முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளாலான ஜூன் 22 -ஆம் தேதி சென்னையில் புதிதாக 300 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்து தொடக்க விழாவிற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள் வரவழைக்கப்பட்ட பேருந்துகளை 3 நாட்கள் கழித்து இன்று முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், முதல்வரின் பிறந்தநாள் அன்று சென்னையில் புதிதாக 300 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்து தொடக்க விழாவிற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள் வரவழைக்கப்பட்டன.
ஆனால், கடந்த மூன்று நாட்களாக நிகழ்ச்சி நடைபெறாததால் 300 பேருந்துகளும் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் கிட்டத்தட்ட 900 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 3 நாட்கள் உணவு மற்றும் இருப்பிட வசதி இல்லாமல் சிரமப்பட்டதாக செய்திகள் வருகின்றன.
இது மட்டுமில்லாமல், ஏற்கனவே தாமதமான நிகழ்ச்சியை விரைந்து முடிக்காமல் முதல்வர் பேருந்தில் ஏறி வீடியோ எடுக்க, வெளியில் சுமார் 30 நிமிடங்கள் கடற்கரை சாலையில் பாதுகாப்பு நடவடிக்கை என்று மக்கள் நிறுத்தி வைக்கப்பட்டனர்.
மேலும், “ஏன் எங்களுக்கெல்லாம் வேலை இல்லையா?”* என்று காவலரிடம் ஒருவர் கேட்டது ஊடகத்தில் வெளியாகி உள்ளது. இந்த கேள்வி காவலருக்கானது மட்டும் அல்ல! முதல்வருக்கானது! என ஜெயக்குமார் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.