திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்படுவதாக குற்றம் சாட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் அதிகம் வாழும் பகுதி இந்த பகுதியில் விவசாய தொழிலை தவிர வேறு எங்கும் இல்லை. தொழிற்சாலைகளும் வேறு வருமானம் தரக்கூடிய வேலைகளும் இங்கு இல்லை. இந்த பகுதியில் விவசாயிகள் அதிகமான கால்நடைகள் வளர்க்கின்றார்கள்.
இப்பொழுது ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு பாசன வாய்க்கால்கள் ஆறுகள் குளங்களில் தண்ணீர் இருந்தால் பொதுமக்கள் பயன்பாடு மட்டுமல்லாது கால்நடைகளுக்கும் பயன்படும். மேலும் குருவை சாக முடியும் நடைபெறும் இந்த ஆண்டு கர்நாடகாவில் இருந்து உரிய தண்ணீர் வழங்காதாலும் தமிழக அரசு ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்காததால் ஆங்காங்கே வயல்கள் கடும் வறட்சியில் உள்ளன. இதனால் குளங்கள் ஆறுகள் வாய்க்கால்கள் வறண்டு காட்சியளிப்பது மட்டுமின்றி கடுமையான குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும் தங்கள் கால்நடைகளுக்கு தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. ஆகையால் குளங்கள் ஆறுகளில் வாய்க்கால்களில் உள்ள தண்ணீரை இறைக்கும் மீன் பிடிக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி பகுதியில் குடிதண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த கஷ்டப்படுவதாக நடப்பு சட்டமன்ற கூட்டத்தில் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து கையெடுத்து வணங்கி தண்ணீர் கிடைக்க கோரிக்கை வைத்தார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் ஒன்றிய தலைவர் மூர்த்தி ஆகியோர் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜவகர் முன்னிலையில் காலி குடங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாகை எம்பி செல்வராஜ், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து, முன்னாள் எம்எல்ஏக்கள் பழனிச்சாமி, உலகநாதன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஜோசப், மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் வையாபுரி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராஜா, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் சரவணன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சுஜாதா உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டு காலி குடங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தண்ணீர் வேண்டும் என கோஷங்களை எழுப்பி 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாய தொழிலாளர் சங்கத்தினர் விவசாயிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்