சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி திமுக Gen z சரண் செயற்பாட்டாளர் ஜெயராமனை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து அவரை ஜாமினில் விடுவித்தார். தாம்பரத்தைச் சேர்ந்த சரண் ஜெயராமன் அமைச்சர் சரத்குமார் போதை மருந்து பயன்படுத்துவதாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவை அமைச்சர் மறுத்திருந்தார். இந்நிலையில் இந்த வீடியோவால் தனக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாக சரண் ஜெயராமன் கூறியிருந்தார். இவர் திமுகவின் ஜென் Z செயற்பாட்டாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் சரண் ஜெயராமன் தவெக பெண் நிர்வாகிகளை விமர்சித்ததாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவர் மீது பெண் நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு அவரது வீட்டின் மாடியில் வைத்து கொளத்தூர் காவல்துறையினர் சரணை கைது செய்தனர்.
இதையடுத்து அவரை இன்று மாலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர். அப்போது நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய போது திமுக Gen z செயற்பாட்டாளர் சரண் ஜெயராமன் கைது நடவடிக்கையை நீதிமன்றம் ரத்து செய்தது. திமுக Gen z சரண் செயற்பாட்டாளர் ஜெயராமனை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர் ஜாமினில் விடுவிக்கபட்டார்.