இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட T-20 தொடரில் விளையாடுகிறது. ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஸ்ரேயாஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து துவக்க வீராங்கனைகளாக ஜிம்பாப்வே வீரர்கள் பிரையன் பென்னட், பெஞ்சமின் கரண் களமிறங்கிய நிலையில் மயங்க் யாதவ் வீசிய முதல் பந்தில் பந்திலேயே பிரையன் பென்னட் ஆட்டமிழந்து வெளியேற ஜிம்பாப்வே அணியை மிரள வைத்தார்.
அடுத்து களமிறங்கிய டியோன் மையர்ஸ் மற்றும் பெஞ்சமின் கரணுடன் இணைய 3.2 ஓவர்களில் 19 ரன்கள் எடுத்து நிலையில் பிரின்ஸ் யாதவ் பந்து வீச்சில் பெஞ்சமின் கரண் 10 பந்துகளில் 2 பவுண்டரிகள் உட்பட 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் சிக்கந்தர் ராசா மற்றும் டியோன் மையர்ஸிடன் இணைய 4.2 ஓவர்களில் 20 ரன்கள் எடுத்து நிலையில் மயங்க் யாதவ் பந்து வீச்சில் டியோன் மையர்ஸ் 14 பந்துகளில் 1 பவுண்டரி உட்பட 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கடைசியாக 20 ஓவர்கள் இறுதியில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி பந்துவீச்சு தரப்பில் மயங்க் யாதவ் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய் மற்றும் சிவம்துபே ஆகியோர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றியிருந்தனர்.
தொடர்ந்து 126 ரன்கள் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்க முதல் ஓவரில் அபிஷேக் சர்மா சற்று நிதானம் காட்டிய நிலையில், 2-வது ஓவரில் இருந்து வைபவ் சூர்யவன்ஷி பவுண்டரி, சிக்சர் என விளாசத் தொடங்கினார். 2.5 ஓவர்களில் 23 ரன்கள் எடுத்து நிலையில் பிளெஸ்ஸிங் முசராபானி பந்து வீச்சில் சர்மா 8 பந்துகளை சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷிடன் இணைய ஜிம்பாப்வே பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இதனை தொடர்ந்து 18 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடித்து தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அவரைத் தொடர்ந்து இஷான் கிஷன் 35 ரன்கள், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 28 ரன்களுடனும், திலக் வர்மா 6 ரன்களுடனும் இந்திய அணி 13.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.