இனி என்னுடைய ஆதரவு சீமானுக்கு தான் என்று விஜயலட்சுமி பேசுவது போன்ற ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவை தாண்டி அரசியல் வட்டாரத்தில் அடிக்கடி பேசப்படும் பெயராக விஜயலட்சுமி இருந்து வருகிறது. குறிப்பாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக அவர் கடந்த காலங்களில் வெளியிட்ட பல்வேறு கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில் விஜயலட்சுமி பேசுகையில், நான் இனி சீமானுக்கு சப்போர்ட் பண்ணுவேன் என்று கூறியிருக்கிறார். மேலும் எழுதி வச்சுக்கோங்க இந்த வீடியோவை நான் ஆகஸ்ட் 26-ந் தேதி 2026 இல் வெளியிடுகிறேன். வரும் இடைத்தேர்தலில் சீமான் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுவதாக கேள்விப்பட்டேன். அவர் அப்படி போட்டியிட்டால் நான் அவருக்கு சப்போர்ட் கொடுப்பேன்.
இனி என்னுடைய சப்போர்ட் அவருக்கு தான். உச்சநீதிமன்றத்தில் சொன்ன மாதிரியே அவரும் அவர் கட்சியினரும் பின்பற்றி வருகிறார்கள். ஆனால் நான் இதுவரைக்கும் விஜய் அண்ணா என்று அவருக்காக வீடியோ வெளியிட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அண்ணாவுடைய ரசிகர்கள் நீங்கள் என்னையே அசிங்கப்படுத்திட்டீங்க..
திரிஷாவுக்காக என்னை இழுத்து கேவலப்படுத்துறீங்களா? இது என்ன வகையில் நியாயம்? இனி என்ன நடந்தாலும் பரவாயில்லை நான் சீமானுக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன். அவர் ஜெயிக்கட்டும் அப்புறம் என்ன நடக்குதுன்னு பாத்துக்கலாம் என்று அந்த வீடியோவில் விஜயலட்சுமி பேசியது போல இருப்பது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.