RCB அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பிளே ஆஃப் ஸ்பெலிஸ்ட் பேட்ஸ்மேனாக உருவாகி இருக்கிறார். இதுவரை பிளே ஆஃப் சுற்றில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள ரஜத் பட்டிதார் ஒரு சதம், 2 அரைசதம் உட்பட 338 ரன்களை குவித்துள்ளார். இது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐபிஎல் 2026 சீசனில் குவாலிஃபையர் ஆட்டம் இமாச்சலப் பிரதேசம் தரம்சாலாவில் நேற்று நடைபெற்ற போட்டியில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை 92 ரன்களில் வீழ்த்தியது நடப்பு ஐபிஎல் சாம்பியனான RCB இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.
ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் இறுதிப்போட்டிக்கு ஐந்தாவது முறையாக நடப்பு சாம்பியன் ஆர்சிபி தகுதி பெற்று இருக்கிறது. தர்மசாலாவில் நடைபெற்ற முதல் குவாலிபயர் போட்டியில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் நடப்பு சாம்பியன் ஆன ஆர்சிபி அணி பல பரிட்சை நடத்தியது.

இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து துவக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஆர்சிபி வீரர்கள் வெங்கடேஷ் ஐயர், விராட் கோலி முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடினர். 1.6 ஓவர்களில் 21 ரன்கள் எடுத்து நிலையில் காகிசோ ரபாடா பந்து வீச்சில் வெங்கடேஷ் ஐயர் 7 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் என உட்பட 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து மூன்றாவது வீரராக களமிறங்கிய தேவதூத் பாடிக்கல் மற்றும் விராட் கோலியுடன் இணைய 8.2 ஓவர்களில் 93 ரன்கள் எடுத்து நிலையில் ஜேசன் ஹோல்டர் பந்து வீச்சில் விராட் கோலி 25 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உட்பட 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ரஜத் பட்டிதார் மற்றும் தேவதூத் பாடிக்கலுடன் இணைய 8.4 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்து நிலையில் ஜேசன் ஹோல்டர் பந்து வீச்சில் தேவதூத் பாடிக்கல் 19 பந்துகளில் 5 பவுண்டரிகள் உட்பட 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய குருணால் பாண்டியா மற்றும் ரஜத் பட்டிதாருடன் இணைய 16.1 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்து நிலையில் காகிசோ ரபாடா பந்து வீச்சில் குருணால் பாண்டியா 28 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய திமோதி டேவிட் மற்றும் ரஜத் பட்டிதாருடன் இணைய 17.6 ஓவர்களில் 214 ரன்கள் எடுத்து நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்து வீச்சில் திமோதி டேவிட் 5 பந்துகளில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஜிதேஷ் சர்மா மற்றும் ரஜத் பட்டிதாருடன் இணைய விளையாடி கேப்டன் ரஜத் பட்டிதார் 33 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் உட்பட 93 ரன்களும், ஜிதேஷ் சர்மா 5 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உட்பட15 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் குவித்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சு தரப்பில் காகிசோ ரபாடா மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் 2 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும் கைப்பற்றியிருந்தனர். இதையடுத்து 255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களம் இறங்கியது.

தொடக்க வீரர் கேப்டன் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் வழக்கம் போல் அதிரடி காட்டிய போது 2.3 ஓவர்களில் 17 ரன்கள் எடுத்து நிலையில் ஜேக்கப் டஃபி பந்து வீச்சில் சாய் சுதர்சன் 9 பந்துகளில் 3 பவுண்டரிகள் உட்பட 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் மற்றும் கேப்டன் கேப்டன் சுப்மன் கிலுடன் இணைய 3.1 ஓவர்களில் 27 ரன்கள் எடுத்து நிலையில் புவனேசுவர் குமார் பந்து வீச்சில் சுப்மன் கில் 7 பந்துகளில் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய நிஷாந்த் சிந்து மற்றும் ஜோஸ் பட்லருடன் இணைய 4.5 ஓவர்களில் 51 ரன்கள் எடுத்து நிலையில் ஜோஷ் ஹேசல்வுட் பந்து வீச்சில் ஜோஸ் பட்லர் 11 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மேலும் நிஷாந்த் சிந்து 5 ரன்களும் ஜேசன் ஹோல்டர் ‘ரன் ஏதும் இல்லாமல் டக் அவுட் வெளியேற பவர்பிளே முடிவில் 51 ரன்கள் எடுத்து நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி தடுமாறியது. ராகுல் தெவாட்டியா, 43 பந்துகளில் 68 ரன்கள் எடுக்க 19.3 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழக்க முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை 92 ரன்களில் வீழ்த்தியது நடப்பு ஐபிஎல் சாம்பியனான ஆர்சிபி அணி இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கேப்டன் ரஜத் பட்டிதார் அமைந்துள்ளார். சிறப்பாக ஆடிய ரஜத் பட்டிதார் 33 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் உட்பட 93 ரன்களை விளாசி தள்ளினார். ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் வரலாற்றில் ரஜத் பட்டிதாரின் ஆட்டம் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது. 2022 எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக 54 பந்துகளில் 12 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 112 ரன்கள்* விளாசி, ஐபிஎல் ப்ளே-ஆஃப்ஸில் சதமடித்த அன்-கேப்டு (Uncapped) வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். தொடர்ந்து குவாலிஃபையர் 2-வது போட்டியில் 42 பந்துகளில் 58 ரன்களை விளாசினார். இதன்பின் 2024 சீசனின் எலிமினேட்டர் போட்டியில் 22 பந்துகளில் 34 ரன்களை குவித்தார்.
அதேபோல் 2025 குவாலிஃபையர் முதல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான 8 பந்துகளில் 15 ரன்களையும், இறுதிப் போட்டியில் 16 பந்துகளில் 26 ரன்களையும், தற்போது 33 பந்துகளில் 93 ரன்களையும் குவித்துள்ளார். இதன் மூலமாக 6 இன்னிங்ஸில் 338 ரன்களை ரஜத் பட்டிதார் விளாசி இருக்கிறார். இதன் மூலமாக பிளே ஆஃப் சுற்றில் ரஜத் பட்டிதாரின் சராசரி 112.66ஆக உள்ளது. பிளே ஆஃப் சுற்றில் மட்டும் ரஜத் பட்டிதார் 25 பவுண்டரிகள் மற்றும் 24 சிக்சர்களையும் விளாசி இருக்கிறார். ஐபிஎல் பிளே போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரஜத் பட்டிதார் 4வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இதனால் ஆர்சிபி ரசிகர்கள் ரஜத் பட்டிதாரை பிளே ஆஃப் ஸ்பெஷலிஸ்ட் என்று கொண்டாடி வருகின்றனர்.