ஜோசப் விஜய் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்தையும் மாற்றுவேன் என்று உறுதியளித்த அரசு பள்ளி மாணவர்கள் கழிப்பறை அடைப்பை எடுக்க பள்ளம் தோண்டிய வீடியோவை மேற்கோள் காட்டி என தமிழக கேள்வி எழுப்பியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த கேதாண்டப்பட்டியில் அரசினர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 6-ஆம் 12-ஆம் வகுப்பு வரை 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக செந்தில் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை நிரம்பி உள்ளதால், அதிலிருந்து வெளியேறும் கழிவு நீரை அப்புறப்படுத்த வேண்டி இருந்தது. இதனால் ஆசிரியர் செந்தில், அதே பள்ளியின் மாணவர்களை பணியில் அமர்த்தி பள்ளம் தோண்டச் செய்துள்ளார்.இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி பெரும் பேசு பொருளாகி வருகிறது.
இந்நிலையில், தமிழக பாஜக தனது சமூக வலைதள பக்கத்தில், கழிப்பறை அடைப்பை எடுக்கத்தான் அரசு பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிக்கு வருகிறார்களா..!? ஆட்சிக்கு வந்தால் அனைத்தையும் மாற்றுவேன் என்று உறுதியளித்த திரு. ஜோசப் விஜய் அவர்களே, இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா? என கேள்வி எழுப்பியுள்ளது.