மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி வீடு வீடாக, விநாயகர் சிலைகளை கைகளில் ஏந்திக்கொண்டு, இந்துக்களின் வீடுகளில், இஸ்லாமிய சகோதரர்கள் வழங்கி சென்றது சம்பவம் காண்போரை சிலிர்க்க வைத்தது.. சென்னை, சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி உள்ளிடட முக்கிய நகரங்களில் பல அடி உயரத்தில் பிரம்மாண்டமாக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக காவல் துறை பதற்றமான இடங்களில் அதிகளவு குவிக்கப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில், கிருஷ்ணகிரியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கிருஷ்ணகிரியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. இங்கு ஒவ்வொரு வருடமும் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மிலாடி நபி குழு சார்பில் பூஜை பொருட்கள் வழங்கி வருவது வழக்கம்.

கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டியில் மிலாடி நபி குழு தலைவர் அஸ்லம் தலைமையில் இஸ்லாமியர்கள் வீடு, வீடாக சென்று ஒரு அடி விநாயகர் சிலைகள், ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம், கற்பூரம், ஊதுப்பத்தி, பூக்கள் அடங்கிய தட்டுக்கள் வழங்கப்பட்டன. வீடு வீடாக, விநாயகர் சிலைகளை கைகளில் ஏந்திக்கொண்டு, இந்துக்களின் வீடுகளில், இஸ்லாமிய சகோதரர்கள் வழங்கி சென்றது காண்போரை சிலிர்க்க வைத்தது..