7 மாதங்களில் மட்டும் 110 லிட்டர் தாய்ப்பாலை கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைகளுக்கு காவியா தானமாக வழங்கினார். அதற்கு முன்பு வரை 7 மாதத்தில் 105 லிட்டர் தானமாக வழங்கியதுதான் சாதனையாக இருந்தது. இதனால் ‘கலாம் உலக சாதனை’ புத்தகத்தில் இடம் பிடித்த பட்டதாரி பெண்.
கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேடு பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி காவியா. இவரது கணவர் கிரிதரன் மென்பொருளாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். , காவியாவிற்கு என் முதல் ஆண் குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்துள்ளது. அதனால் அவனைப் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்க வேண்டியதாக இருந்தது. அவனுக்கு தாய்ப்பால் தருவதற்காக பம்ப் மூலம் எடுத்துத் தந்துள்ளார். அப்போதுதான் காவியாவிற்கு ‘ஹைபர் லேக்டேட்டிங்’ என்ற அதிகப்படியாக தாய்ப்பால் சுரக்கும் நிலை இருப்பது தெரிந்தது.

தினமும் சுரக்கும் பாலை பிரத்யேக பம்ப் மூலம் உறிஞ்சி வெளியேற்றினால்தான் உடம்பில் பால் சுரப்பு நீடிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் தாய்ப்பால் தானம் குறித்து மருத்துவர்கள் எடுத்துரைத்த நிலையில், அதிகப்படியாக சுரக்கும் தாய்ப்பாலை அதே வார்டில் சிகிச்சையில் இருந்த மற்ற குழந்தைகளுக்கு தானம் செய்துள்ளார். அங்கு நிறைய குழந்தைகள் தாய்ப்பால் இல்லாமல் உயிருக்கு போராடுவதை அவர் கண்ணால் பார்க்க நேர்ந்துள்ளது. அந்த குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என தாய்ப்பாலை எனது கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் தானம் செய்யத் தொடங்கியுள்ளார்.
2023-ஆம் ஆண்டு 7 மாதங்களில் மட்டும் 110 லிட்டர் தாய்ப்பாலை கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைகளுக்கு காவியா தானமாக வழங்கினார். அதற்கு முன்பு வரை 7 மாதத்தில் 105 லிட்டர் தானமாக வழங்கியதுதான் சாதனையாக இருந்தது. இதனால் ‘கலாம் உலக சாதனை’ புத்தகத்தில் காவியா இடம் பிடித்துள்ளார்.