உதயநிதி ஸ்டாலினை வீட்டை விட்டு வெளியே காவல்துறையினர் அழைத்து வந்த அந்த பதற்றமான தருணத்தில், பக்கத்து வீட்டு பால்கனியில் நின்று வீடியோ எடுத்துக் கொண்டிருந்த விஜய்யின் நண்பருமான சஞ்சீவைப் பார்த்து திமுக தொண்டர்கள் கூச்சலிட்டு கொந்தளித்த சம்பவம் அப்பகுதியில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும், விவசாய கடனை முழுமையாக தவெக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தந்தது. இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், இன்று ஆடிப்பெருக்கு விழா. வழக்கமாக இன்றைய தினம் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும்.
ஆனால் இந்த ஆட்சியில் சரியான நடவடிக்கை இல்லாததால் தண்ணீர் வரவில்லை. இதுமட்டுமில்லை குறுவை பொய்த்துவிட்டது. சம்பா சாகுபடியும் நடைபெறுமா என விவசாயிகள் கவலையில் இருக்கிறார்கள். ஆனால் முதல்வர் விஜய் இதைப்பற்றி கவலைப்படாமல் நிர்வாக திறனற்று இருக்கிறார். திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை நமது தலைவரே நேரடியாக திறந்து வைத்தார். ஆனால் இப்போது ஜூன், ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டது. தண்ணீர் மட்டும் வரவில்லை.

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுபடி கூட ஜூன், ஜூலை மாதங்களில் 42 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் தந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரலை. அதைப் பற்றி விஜய் பேசாமல் மவுனமாக உள்ளார். அவரது எண்ணம் முழுக்க திமுக தலைவர்கள் மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்றே உள்ளது. அப்போது மேடையிலிருந்த தொண்டர்கள் சிலர் நடிகை த்ரிஷாவின் பெயரை சொல்லிக் கோஷமிட்ட நிலையில், அதற்கு உதயநிதி ஸ்டாலின் அளித்த இரட்டை அர்த்த விளக்கம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உதயநிதிக்கு எதிராக தஞ்சை காவல் நிலையத்தில் தஞ்சை மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கரந்தை மந்தாரடி தெருவை சேர்ந்த பைரவி என்பவர் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். முதல்வர் விஜய் குறித்தும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் உதயநிதி பேசியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக மகளிர் அணி தலைவர் பைரவி புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், BNS சட்டத்தின் பிரிவு 196- பொது அமைதியை கெடுத்தல், 192- கலவரத்தை தூண்டும் வகையில் ஆத்திரம், 79 – பெண்களின் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்துதல்,352- வேண்டுமென்றே ஒருவரே அவமதித்தல், 296(b) ஆபாசமாக பேசுதல், 351(2)- மிரட்டல், BNS 61- குற்றவியல் சதி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு (4), தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67 ஆகிய 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை நீலாங்கரையில் உதயநிதி ஸ்டாலினின் இல்லத்திற்கு காலை 11 மணியளவில் காவல்துறையினர் கைது செய்து வீட்டை விட்டு வெளியே அழைத்து வந்தபோது, ஒருபுறம் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு காவல் வாகனத்தில் ஏறிச் சென்ற காட்சி ஊடகங்களில் பிரதான செய்தியாக ஒளிபரப்பான நிலையில், மறுபுறம் சஞ்சீவ், பால்கனியில் நின்று இந்த கைது படலத்தையும் திமுகவினரின் போராட்டத்தையும் வீடியோ எடுப்பதைக் கவனித்த அங்கிருந்த திமுக தொண்டர்கள் திடீரெனக் கொதித்தெழுந்தனர்.
சஞ்சீவின் வீட்டை நோக்கி கைகளை அசைத்து, எதுக்கு வீடியோ எடுக்குற?.. ஏய்.. ஏய்.. போனை வை கீழ.. பொண்ணுங்க இருக்கறப்ப எடுக்கிற.. செருப்பால அடிப்பேன்.. என்று சத்தமிட்டுக் கூச்சலிட்டனர். தொண்டர்களின் பலத்த எதிர்ப்பையும் கூச்சலையும் பார்த்த நடிகர் சஞ்சீவ், உடனடியாக வீடியோ எடுப்பதை நிறுத்திவிட்டு பால்கனியில் இருந்து வீட்டிற்குள் சென்ற சம்பவமும் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.