அரசு மருத்துவக் கல்லூரியில் தீ விபத்தில் 10 குழந்தைகள் பலி..! 16 பேருக்கு தீவிர சிகிச்சை..!

உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியிலுள்ள மகாராணி லட்சுமிபாய் கல்லூரியின் பிறந்த குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் 16 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மற்றவர்களின் நிலை குறித்து ஆராயப்பட்டு வருகிறது. NICU-வில் மீட்புப் பணிகள் நள்ளிரவு 1 மணியளவில் முடிந்துவிட்டன என தகவல்கள் வெளிவந்துள்ளன.

1968 -ல் தனது சேவைகளைத் தொடங்கி உத்தரபிரதேசத்தின் பண்டேல்கண்ட் பகுதியிலுள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றாக மகாராணி லட்சுமிபாய் கல்லூரியின் பிறந்த குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் 52 முதல் 54 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு 10.45 மணி அளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பேசிய மாவட்ட ஆட்சியர் அவினாஷ் குமார், மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரியில் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று இரவு 10.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. Neonatal Intensive Care Unit (NICU)-ன் வெளிப் பகுதியில் இருந்த குழந்தைகளும், உள் பகுதியில் இருந்த சில குழந்தைகளும் மீட்கப்பட்டனர். 10 குழந்தைகள் இறந்ததாக முதல்கட்டத் தகவல் வெளியாகி உள்ளது.

NICU-ன் வெளிப்புறப் பிரிவில் குறைவான குழந்தைகளே அனுமதிக்கப்படுகின்றனர். அதே நேரத்தில் மிகவும் முக்கியமான நோயாளிகள் உள் பகுதியில் வைக்கப்படுகிறார்கள் என தெரிவித்தார். இருப்பினும், இந்த தீ விபத்திற்கு காரணம் என்ன, யாருடைய மெத்தனத்தால் இது நடந்தது என்பதை அறிய விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 10 குழந்தைகள் இறந்தபோதும், மற்றவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். NICU-ல் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

தேசிய பத்திரிகை தினத்தில் எலான் மஸ்க் உருவாக்கும் ஏகாதிபத்தியத்திற்கு முடிவு கட்டுவோம்..!

இந்திய பிரஸ் கவுன்சில் 1966 ஜூலை 4-ல் தொடங்கி நவம்பர் 16-ல் செயல்பட துவங்கியது. இதை அங்கீகரிக்கும் விதமாக நவம்பர் 16-ல் தேசிய பத்திரிகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகை, ஊடகம். மக்கள் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்ப்பதில் பங்காற்றுகிறது.

நமக்கு மேலிருக்கும் சட்டமன்றம், நிர்வாகி மற்றும் நீதித்துறை என்ற மூன்று தூண்களின் செயற்பாடுகளை கழுகுக் கண்கொண்டு பார்த்து அதை மக்களுக்கு அறிவிப்பது ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை மாற்றும் ஊடகத்தின் மேலான கடமையாகும். வாள் முனையை விட பேனாவின் முனை கூரானாது என்பதை உணர்ந்து ஊடகங்களால், ஆட்சியைக் கவிழ்க்கவும் முடியும், ஆட்சியை உருவாக்கவும் முடியும்.

உலகின் ஒரு ஏகாதிபத்திய சக்தி தனது பணபலத்தால், வல்லரசுகளில் ஒன்றான அமெரிக்காவிலேயே மறைமுக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இது மேலும் வெளி நாடுகளின் மீது அதிகாரத்தை விரிவுபடுத்தும் என்பதில் என்பதில் எந்த ஒரு ஐயமுமில்லை. ஆட்சியாளர்கள் தவறான பாதையில், கண்மூடித்தனமாகப் பயணிக்கும் அரசாங்கத்தை நல்வழிப்படுத்துவது நமது ஜனநாயக கடமையாகும்.

தேசிய பத்திரிகை தினத்தில் வாள் முனையை விட பேனாவின் முனை கூர்மையானது என்பதை உணர்ந்து ஊடகங்களால், ஆட்சியைக் கவிழ்க்கவும் முடியும், ஆட்சியை உருவாக்கவும் முடியும் என்பதான உணர்ந்து ஜனநாயக ஜனநாயகக் கடமை ஆற்றுவோம்.

நானா படோல்: ராகுல்காந்தியைக் கண்டால் பாஜகவுக்கு பயம்..!

ராகுல்காந்தியைக் கண்டு பாஜக பயப்படுகிறது. கனவில் கூட அவரைப்பற்றித்தான் பாகஜவினர் நினைக்கிறார்கள்’ என அமித் ஷாவிற்கு மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் பதிலடி கொடுத்தார்.

மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.

மஹாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘ இந்திரா காந்தி உயிரோடு வந்தாலும் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு வராது’ என்று பேசினார். இதற்கு மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் நேற்று பதிலடி கொடுத்தார்.

நானா படோல் கூறுகையில்,’ காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம் நீங்கள் சாதித்தது என்ன? நீங்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தான் காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலை நடத்த முடிந்தது. தீவிரவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ராணுவ வீரர்கள் தினமும் வீரமரணம் அடைந்து வருகின்றனர். இந்த நாட்டில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக இந்திராகாந்தி இருந்தவர்.

மறைந்த அவரை 370-வது சட்டப்பிரிவில் அமித் ஷா விமர்சனம் செய்வது தவறானது. இந்திராகாந்தி இன்று உயிருடன் இருந்திருந்தால், பாஜக எங்கும் இருந்திருக்காது. இந்திராகாந்தியை விடுங்கள், தற்போது ராகுல்காந்தியைக் கண்டு பாஜக பயப்படுகிறது. கனவில் கூட அவரைப்பற்றித்தான் பாகஜவினர் நினைக்கிறார்கள்’ என நானா படோல் பேசினார்.

துருக்கி அதிபர் அதிரடி: இஸ்ரேலுடன் இனி எந்த ஒட்டுமில்லை..! உறவுமில்லை..!!

இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இதனை இனப்படுகொலை என துருக்கி அதிபர் ரெசேப் தயிப் எர்டோகன் விமர்சனம் செய்து இஸ்ரேல் உடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சனை இருந்த நிலையில் கடந்த ஆண்டு போராக மாறியது. கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி காசாவில் இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்கு நுழைந்து தாக்குதல் நடத்தி 240க்கும் அதிகமானவர்களை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர்.

இதையடுத்து ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வகையில் காசா மீது இஸ்ரேல் போர் நடவடிக்கையை தொடங்கியது. இந்த போர் தற்போது ஓராண்டை கடந்தும் நடந்து வருகிறது. காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பின் தலைவர் உள்பட முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் 7 -ஆம் தேதி முதல் தற்போது வரை இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக காசாவில் மொத்தம் 43,712 பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். 1 லட்சத்த 3,258 பேர் காயமடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இந்நிலையில் இஸ்ரேல் மீது இஸ்லாமிய நாடுகள் கடும் கோபத்தில் உள்ளன. இந்த போர் நடவடிக்கைக்கு எதிராக ஈரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா ஏற்கனவே இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் ஈரானும், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. சவூதி அரேபியாவும், காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது. பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அறிவிக்கும் வரை சவூதி அரேபியா, இஸ்ரேலுடன் எந்த உறவையும் வைக்காது என்று அறிவித்துள்ளது.

அந்த வரிசையில் தற்போது துருக்கியும், இஸ்ரேலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளது. காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது. இதனை கைவிட வேண்டும் என்று தொடர்ந்து துருக்கி தெரிவித்து வந்த நிலையில் தற்போது இஸ்ரேல் உடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பாக துருக்கி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக துருக்கி அதிபர் ரெரேசப் தயிப் எர்டோகன் பேசுகையில், துருக்கி அரசு இஸ்ரேலுடன் எந்த வகையான தொடர்பு மற்றும் உறவையும் வைத்து கொள்ளாது. இதுதொடர்பாக ஆளும் எங்களின் கூட்டணி அரசு சார்பில் தீர்மான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையை தான் நாங்கள் எதிர்காலத்திலும் தொடருவோம். இஸ்ரேல் தொடர்ந்து காசா மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலை தொடரும்போது இன்னும் நிலைமை என்பது மோசமாகும்” என்று கவலை தெரிவித்தார்.

அமித் ஷா பேச்சுக்கு நானா படோல் பதிலடி: இந்திரா இருந்திருந்தால் பாஜகான்னு ஒரு கட்சியே இருந்திருக்காது..!

இந்திரா இருந்திருந்தால் பாஜ இருந்திருக்காது என அமித் ஷாவிற்கு மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் பதிலடி கொடுத்தார். மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.

மஹாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘ இந்திரா காந்தி உயிரோடு வந்தாலும் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு வராது’ என்று பேசினார். இதற்கு மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் நேற்று பதிலடி கொடுத்தார்.

நானா படோல் கூறுகையில்,’ காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம் நீங்கள் சாதித்தது என்ன? நீங்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தான் காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலை நடத்த முடிந்தது. தீவிரவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ராணுவ வீரர்கள் தினமும் வீரமரணம் அடைந்து வருகின்றனர். இந்த நாட்டில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக இந்திராகாந்தி இருந்தவர்.

மறைந்த அவரை 370-வது சட்டப்பிரிவில் அமித் ஷா விமர்சனம் செய்வது தவறானது. இந்திராகாந்தி இன்று உயிருடன் இருந்திருந்தால், பாஜக எங்கும் இருந்திருக்காது. இந்திராகாந்தியை விடுங்கள், தற்போது ராகுல்காந்தியைக் கண்டு பாஜக பயப்படுகிறது. கனவில் கூட அவரைப்பற்றித்தான் பாகஜவினர் நினைக்கிறார்கள்’ என நானா படோல் பேசினார்.

தாய் உடல் மயானம் போகும்போது குழந்தையும் பலி..!

அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம் பெண்ணிற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால், இளம் பெண் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த எல்.மாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த விஜய் மனைவி துர்காதேவி. இருவரும் காதலித்து, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த துர்கா தேவி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசவத்திற்காக ஆம்பூர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அறுவை சிகிச்சை பின் அவருக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. பணியில் இருந்த செவிலியர்கள், மற்றும் பணியில் இருந்த சியாமளா என்ற மருத்துவர் துர்கா தேவிக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனவும், துர்கா தேவிக்கு பெண் குழந்தை பிறந்த பின்னர் அதிக அளவு ரத்தப் போக்கு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அவருக்கு முறையாக அறுவை சிகிச்சை செய்யாததால், தொடர்ந்து ரத்தப் போக்கு அதிகமாகியுள்ளது என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, துர்காதேவியை மருத்துவர்கள் திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முடியாமல், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அங்கும் சிகிச்சை அளிக்க முடியாமல், இறுதியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், நேற்று முன்தினம் இரவு துர்கா தேவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், துர்கா தேவியின் உடல் நேற்று எல்.மாங்குப்பம் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் துர்காதேவிக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் தான் துர்காதேவி உயிரிந்ததாகக் கூறி ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் சியாமளா மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி துர்கா தேவியின் உறவினர்கள் ஆம்பூர் – பேர்ணாம்பட் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையிலான காவல்துறையினர், ஆம்பூர் வட்டாட்சியர் ரேவதி தலைமையிலான வருவாய்த் துறையினர், மற்றும் திருப்பத்தூர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் கண்ணகி ஆகியோர் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.

இதுகுறித்து புகார் அளித்தால், துர்காதேவிக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மருத்துவர் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால் பிரசவத்திற்குச் சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தாய் உடல் மயானம் போகும்போது குழந்தையும் பலி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சாந்தோம் சர்ச் அருகிலுள்ள டுமீல் குப்பம் அருகே கரை ஒதுங்கிய டால்பினால் பரபரப்பு..!

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள சாந்தோம் சர்ச் அருகிலுள்ள டுமீல் குப்பம் எதிரே டால்பின் ஒன்று கரை ஒதுங்கி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தேசிய நீர்விலங்கு டால்பின் 2009 -ஆம் ஆண்டு அக்டோபர் 5 அன்று அறிவிக்கப்பட்டது. டால்பின்களில் பல இனங்கள் இருந்தாலும் அவற்றில் ஒரு சில இனங்கள் மட்டுமே ஆற்றுநீரில் அதாவது நன்னீரில் வாழ்கின்றன.அந்தவகையில் இந்தியாவின் கங்கை நதியில் டால்பின்கள் வாழ்கின்றன.

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரை பகுதியில் டுமீல் குப்பம் அருகிலுள்ள பீச்சில், டால்பின் கரை ஒதுங்கியது. டால்பின் கரை ஒதுங்கிய சம்பவம் நைனார்குப்பம் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

பழங்குடி பாடல் மூலம் அவையை அதிரவைத்த பெண் MP ஹனா ரவிதி மைபி கிளார்க்..!

நியூசிலாந்தின் மவோரி பழங்குடிகளுக்கும் பிரிட்டன் அரசுக்கும் இடையேயான பாரம்பரிய ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பழங்குடியின பெண் MP ஹனா ரவிதி மைபி கிளார்க் தலைமையில் மவோரி எம்.பி.க்கள் பாரம்பரிய பாடல், நடனம் மூலம் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் பழங்குடியினப் பாடலும், அதற்கேற்ற ஆவேச நடனமும் நியூசிலாந்து நாடாளுமன்றத்தை அதிரவைத்தது. அவர்களின் உரிமைப் பாடலை செய்வதறியாது கவனித்து வந்த சபாநாயகர் பின்னர் மவோரி MPக்கள் அனைவரையும் அவையிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டார்.

நியூசிலாந்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த 54-வது நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தேசிய கட்சியினர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர். இதனிடையே, அங்குள்ள டி பாடி மவோரி கட்சியைச் சேர்ந்த 6 பேர் MP களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 21 வயதேயான ஹனா ரவிதி மைபி கிளார்க் ஒருவர். இவர் கடந்த 1853-லிருந்து நியூசிலாந்து வரலாற்றில் மிக இளம் வயதில் MP ஆனவர் என்ற பெருமையை பெற்றவர்.

1840-ல் பிரிட்டன் அரசு பிரதிநிதிகளுக்கும், நியூசிலாந்தின் வடக்குத் தீவில் இருக்கும் பூர்வக்குடிகளாக அறியப்படும் மாவோரி தலைவர்களுக்கும் இடையே ‘வைதாங்கி ஒப்பந்தம்’ மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவோரி பூர்வக்குடிகளுக்கு சில சலுகைகளும், உரிமைகளையும் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் அண்மையில் ஒரு மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவுக்கு டி பாடி மவோரி கட்சி எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலில் பெண் MP ஹனா ரவிதி மைபி கிளார்க் பழங்குடி பாடலுடன் மசோதா நகலை கிழித்தெறிந்து அவையின் நடுவே வந்து போராட்ட முழக்கம் எழுப்ப அவருடன் பிற மவோரி MP க்களும் இணைந்து கொண்டனர்.

அவர்களின் பழங்குடியினப் பாடலும், அதற்கேற்ற ஆவேச நடனமும் நியூசிலாந்து நாடாளுமன்றத்தை அதிரவைத்தது. அவர்களின் உரிமைப் பாடலை செய்வதறியாது கவனித்துவந்த சபாநாயகர் பின்னர் மவோரி MP க்கள் அனைவரையும் அவையிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டார். ஹனா ரவிதி மைபி கிளார்க்கின் முதல் நாடாளுமன்ற உரை அவரை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தது. தனது பேச்சினுடே மவோரி இனத்தின் போர் பாடலைப் பாடி நாடாளுமன்றத்தை அதிர வைத்தார்.

‘பிரிந்தால் இழப்பு’ எனும் கோஷம் ஹரியானாவை போல, மகாராஷ்டிராவில் செல்லாது..!

‘பிரிந்தால் இழப்பு’ எனும் கோஷம் ஹரியானாவை போல, மகாராஷ்டிராவில் செல்லாது என மகா யுதியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.

மஹாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஆளும் மகா யுதி கூட்டணிக்கு ஆதரவாக, உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் தனது உரையில் ‘பட்டேங்கே தோ கட்டங்கே’ எனும் கோஷத்தை தவறாமல் எழுப்பி வருகிறார். இந்த கோஷம் உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தால், ஹரியானா பேரவை தேர்தலில் முதன்முறையாக எழுப்பப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியும் தனது பிரச்சாரத்தில் யோகி ஆதித்யநாத்தின் கோஷத்தை அங்கீகரித்து பேசினார். ஹரியானாவில் இந்துக்களின் பல்வேறு பிரிவுகளை ஒருங்கிணைக்கும் இக்கோஷம், பாஜக வெற்றிக்கு அடித்தளமிட்டதாக கருதப்படுகிறது. இது தற்போது, அனைத்து தேர்தல் பிரச்சாரங்களிலும் பாஜகவின் அதிகாரபூர்வக் கோஷம் என்றானது. இதை மகாராஷ்டிர தேர்தல் பிரச்சாரத்திலும் தொடரும் உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு, ஆளும் மகா யுதி கூட்டணியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

எதிர்ப்பவர்களில் ஒருவரான பாஜக MLA பங்கஜா முண்டே பேசுகையில், உத்திரபிரதேச மாநிலம் போன்ற மாநிலங்களில் எடுபடும் இந்த கோஷம் மகாராஷ்டிராவில் தேவையில்லை. ஏனெனில் இங்கு வட மாநிலங்கள் போன்ற அரசியல் சூழல் இல்லை. எனவே எங்கள் கட்சியை சேர்ந்தவர் எழுப்புகிறார் என்பதற்காக அதை நாங்களும் ஏற்க முடியாது என தெரிவித்தார்.

மருத்துவரை தாக்கிய விக்னேஷின் தயார் காவல் நிலையத்தில் புகார்..!

அரசு மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரத்தில், ‘‘எங்கள் தரப்பு பாதிப்புகளைப் பற்றி பேச யாருமே இல்லையே’’ என விக்னேஷ் உறவினர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். சென்னை கிண்டியில் கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் கலைஞர் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர் பாலாஜி என்பவர் நேற்று முன்தினம் காலை விக்னேஷ் என்ற இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் விக்னேஷின் தாயார் பிரேமாவுக்கு, மருத்துவர் பாலாஜி முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் விக்னேஷ், மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பெருங்களத்தூரில் வசிக்கும் பிரேமாவின் சகோதரி தேவி உள்ளிட்ட உறவினர்கள் நேற்று முன்தினம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, ‘‘மருத்துவரை விக்னேஷ் கத்தியால் குத்தியது பற்றி முன்னரே எங்களுக்கு எதுவும் தெரியாது. அது பற்றி அவன் எங்களிடம் எதுவும் பேசவில்லை. அவன் இப்படி செய்யப் போகிறான் என்று தெரிந்திருந்தால் நாங்கள் அவனைத் தடுத்திருப்போம். அவன் செய்த செயல் ஏற்புடையது அல்ல.

அதே நேரத்தில் அந்த மருத்துவரின் சிகிச்சை முறையால் எங்கள் வீட்டிலும் ஒரு உயிர் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி பேச இங்கு யாருமே இல்லையே. மேலும், வீட்டில் இருந்த மருத்துவ ஆவணங்களையெல்லாம் காவல்துறையினர் எடுத்துச் சென்றுவிட்டனர். மருத்துவ அறிக்கைகள் இல்லாமல் அவருக்கு எப்படி மேற்கொண்டு சிகிச்சை அளிக்க முடியும்’’ என கேள்வி எழுப்பினர்.

இதற்கிடையே மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷை சக மருத்துவர்கள், பணியாளர்கள் சுற்றிவளைத்து சிலர் காலால் எட்டியும் உதைத்து தாக்கினர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், விக்னேஷின் தாய் பிரேமா கிண்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்து அனுப்பினார்.

அந்த புகார் மனுவில், ‘என் மகன் விக்னேஷ் இதய நோயாளி. அவரை மருத்துவர்கள் உட்பட பலர் சுற்றி வளைத்து தாக்கினர். எனவே, மகன் பலத்த காயம் அடைந்துள்ளார். அவருக்கு சிறையில் உரிய சிகிச்சை கொடுக்க வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.