கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற விஜய்யின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக பலியான சம்பவத்தை அடுத்து அங்கிருந்து சென்னைக்கு செல்ல திருச்சி விமான நிலையத்திற்கு விஜய் வந்த போது செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றார்.
மேலும் விஜய் இதுவரை செய்தியாளர்களை சந்தித்ததே இல்லை. சில ஆங்கில ஊடகங்களில் நெறியாளர்கள் விஜய்யை நீலாங்கரை வீட்டில் சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர். ஆனால் அவர் இதுவரை பேட்டி ஏதும் கொடுக்கவில்லை. தற்போது முதல்வரான பிறகு கூட தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு, பெண் பாதுகாப்பு, கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் முதல்வர் விஜய் செய்தியாளர்களை சந்திக்கவே இல்லை என்ற விமர்சனம் உள்ளது.
முதல்வர் விஜய் எந்த கேள்விக்கு பதிலளிப்பதில்லை என திமுக குற்றம்சாட்டியது. மேலும் சட்டசபைக்கு சென்ற போது வாயை திறங்க சிஎம் சார் என பேட்ஜ் அணிந்து சென்றிருந்தனர். அப்போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உரையாற்றினார். குதிரை பேரம், பெண்கள் பாதுகாப்பு, தவெக ஆட்சியில் உள்ள சட்ட ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பினார்.
அடுத்த நாள் முதல்வர் விஜய் பேசத் தொடங்கினார். குதிரை பேரம், பெண்கள் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு குறித்து முதல்வர் பதிலளிப்பார் என்று எதிர்க்கட்சி எதிர்பார்த்த நிலையில், வழக்கமாக சினிமா மேடைகளிலும், தேர்தல் பிரச்சார மேடைகளிலும் குட்டி கதை சொல்லி வந்த விஜய் சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய ஜோசப் விஜய், “ஊரில் ஒரு பெரியவர், வெயில் அதிகமாக இருந்ததால், கண்ணுக்கு மேல் கையை வைத்துக்கொண்டு சுற்றி தேடிக்கொண்டிருந்தாராம். அப்போது கூட இருந்த சின்ன பையன், என்ன தேடுறீங்க என கேட்டபோது, அந்தப் பெரியவர், இல்லை தம்பி உங்க அப்பா இங்கத்தான் இருப்பாருனு சொன்னாங்க;
அதான் தேடுறேன். எங்க உங்க அப்பாவையே காணோம்” என்றாராம் எனத் தெரிவித்து, எங்களுக்கு நெக்கலும், நயாண்டியாக பேச தெரியும்” மேலும் மற்றும் பார்ட்டி ஃபண்ட் போன்ற தேவையில்லாதவைகளை பேசியாதல் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து தனது பேச்சை தொடர்ந்த முதல்வர் விஜய், வாயை திறங்க , வாயை திறங்க என்கிறார்கள், நான் பேச தொடங்கியதும் வெளியே சென்றுவிடுகிறார்கள் என ஜோசப் விஜய் பெரும் விவாதப் பொருளாக மாறியது.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை பற்றி சட்டமன்றத்தில் கிண்டல் செய்ததாக திமுகவினர் முதல்வரை கட்டம் கட்டி விமர்ச்சித்தனர். கடந்த ஜூன் 20-ந் தேதி தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரில் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய திருச்செந்தூர் திமுக சட்டப் பேரவை உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் தமிழக முதல்வர் குறித்து அவதூறான கருத்துகளைக் கூறியதோடு, ஒருமையில் பேசியதாக கூறி காவல்துறையினர் கைது செய்து நாள் முழுவதும் அனிதா ராதாகிருஷ்ணனை அலைக்கழித்து நள்ளிரவில் நீதிபதி ஜாமினில் விடுதலை செய்தார்.
இந்நிலையில் முதல்வரானதும் விஜய் முதல்முறையாக கரூர் சென்று அங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போதும் தான் பேசத் தொடங்கியதும் எதிர்க்கட்சியினர் வெளியே செல்ல தொடங்கிவிடுகிறார்கள். எனவே இனி நான் பேச ஆரம்பிக்கும் போது சட்டசபையின் அறைக் கதவுகளை அடைக்க வேண்டும் என ஜோசப் விஜய் பெரும் விவாதப் பொருளாக மாறியது.
இந்நிலையில், கோவில்பட்டியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, நாங்க என்ன கோமாளி பயல்கள்னு நினைக்கிறீங்களா.. சட்டமன்றத்தை பூட்டுவாராம்.. பூட்டினால் எலும்பு இருக்காது உடைத்துவிட்டுதான் உன்னை அனுப்பி விடுவோம். இவ்வளவு ஒரு கேவலமான ஒரு முதல்வரை தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய வரலாறே பெற்றது இல்லை. சட்டமன்றத்தில் உன் தகப்பனாரை தேடிக்கொண்டு இருக்கிறேன் என்று சொல்கிறாரே” என்று மிகவும் காட்டமாக ஒருமையில் விளாத்திகுளம் எம்எல்ஏ பேச அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு சமூக வலைத்தளங்களில் எழுந்தது.
இது குறித்து தூத்துககுடி தவெக வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் மற்றும் தாள முத்துநகர் வழக்கறிஞர் விஜி ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் பேரில், தூத்துக்குடி மாவட்ட் குற்றப்பிரிவு-1, குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜானகி, மார்க்கண்டேயன் மீது U/S 351(3), 352,353(2) BNS ஆகிய பிரிவுளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நேற்று காலை அவரை கைது செய்து நாள் முழுவதும் மார்க்கண்டேயனை அலைக்கழித்து நள்ளிரவில் நீதிபதி 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
முதல்வர் விஜய் சட்டமன்றத்தில், எங்கப்பா காணோம்” என்ற குட்டிக் கதையும், கரூரில் நான் பேச ஆரம்பிக்கும் போது சட்டசபையின் அறைக் கதவுகளை அடைக்க வேண்டும் என ஜோசப் விஜய் என்ற நக்கலான பேசும் திமுகவினரை கடுமையான பேச வைக்கிறது. அதன் பின்னர் தவெகவினரை வைத்து புகார் கொடுத்து சிறையில் அடைக்கும் செயல் தவெகவின் புதிய வியூகம் இருக்கிறது.
முதல்வர் விஜய் சட்டமன்றத்தில், எங்கப்பா காணோம்” என்ற குட்டிக் கதையும், கரூரில் நான் பேச ஆரம்பிக்கும் போது சட்டசபையின் அறைக் கதவுகளை அடைக்க வேண்டும் என ஜோசப் விஜய் என்ற நக்கலான பேசும் திமுகவினரை கடுமையான பேச வைக்கிறது. அதன் பின்னர் தவெகவினரை வைத்து புகார் கொடுத்து சிறையில் அடைக்கும் செயல் தவெகவின் புதிய வியூகம் இருக்கிறது.