ஜல்லிக்கட்டு ஜூலி இசையமைப்பாளர் தேவாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த ஜூலி வந்த போது தான், அவர் கர்ப்பமாக இருப்பது குறித்த தகவல்கள் இணையத்தில் பரவின. இதையடுத்து, கடந்த மே மாதம் ஜூலி செய்தியாளர்களை சந்தித்த போது, முதல் குழந்தையை இழந்துவிட்டதாக பேசி இருந்தார். அப்படி இருக்கும்போது, தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்றால், அனைக்கு ஜூலி சொல்லியது பொய் என அவரது கர்ப்பகாலத்தை கணக்கிட்டு மோசமாக விமர்சித்து ஜல்லிக்கட்டு ஜூலி தனது கர்ப்பம் குறித்து பரவி வரும் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.
இது குறித்து ஜல்லிக்கட்டு ஜூலி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், எல்லாருக்கும் வணக்கம். இது கொஞ்சம் நீளமான வீடியோதான். ஆனால், ரொம்ப முக்கியமான வீடியோ. நேற்று முழுவதும் வல்கர் வாரியர்ஸ் உட்கார்ந்து என்னுடைய கடைசி மாதவிடாய் சுழற்சியை வைத்து, நான் எத்தனை மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கணக்கிட்டு கொண்டிருக்கிறீர்கள். ஒரு பெண் கர்ப்பமாக இருந்தால், அவருக்கு எப்போது கடைசியாக மாதவிடாய் வந்தது, அதன் அடிப்படையில் எத்தனை மாதங்கள் ஆகின்றன என தெரிந்துகொள்ள இவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்களே.
உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சூப்பராக செய்துகொண்டிருக்கிறீர்கள். நான் ஏற்கெனவே ஒரு பேட்டியில் இதுகுறித்து தெளிவாக சொல்லியிருக்கிறேன். அந்த பேட்டியை சரியாக பாருங்கள் மார்ச் மாதம் எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. மார்ச் 14-ந் தேதி நான் கமிஷனர் அலுவலகத்துக்கு புகார் கொடுக்க சென்றபோது, என் குழந்தையை இழந்துவிட்டோம். குழந்தையை இழந்த வலி என்னவென்று குழந்தையை இழந்தவர்களுக்குத்தான் தெரியும்.
மே மாதம் காலையில் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தேன். அதற்கு பிறகு மாலையில் பரிசோதனை செய்தபோது கர்ப்பப் பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என வந்தது. அதனால், இந்த விஷயத்தில் நான் அமைதியாக இருந்து என் வேலைகளை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இதுகுறித்த அறிக்கைகள் என்னிடம் இருக்கின்றன.
தற்போது ஊருக்கு வெளியே இருப்பதால், என்னிடம் இருக்கும் ஆதாரத்தை மட்டும் இப்போது காட்டுகிறேன். உங்களுக்கு எல்லாம் வெட்கமாக இல்லையா. ஏற்கெனவே ஒருவரை சைபர் புல்லிங் மூலம் கொன்றுவிட்டீர்கள். இப்போது அடுத்த டார்கெட் நானா? இன்னும் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் விமர்சனங்களுக்கெல்லாம் நான் விழுந்துவிட மாட்டேன் என ஜல்லிக்கட்டு ஜூலி எக்ஸ் பக்கத்தில் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது கடைசி மாதவிடாய் எப்போது வந்தது என்பது வரை இணையத்தில் கணக்கிட்டு, கர்ப்பம் குறித்துத் தேவையற்ற கேள்விகளை எழுப்புபவர்களுக்கு ஜூலி கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குழந்தை இழப்பு போன்ற உணர்வுபூர்வமான விஷயங்களை வைத்து விமர்சிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அவரது வீடியோவைப் பார்த்த பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஜூலியின் இந்தப் பதிலடி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.