சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த இளங்கோ கெங்கவல்லி வட்டார கிராம வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வரும். இவர் கடந்த 4-ந் தேதி 12 மணி அளவில் தகரப்புதூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுலகத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது ஊராட்சி செயலாளர் மலர்விழி பணியில் இருந்து உள்ளார்.
அப்போது அனைத்து ஆய்வுகளும் சரி செய்து பார்த்தக் கொண்டு இருந்தபோது தகரபுதூர் பகுதியில் ஆரம்ப கிராம சுகாதார செவிலியராக பணியாற்றும் கூடமலை பகுதியை சேர்ந்த திராவிட மணி என்பவர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் எங்களுக்கு ஊசி போடுவதற்கும் பொதுமக்களிடம் மருத்துவ பரிசோதனை செய்வதற்கு சரியான இடமில்லாததால் மருத்துவ வசதி பார்க்க முடியவில்லை.
மேலும் பழைய இடமும் சரியில்லை. ஆகையால், ஒரு இடம் வேண்டுமென்று கேட்டுள்ளார். அப்பொழுது உங்கள் பழைய இடத்தை காட்டுங்கள் பார்க்கலாம் என்று அந்த பழைய இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது வட்டார கிராம வளர்ச்சி அலுவலர் இளங்கோ BP டெஸ்ட் எடுக்கும் கருவி உள்ளதா என்று கேட்டுள்ளார். அதற்கு செவிலியர் திராவிட மணி இருக்கிறது என்று கூறியபோது வட்டார கிராம வளர்ச்சி அலுவலர் இளங்கோ தனக்கு BP டெஸ்ட் எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து செவிலியர் திராவிட மணி வட்டார கிராம வளர்ச்சி அலுவலர் இளங்கோ கையை பிடித்து டெஸ்ட் எடுத்துள்ளார். அப்போது செவிலியர் திராவிட மணியின் இடுப்பை பிடித்து கிள்ளியதாக கூறப்படுகிறது. உடனே சுதாரித்துக் கொண்ட செவிலியர் திராவிட மணி இதுபோன்ற வேலையெல்லாம் என்னிடம் செய்யாதீர்கள் என்றும் எச்சரித்தாக தெரிகிறது.
கடந்த 12 நாட்களாக இந்த விஷயத்தை வெளியே சொல்ல முடியாமல் தவித்து இருந்த செவிலியர் நேற்று முன்தினம் தனது தம்பி கடம்பூர் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கௌசல்யா மணிகண்டன் என்பவரிடம் வட்டார கிராம வளர்ச்சி அலுவலர் தன்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதை மிகுந்த வேதனையில் தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் நேற்று காலை 11 மணி அளவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று வட்டார கிராம வளர்ச்சி அலுவலர் இளங்கோவை பார்த்து ஏன் எங்க அக்காவிடம் இப்படி அநாகரிகமாக நடந்து கொண்டீர்கள் என்றும் கேட்டதாக தெரிகிறது.
அப்பொழுது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதத்தில் இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். மணிகண்டன் கிராம வளர்ச்சி அலுவலர் இளங்கோ கன்னத்தில் அறைந்ததில் கண் கண்ணாடி உடைந்து மூக்கில் அடிபட்டுள்ளது. உடனடியாக சக அதிகாரிகள் கெங்கவல்லி காவல்துறைக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் காவல்துறையினர் விரைந்து வந்து மணிகண்டனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் வட்டார கிராம வளர்ச்சி அலுவலர் இளங்கோ முதல் சிகிச்சைக்காக கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து அரசு அதிகாரியை வேலை நேரத்தில் அவரை தாக்கியதாக மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த தகவல் அறிந்த திராவிட மணி உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று கடந்த 4-ந் தேதி வட்டார கிராம வளர்ச்சி அலுவலர் இளங்கோ தன்னிடம் நாகரிகமாக நடந்து கொண்டதை புகாராக கெங்கவல்லி காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்துள்ளார். செவிலியர் திராவிட மணியின் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.