்கு எதிரானது, வரி செலுத்துபவர்களுக்கு எதிரானது, செல்வத்தை உருவாக்குபவர்களுக்கு எதிரானது.

இந்தியாவை உலகப் பொருளாதாரத்தின் மையமாக மாற்றுவேன். ஆனால் காங்கிரஸும் இண்டியா கூட்டணியினரும் மோடியை அகற்றுவோம் என்று கூறுகிறார்கள். இதேபோல் 5ஜிக்கு பிறகு 6ஜியை தொடங்குவோம் என்று நான் உத்தரவாதமாக கூறினால் அவர்கள் மோடியை அகற்றுவோம் என்றே பேசுகிறார்கள்.

கர்நாடக மக்களின் கனவுகளை நிறைவேற்ற பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் ஒன்றிணைந்துள்ளது. உங்கள் கனவுகள் தான் எனது தீர்மானம் என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். எனது வாழ்க்கை உங்களுக்கும் நாட்டுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 2047க்கு 24X7 உறுதியளிக்கிறேன். 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே எனது இலக்கு.

டெக் சிட்டியை டேங்கர் சிட்டியாக காங்கிரஸ் மாற்றியுள்ளது. காங்கிரஸ் ஊழலில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. பெங்களூரு பிரச்சினைகளில் கவனம் செலுத்தவில்லை. மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமே பெங்களூருவை வேகமாக முன்னேற்றி வருகின்றன.

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு வளர்க்கும் சிந்தனைகள் மற்றும் சித்தாந்தம் மிகவும் ஆபத்தானது. பெண்கள் தாக்கப்படுகிறார்கள். சந்தைகளில் குண்டுகள் வெடிக்கிறார்கள். மதப் பாடல்களைக் கேட்டதற்காக மக்கள் தாக்கப்படுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் பொதுவானவை அல்ல. சகோதர சகோதரிகளே காங்கிரஸைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” என நரேந்திர மோடி கடுமையாக சாடினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த, முதலமைச்சர் சித்தராமையா, “மக்களுக்காக 24×7 நேரமும் உழைக்கிறேன் என்று கூறுகிறார் பிரதமர் மோடி. ஆனால் கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் வறட்சியின் போது பிரதமர் மோடி எங்கே இருந்தார்?. அப்படியானால், இந்த ’24×7′ படத்தின் உண்மைக் கதை என்ன? எல்லாமே விளம்பரம் தான் என்று தெரிகிறது.

பிரதமர் மோடி உண்மையிலேயே விவசாயிகளின் நலனை விரும்புகிறாரா? என்பதை தனது மனசாட்சியிடமே அவர் கேட்டுகொள்ள வேண்டும். டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தின் போது 700 விவசாயிகள் இறந்தனர். விவசாயிகளைப் பற்றி பேசுவதற்கு பிரதமருக்கு தார்மீக உரிமை இல்லை.

விவசாயிகளின் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு இன்னும் தயாராக இல்லை. விதைகள் மற்றும் உரங்கள் மீது ஜிஎஸ்டி வரியை விதித்துள்ளது மத்திய அரசு.

பாஜக ஆரம்பத்திலிருந்தே விவசாயிகளுக்கு எதிரானது. முதலாளிகள், தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளின் கட்சி பாஜக. இந்த கட்சியின் டிஎன்ஏவில் விவசாயிகளுக்கு எதிரான விஷம் உள்ளது. நரேந்திர மோடி அரசு 10 ஆண்டுகால ஆட்சியில் கர்நாடக விவசாயிகளுக்கு என்ன கொடுத்தது?.

கர்நாடக விவசாயிகள் தங்களின் நலம் விரும்பி யார் என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு புத்திசாலிகள். விவசாயிகளுக்கு எதிரான சக்திகளுக்கு தேர்தலில் அவர்கள் பாடம் புகட்டுவார்கள்.” என சித்தராமையா தெரிவித்தார்.