திருப்பூர் மாவட்டம், கொடிக்கம்பம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி நர்மதா என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் 108 அழைக்கப்பட்டது. விரைந்து வந்த 108 கர்ப்பிணி நர்மதா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. ஆனால் 108 -ல் செல்லும்போதே நர்மதா பிரசவ வலியால் துடித்துள்ளார்.
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே நர்மதாவிற்கு பனிக்குடம் உடைந்ததால் நிலைமை தீவிரமானது. இதனை புரிந்துகொண்ட ஆம்புலன்ஸ் உதவியாளர் ரஞ்சிதா, வாகனத்தை ஓரமாக நிறுத்தி துரிதமாகச் செயல்பட்டு பிரசவம் பார்த்துள்ளார். அதில் நர்மதாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தற்போது தாயும் சேயும் நலமுடன் உள்ளனர். இந்த சம்பவத்தில் சாமர்த்தியமாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் பணியாளர்களின் செயல் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.