அரசுக்கு அதிக வருவாய் வரும் துறைகளில், ‘டாஸ்மாக்’ நிறுவனம், 4,830 கடைகள் வாயிலாக பீர் மற்றும் மது வகைகளை விற்று தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து கல்லா கட்டி வருகிறது. பாட்டில் விலை ஏறினாலும் மதுபானங்கள் விற்பனை மட்டும் குறைவது இல்லை. மேலும், மதுபோதைக்கு அடிமையாகி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. ஆண்கள் மட்டுமல்ல இளம்பெண்கள்கூட இதற்கு விதிவிலக்கு அல்ல.
‘டாஸ்மாக்’ கடைகள் செயல்படும் நேரம் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி போன்ற முக்கிய அரசு விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், தமிழகத்தின் பல இடங்களில் நேரக் கட்டுப்பாடு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் தங்கு தடை இல்லாமல் சரக்கு எப்படி கிடைக்கிறது என்ற ஒற்றை கேள்விக்கு ‘டாஸ்மாக்’ விற்பனையாளர்கள் அப்படியே பார்களுக்கு பெட்டி பெட்டியாக எடுத்து கொடுத்து ஒரு பணம் பார்க்கின்றனர் என்பதை அவர்கள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்வதை பார்த்து அறிந்து கொள்ளலாம்.
மேலும் டிஜிட்டல் முறையில் வந்த பிறகும் ‘டாஸ்மாக்’ கடைகளில் கூடுதலாக 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை பாட்டில்களுக்கு வசூலிக்கின்றார்கள் என்று ‘குடி’மகன்கள் புலம்புகின்றனர். இப்படி ‘டாஸ்மாக்’ ஊழியர்கள் மாத மாதம் பல லட்சம் ரூபாய் பாக்கெட்டில் நிரப்புவதாகவும் இதை கண்டு கொள்ளாமல் இருக்க அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் மாத மாதம் பணத்தால் சரிக்கட்டிக் கொண்டுள்ளார் என்பதும் தொடர்பான செய்திகளை நாம் தொடர்ந்து செய்தித்தாள்களில் பார்த்துக்கொண்டு உள்ளோம்.

மக்களைச் சுரண்டி திண்ணும் கொள்ளையர்களை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய செய்திகளை ஒரு சில செய்தியாளர்கள் இவர்களிடம் சென்று 50-ற்கும், 100-க்கும் பிச்சைக்காரர்களைப் போல பிச்சை எடுக்கும் செய்திகள் மிகுந்த வேதனை அளிக்கிறது. நம் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் நாம் நம்முடைய கடமைகளை மறந்து இதுபோன்ற சிலர் 50-ற்கும், 100-க்கும் பிச்சை எடுப்பதால் நாய்க்கு எலும்பு துண்டு போடுவதை போல வீசிவிட்டு அவர்கள் லட்சங்களில் கொள்ளை அடிப்பதில் விளைவு நாட்டில் லஞ்சமும் ஊழலும் பெருக்கெடுத்து ஓட நாடே சுடுகாடாக மாறிவிட்டது.
ஆகையால், சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து… தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ… தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா… அது திரும்பவும் வராம பாத்துக்கோ… என்ற பாடல் வரிகளை போல நாம் நம் கடமைகளை மறந்து வாழும் சிலர் இனிவரும் காலங்களில் நம் ஜனநாயக கடமையை உணர்ந்து மக்களைச் சுரண்டி பிழைக்கும் கூட்டத்தின் ஆட்டத்தை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுவோம் என்பதை மனதில் சுமந்து ஜனநாயகக் கடமையை ஆற்றுவோம்.