108 தேங்காய் உடை, 108 தோப்புக்கரணம் போடு இப்படியெல்லாம் சொல்லி அடிக்கடி கேட்டிருப்போம். லக்கி நம்பர் என்று சொன்னால் 777 சொல்லுவாங்க. பேய்களுக்கான நம்பர் எதுன்னு கேட்டால் 666 என்று சொல்வார்கள். அதை போல 108 க்கு பின்னால் என்ன அதிசயம் ஒளிந்திருக்கிறது.
மாலையில் 108 மணிகள், ஒரு மந்திரத்தின் 108 முறை உச்சரித்தல், 108 வகையான தியானங்கள், இந்திய மரபுகளில் 108 நடன வடிவங்கள், ஜென் குருக்கள் அணியும் ஜுஜுவில் (ஜெப மணிகள்) 108 மணிகள். 108 என்னும் எண் புத்த மதத்தில், ஹிந்து மதத்தில் புனிதமாக கருதப்படும் எண்ணாகும். வைணவர்களுக்கும் புனிதமாக 108 கருதப்படுகிறது. சூரிய நமஸ்காரங்களில் 12 ஆசனங்களைக் கொண்ட 9 சுற்றுகளாகச் செய்யப்படுகின்றன; இவற்றை பெருக்கும்போது 108 என்ற எண் கூடுகிறது.
விஷ்ணுவின் 108 திவ்யதேசம் என்று கூறுவார்கள். 108 விஷ்ணுவின் கோவில்களை உள்ளடக்கியதாகும். மொத்தம் இருக்கும் நான்கு திசைகளிலும் 27 நட்சத்திர கூட்டம் உள்ளது. இங்கேயும் 108 என்பது வருகிறது. 12 ராசிகள் 9 கோள்களை சேர்க்கும் போதும் 108 எண் வருகிறது. பரதநாட்டியத்தில் உள்ள கரணங்களின் எண்ணிக்கை 108 ஆகும். நம்முடைய கோவில்களில் உள்ள சிற்பங்களில் இதை காணலாம். நான்கு வேதங்களில் உள்ள உபநிஷதங்களும் 108 ஆகும். ரிக் வேதத்தில் 10, யஜூர் வேதத்தில் 51, சாம வேதத்தில் 16, அதர்வண வேதத்தில் 31 என்று மொத்தம் 108 உள்ளது.
பூமிக்கும் நிலவுக்குமான தூரம் நிலவின் விட்டத்தில் 108 மடங்கு கூடுதலாகும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள தூரம் சூரியனின் விட்டத்தை விட 108 மடங்கு கூடுதலாகும். சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம், சந்திரனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு ஆகும் – ஆனால் நாசாவின் கூற்றுப்படி, இது மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே நிகழ்கிறது, ஒரு லீப் ஆண்டில் உள்ள நாட்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்வோம் – 366 நாட்கள். இந்த 3 எண்களையும் பெருக்கும்போது நமக்கு 108 ( 3 x 6 x 6 = 108) கிடைக்கும்.
புத்தர்கள் முக்தி அடைவதற்கு 108 படிகளை தாண்டி செல்ல வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஜப்பானில் ஷிண்டே சமயத்தில் புத்தாண்டு கொண்டாடப்படும் போது 108 முறை மணியை அடிப்பார்கள். இதனால் மனிதர்களின் பாவம் போகிறது என்று நம்பப்படுகிறது. முக்திநாத் என்னும் இடத்தில் 108 நீரூற்றுகள் இருக்கின்றன. உத்திரகாண்டில் 108 சிவசன்னதிகள் இருக்கின்றன.
மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சை விடுகின்றான். ஒரு மணி நேரத்திற்கு 60×15 என்ற கணக்கில் பார்த்தால் 900 முறையாகும். இதுவே ஒருநாளைக்கு இந்த கணக்கை போட்டால் 15x60x24 என்னும் போது 21,600 முறை என்று வருகிறது. இந்த கணக்கை இரவு பகல் என்று பிரித்து பார்த்தால் 10,800 முறை வருகிறது. நம் உடலில் உள்ள பிரஷர் பாயின்ட் 108 உள்ளது. நம் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் தாங்கக்கூடிய அளவானது 108°F ஆகும். அதற்கு பிறகு வரும் ஒவ்வொரு ஃபேரன்ஹீட்க்கும் நம் உடலில் உள்ள செல்கள் இறந்துவிடுமாம்.
நம் வாழ்வில் 108 என்ற எண் தோன்றும்போது, நாம் நீண்ட காலமாக விரும்பிய ஒரு இலக்கையோ அல்லது சாதனையையோ அடையப் போகிறோம் என்று அது குறிக்கலாம். 108 என்ற எண், 1, 0 மற்றும் 8 ஆகிய தனித்தனி எண்களைக் கொண்டுள்ளது.
எண் 1, அதிகாரம் மற்றும் தலைமைத்துவத்தைக் குறிக்கிறது. அது புதிய தொடக்கங்கள், முன்முயற்சி எடுத்தல் மற்றும் முன்னேற்றத்திற்கான ஒரு புதிய பாதையில் பயணித்தல் ஆகியவற்றையும் குறிக்கிறது.
எண் 0, ஒரு மர்மமானதாகும், ஏனெனில் அது சூனியத்தையும் நித்தியத்தையும் ஒருங்கே குறிக்கிறது. ஆனால், மற்ற எண்களுடன் இணையும்போது, அது அந்த எண்களின் அதிர்வுத் தாக்கத்தை மேலும் பெருக்கும்.
எண் 8 , சக்தி, செல்வாக்கு, செழிப்பு, சாதனை மற்றும் விரும்பிய விளைவுகளை வெளிப்படுத்தும் ஆற்றல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. இந்த அதிர்வு நம் வாழ்வில் மேலோங்கும்போது, நாம் தேர்ந்தெடுத்த விருப்பத் துறையிலோ அல்லது நமது தொழில் வாழ்க்கையிலோ பெரும் செல்வாக்கைச் செலுத்த முடியும் என்று எதிர்பார்க்கலாம்.
கடைசியாக, நாம் அவசரகாலத்தில் கூப்பிடும் ஆம்புலன்ஸ் எண்ணும் 108 என்பதாகும். இந்த 108 என்னும் எண் ஆன்மீகத்தில் மட்டுமில்லாமல், அறிவியல், கணிதம் என்று எல்லா இடங்களிலும் முக்கியத்துவம் பெற்று இருப்பதை காணலாம். இது தற்செயலாக அமைந்துள்ளதா இல்லை ஏதோ பிரபஞ்ச ரகசியத்தை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறதா என்பது புலப்படவில்லை.