நீலகிரி மாவட்டம் குன்னூர் கரும்பாலம் டபுள் போஸ்ட் பகுதியில் வீட்டில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு. உள்ளே ஒருவர் மாட்டிக்கொண்ட நிலையில் அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தால் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடியும் அவரை காப்பாற்ற முடியாமல் தீயில் கருகி உயிரிழந்த அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த கேத்தி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.