சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற உள்ள நிலையில் வலியுறுத்த வார்டு மேம்பாட்டு நிதி ஒதுக்காத தவெக அரசைக் கண்டித்து திமுக கவுன்சிலர்கள் கருப்பு உடை அணிந்து வருகை தந்தனர். வார்டுகளிலுள்ள தெருக்கள், குடிநீர் வசதி மற்றும் வடிகால் போன்ற உள்ளூர் தேவைகளை விரைவாக நிவர்த்தி செய்ய பெரிய திட்டங்களுக்குக் காத்திருக்காமல், சிறிய அளவிலான அவசரப் பொதுப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வார்டு கவுன்சிலர்கள் அல்லது வார்டு உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் ஒரு குறிப்பிட்ட நிதி வார்டு மேம்பாட்டு நிதியாகும்.
சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் கடந்த ஜூலை 29-ந் தேதி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றபோது வார்டு வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து உறுப்பினர்கள் விளக்கினர். இதில், 2026-27-ஆம் ஆண்டிற்கான வார்டு மேம்பாட்டு நிதி இதுவரை ஒதுக்கப்படவில்லை என திமுக, அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்த வார்டு கவுன்சிலர்கள் அடுத்தடுத்து குற்றஞ்சாட்டினர்.

இதுகுறித்து பேசிய கவுன்சிலர்கள், “கடந்த மார்ச் மாதம் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக கவுன்சிலர்கள் மேம்பாட்டு நிதி நிறுத்தப்பட்டது. தற்போது புதிய அரசு பொறுப்பேற்று 3 மாதங்களாகியும் இதுவரை கவுன்சிலர் நிதி ஒதுக்கப்படவில்லை. வருகிற மார்ச் மாதத்துடன் கவுன்சிலர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் விரைந்து நிதி ஒதுக்க வேண்டும். கவுன்சிலர் மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படாமல் இருப்பதால் அடிப்படை பணிகளைக்கூட எங்களால் மேற்கொள்ள முடியவில்லை, எனவே விரைந்து கவுன்சிலர்களுக்கான வார்டு மேம்பாட்டு நிதியை ஒதுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.
அதற்கு பதிலளித்த மேயர் பிரியா, “கவுன்சிலர் மேம்பாட்டு நிதி, சென்னை மாநகராட்சி மூலதன நிதியில் இருந்து வழங்கப்படுகிறது. விரைந்து மேம்பாட்டு நிதி ஒதுக்க நகராட்சி நிர்வாக செயலரிடம் வலியுறுத்தப்படும்” என பிரியா தெரிவித்தார். சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் கடந்த ஜூலை 29-ந் தேதி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றபோது வார்டு வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து உறுப்பினர்கள் விளக்கினர்.

இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டதொடரில் போது நகராட்சி நிர்வாக செயலரிடம் மேம்பாட்டு நிதி ஒதுக்க வலியுறுத்திய நிலையில் இன்னமும் வார்டு மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படாததால், பொதுமக்களுக்கான எந்தவொரு அடிப்படைத் திட்டப் பணிகளையும் தங்களால் செய்ய முடியவில்லை என்பதை வலியுறுத்த வார்டு மேம்பாட்டு நிதி ஒதுக்காத தவெக அரசைக் கண்டித்து திமுக கவுன்சிலர்கள் கருப்பு உடை அணிந்து வருகை தந்து அவர்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.