பீகாரில் நடக்கும் “வாக்காளர் உரிமை யாத்திரை”யில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உடன் இணைந்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வாக்குகள் திருட்டு குற்றச்சாட்டை தெரிவித்தும், தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வாக்காளர் உரிமை யாத்திரை பேரணியில் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.







இன்று நடைபெற்று வரும் பேரணியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி ஆகியோர் பங்கேற்று இருக்கிறார்கள். திறந்த வாகனத்தில் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைந்து பேரணியாக சென்றார். அப்போது கூடியிருந்த பீகார் பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உற்சாகத்துடன் வரவேற்றனர். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.