திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள உப்பிலியாபுரம், கோட்டப்பாளையம் கிராமத்தில் அரசு உதவி பெறும் கிறிஸ்தவ பழைமையான புனித லூர்து அன்னை பெண்கள் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி கிராமப்புற மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்கு மிக முக்கியப் பங்காற்றி வருவருவதால் திருச்சி மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், சேலம் மற்றும் சில மாவட்டத்திலுள்ள பல மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 52 வயதான ரமேஷ் என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். அவர் +2 படிக்கும் 17 வயதான மாணவி பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கடந்த வாரம் அந்த மாணவியை வாழைத் தோட்டத்திற்கு செல்லுமாறு சைகைக் காட்டியுள்ளார். அந்த மாணவியும் காவலாளி ரமேஷ் சொன்னது போல வாழைத் தோட்டத்திற்கு சென்று காவலாளியுடன் தனியாக பேசியதாக கூறப்படுகிறது.

இது குறித்து புகாரின் போரில் உப்பிலியாபுரம் காவல் ஆய்வாளர் மாரிமுத்து காவலாளி ரமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் காட்டுத்தீயாகப் பரவியதால் புனித லூர்து அன்னை பெண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர் அச்சம் அடைந்தனர். இதனை தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர் சிலர் தங்கள் மகள்களின் படிப்பை அந்த தொடர விரும்பாமல் மாற்று சான்றிதழ் பெறும் முனைப்பில் இறங்கினர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவியின் பெற்றோர் தங்களது மகளின் மாற்று சான்றிதழை இன்று பெற்ற சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.