தமிழக முதல்வர் விஜய்க்கு நள்ளிரவு 12 மணிக்கு விஜய்யுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தை திரிஷா தனது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று தனது 52 வது பிறந்த நாளை கொண்டாடினார். விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அரசியல் தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். தவெக தொண்டர்களும் சமூக வலைத்தளங்களில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆக்கினர்.

விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகூறிய நிலையில், அவரது நெருங்கிய தோழி திரிஷா வாழ்த்து எதுவும் நேற்று கூறவில்லை என சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது. விஜய்யின் கடந்த பிறந்த நாளுக்கு முதல் ஆளாக வாழ்த்து கூறியிருந்த திரிஷா, இந்த பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறாமல் இருந்ததால் விஜய் ரசிகர்கள் வலைத்தளங்களில் விவாதித்தனர்.இன்ஸ்டகிராமிலும் விஜய்யை திரிஷா அன்பாலோ செய்ததாக பலரும் பதிவிட்டு வந்தது.
இந்நிலையில் திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில், விஜய்யின் பிறந்த நாளை நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டிகொண்டாடிய காட்சிகளை திரிஷா பதிவிட்டுள்ளார். தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் எல்லாவற்றையும் மதிப்புக்குரியதாக மாற்றும் நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனக்கூறி கேக் வெட்ட விஜய் தயாராக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். திரிஷாவின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.