முதல்வரை அவதூறாகப் பேசிய வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்த தவெக அரசு தவெகவைச் சேர்ந்த பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணனை எப்போது கைது செய்யப் போகிறீர்கள்? என நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து, இடும்பாவனம் கார்த்திக் தனது எக்ஸ் பக்கத்தில், முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசிய வழக்கில், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனைக் கைதுசெய்திருக்கிறது தவெக அரசு. சிறப்பு! தவெகவைச் சேர்ந்த பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணனை எப்போது கைது செய்யப் போகிறீர்கள்? என இடும்பாவனம் கார்த்திக் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.