திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை பூர்வீகமாகக் கொண்ட கணேசன். இவரது குடும்பத்தினர் கொக்கிரகுளம் மருத்துவமனை பகுதியில் வசித்து வருகின்றனர். ஆனால் கணேசன் குடும்பத்தினருடன் வசிக்காமல், திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் ஆங்காங்கே வீதிகளில் தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு மேலப்பாளையத்தில் உள்ள பிரபல தியேட்டர் எதிரே உள்ள சாலையில் கணேசன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். திருநெல்வேலி மேலப்பாளையம் ஞானியப்பர் நகரைச் சேர்ந்த அப்துல் ரகீம் என்பவர் நள்ளிரவில் அந்த வழியாக சைக்கிளில் வந்த அப்பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில் பூரி மாஸ்டராக வேலை பார்த்து வரும் அப்துல்ரகீம். தூங்கிக் கொண்டிருந்த கணேசனின் சட்டைப் பையில் இருந்து 600 பணத்தை திருட முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் திடுக்கிட்டு எழுந்த கணேசன், அப்துல் ரகீமுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது ஆத்திரமடைந்த கணேசன், கீழே கிடந்த கல்லை எடுத்து அப்துல் ரகீமின் தலையில் பலமாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த அப்துல் ரகீம், அங்கிருந்து தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து மேலப்பாளையம் காவல்துறையின் வழக்குப்பதிந்து நள்ளிரவில் தப்பியோடி வேறு இடத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணேசனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.