சொல்லிய வண்ணம் செயல் என்பதை போல் சொல்லிலும் செயலிலும் அசத்தி வரும் சிறந்த அலுவலர் என்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குள் வருகின்ற அனைத்து பயனர்களையும் நேரம் நீட்டிக்காது தாமதிக்காது துரிதமான முறையில் சேவை நடத்திட தாமே களத்தில் நின்று வாகன உரிமம் விபத்து சார்ந்த பிரச்சனைகளை நடுநிலைத் தன்மையோடு செயல்படுத்துவதாகவும் பொதுமக்கள் கூறினர்.
மாவட்டத்தில் இவர் பொறுப்பு மேற்கொண்டதிலிருந்து ஓட்டுநர் உரிமம் பெற தகுதி இல்லாதவர்களை அனுமதிப்பதே இல்லை. விபத்துகளை தவிர்க்க சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வினை பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொதுமக்கள் பயணிக்கும் சாலைகள் என அனைத்து இடங்களிலும் நடத்தி வருவதாகவும் சாலை விதிகளை சரிவர கடைபிடிப்பதன் அவசியத்தையும் வாகன ஓட்டிகளிடம் அலுவலகத்தில் அன்போடு தெரிவிக்கின்றார். தவறிழைத்த ஒருவர் சாதகப்படுத்த முயற்சிக்கும் போது அதை ஏற்றுக்கொள்ளாதவராகவும் பாதிக்கப்பட்ட நபருக்கு உரிய நியாயம் கிடைத்திட வழிவகை செய்வதோடு துணிவும் நேர்மையும் உள்ளவர் என்றும் சமூக அலுவலர்களும் பொதுமக்களும் தெரிவித்தனர்.

நாமும் மாவட்ட அளவில் அசத்தி வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் பரபரப்பாக தனது பணியில் மும்முரமாய் இருந்தார் இந்தியா பஸ்ட் மாத இதழ் சார்பாக அவரைக் குறித்தும் அவர் கடந்து வந்த பாதையையும் வினவினோம். அவரும் இன் முகத்தோடு நம்முடன் பேச துவங்கலானார். சென்னை வடபழனியை பூர்வீகமாகக் கொண்ட நெடுஞ்செழிய பாண்டியன் தாய் தந்தையரால் ஒழுக்க சீராகவும் ஆன்மீக பற்றுடையவராகவும் மிகவும் கண்டிப்புடனும் வளர்க்கப்பட்டதாகவும் தந்தை எம் எஸ் குருசாமி, தாய் முத்துலட்சுமி அம்மையார். சென்னையில் பம்மலில் உள்ள பாலிடெக்னிக் படிப்பை நல்ல முறையில் தேர்ச்சி பெற்று பிறகு சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பிபிஏ வெற்றிகரமாக நிறைவு செய்து இத்துறையில் கால் பதித்தார்.
இவர் சார்ந்த குடும்பமும் சாலை போக்குவரத்து துறையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட குடும்பமாகும். அதனால் அனுபவரீதியிலேயே சாலை போக்குவரத்து சார்ந்த துறையில் மிகுந்த அறிவாற்றலை வளர்த்துக் கொண்டதோடு எவ்வித சவால் இருப்பினும் அதனை சமயோசிதமாக கையாளும் திறன் கொண்டவராகவும் பணிபுரிந்த இடங்களில் எல்லாம் சிறப்புடன் செயல்பட்டதோடு சிறந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர் என்று நற்பெயரோடு போற்றப்படுகிறார். அவரிடம் துறை குறித்து பேசலானோம்.அதற்கு அவர் நம்மிடம் உணர்வு பூர்வமாக மேலும் பேச துவங்கினார்.
28 வருட எனது பணி அனுபவத்தில் கோவில்பட்டி உளுந்தூர்பேட்டை, தற்சமயம் நாகப்பட்டினம் சாலை போக்குவரத்து அதன் மிக முக்கிய சேவைகள் என்ன? என்பதையும் எனது இந்த புனித பணியில் ஆர் டி ஓ என்பதை தாண்டி எப்படி பொதுமக்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என உணர்ந்தவன் உயர்ந்தவன் அல்ல ஒருபோதும் அப்படி நினைப்பதும் இல்லை என கூறினார். மனித உயிர் என்பது சாதாரணமல்ல அதுவும் குறிப்பாக சாலை விபத்துகளின் ஏற்படும் உயிர் சேதங்களை தடுத்திடுவதே எனது முதல் குறிக்கோள் ஆகும். பொதுமக்கள் சேவை இன்றியமையாதது நம்மால் அவர்களுக்கு எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ அவ்வளவு நன்மை செய்திடல் வேண்டும். விருப்பு, வெறுப்பு இல்லாத பணியினை பண்புடனும் அன்புடனும் நேர்மையுடனும் அவர்களுக்கு சேவை புரிய வேண்டும்.

கடந்த கால விபத்துகளை கவனத்தில் கொண்டு அவ்வப்போது மக்களுக்கு சாலைவிழிப்புணர்வு குறித்த பணிகளும் தொடர்கிறது என்றும் சவால்களை சந்திக்க வேண்டிய நிலையும் அவ்வப்போது உருவாகும். அதிவேகப் பயணம், மது அருந்தி வாகனம் ஓட்டுவது, பேருந்துகளை முறைப்படி இயக்காமல் இருப்பது, வாகன ஒட்டிக்கொண்டே செல்போன் பேசுவது மற்றும் இருசக்கர வாகனங்களில் மூவர் நால்வர் என பயணிப்பது உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டுவது என நீண்டு கொண்டே போகும்.
சில நேரங்களில் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற நில் தயார் புறப்படு என்பதையும் அவ்வப்போது மறந்து விடுகின்றனர். சில நேரங்களில் பாதை சாரிகளை வாகன ஓட்டிகள் அனுசரிப்பது என்பது கிடையாது. எனவே சாலையில் நடந்து செல்வோர் நடைமேடை அல்லது சாலையின் வலது இடது புற பாதுகாப்பான பகுதியை பயன்படுத்த வேண்டும். ஓட்டுனர் உரிமம் வாகன பதிவு, தகுதி சான்று, அனுமதி பத்திரம், வரி வசூல், சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு ஆகியவற்றை முழு மூச்சாக இத்துறை அலுவலக ஊழியர்களும் இவருக்கு உந்து சக்தியாக செயல்பட்டு வருகின்றனர். வட்டார போக்குவரத்து ஊழியர்கள் தமது பணிகளை சரிவர செய்வதன் மூலம் பொதுமக்கள் இடையூறு இன்றி தங்கள் பணிகளை முடித்து செல்ல பிரதான காரணமாக இருக்கின்றார்கள் என்றும் அவர் கூறினார்.
தமிழக அளவில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சிறப்புடன் செயல்பட்டு வரும் சூழ்நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட வட்டார போக்குவரத்து துறையின் பணியும் மிகவும் சீரோடும் சிறப்போடும் செவ்வனே நடைபெற்று வருகிறது. சாலைப் போக்குவரத்து நம்முடைய அன்றாட வாழ்வில் எப்படி எளிதாக்குவது. அந்த சாலை விதிகளை சரியாக பின்பற்றுவது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை. TN_51 என்ற இலக்கு வரிசையை கொண்ட இந்த அலுவலகம் பல்வேறு சாதனைகளை படைத்து அதே நேரத்தில் புது புது சவால்களையும் சந்தித்து எதிர்கொண்டு சாலை விதிகளை சரியாக கடைபிடித்திட செய்து புனிதமான மனித உயிர்களை பாதுகாக்க அனைவரும் உறுதி மேற்கொண்டு நாகப்பட்டினம் மாவட்ட மக்களுக்கும் தமிழ்நாட்டு அரசிற்கும் மாண்புமிகு துறை அமைச்சருக்கும் போக்குவரத்து பாதுகாப்பு ஆணையர் அனைவருக்கும் பெருமை சேர்ப்பதோடு “விபத்து இல்லாத நாகை ” என்ற உயரிய நோக்கம் ஒன்றையே உணர்வு பூர்வமாக தான் வைத்திருப்பது.
மேலும் இந்த உயரிய நோக்கத்திற்கு பொதுமக்களும் முடிந்த அளவு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்று கூறினார். மிகுந்த உத்வேகத்துடனும் தலைமை பண்புடனும் கடை நிலை ஊழியர்களையும் அரவணைத்து சிறந்த முறையில் பணி செய்து வரும் வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியனை நமது இந்தியா பஸ்ட் மாத இதழ் சார்பில் இவரது நல்ல குறிக்கோள் வெற்றி பெற நாமும் மனதார வாழ்த்தி விடை பெற்று அங்கிருந்து புறப்பட்டோம்.