2003-ஆம் ஆண்டு ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம் காரணமாக அரசு வேலைகள் முழுமையாக பாதிக்கப்பட்டு பயனாளிகள் பெரும் சிரமத்தை அனுபவிக்க நேரிட்டது. அப்போது இருந்த அரசானது மாதம் ரூபாய் – 4000 சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் 11356 நபர்களை இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்களை அரசால் பணி அமர்த்தப்பட்டது.
2009-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக இவர்கள் அனைவரும் சிறப்பு தகுதி தேர்வு நடத்தப்பட்டு பிறகு 2009-முதல் 2012 வரை படி படியாக பணி நிரந்தரம் செய்யப்பட்டது. தற்போது ஓய்வூதியம் பெறவேண்டுமானால் குறைந்த பட்சம் 10 ஆண்டு காலம் வரை பணியில் இருந்திருக்க வேண்டும் என்ற அரசாணையின் படி நாங்கள் பணியில் சேர்ந்த 2003-ஆம் ஆண்டு முதல் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டியும் பணியின் போது இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கிட வேண்டும் .
மேலும் முறையான மருத்துவ காப்பீட்டு வழங்கிட வேண்டும் எனவும் பல்வேறு வகையான கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்துடன் இணைந்த தமிழ்நாடு தற்காலிக இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் அதன் மாநில செயலாளர் க.தங்கமணி செயற்குழு உறுப்பினர் சி.இராஜேந்திரன் அவர்களும் இன்னும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினர் க. மாரிமுத்து அவர்களிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.