எடப்பாடி பழனிசாமி எப்படியும் 14 முறை தோற்றிருப்பார். இருந்தாலும், ஒரு இடத்திலும் சத்யபாமா போல கண்கலங்கி அழுததில்லை.. ஸ்டாலினும்தான் கொளத்தூரில் தோற்றார்.. அதுக்காக இப்படியா நாடகம் நடத்திட்டு இருக்கார்? சத்யபாமா அழும் அளவுக்கு என்ன நடந்துவிட்டது? புலம்பி, அழுது, சிம்பத்தியாக பேசி, குதிரை பேரம் நடத்தி, சோபா அரசியல் செய்து, இப்படித்தான் தவெக பெயர் வாங்கியிருக்கிறது.. ? என அரசியல் விமர்சகர் கோடீஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில் திமுக, அதிமுக, தவெக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டியில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தலைவர்கள் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். தவெக வேட்பாளர்களுக்கு செல்லுமிடமெல்லாம் பிரச்சனை எதிர்ப்புகள் கிளம்புகிறது.
நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து நின்று தவெக யாரும் எதிர்பார்க்காத வகையில் 107 இடங்களில் வென்று, ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸ், இடதுசாரிகள், ஐயுஎம்எல், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவில் விஜய் முதலமைச்சரானார். இருப்பினும், அதிமுகவிலிருந்து சில எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு நேராக தவெகவில் இணைந்தனர். இப்படி இந்தவர்களில் ஒருவர்தான் தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா. எனவே இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலிலேயே ஜெயிச்சுட்டோம்.. இடைத்தேர்தலில் ஜெயிக்க மாட்டோமா என்று தவெகவினர் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கின்றனர்.

ஆனால், களத்தில் தவெகவுக்கு எதிரான அலை வீசத் தொடங்கியிருக்கிறது. காரணம், ஏற்கெனவே அதிமுக வேட்பாளராக ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சத்தியபாமா இப்போது கட்சி தாவிவிட்டார்.. இந்தமுறையும் ஜெயிக்க வைத்தால்.. மீண்டும் கட்சி தாவ மாட்டார் என என்ன நிச்சயம்? என்று கேள்விகள் எழத்தொடங்கி இருக்கின்றன.
தவெக நிர்வாகிகள் பிரச்சாரத்திற்கு போகும்போது.. முகத்தில் அடித்தது போல மக்கள் கேள்வி கேட்க தொடங்கி இருக்கிறார்கள். இது கட்சியின் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. தாராபுரம் அதிமுகவின் பெல்ட்.. இருப்பினும் இந்த தொகுதியில் ஆளும் கட்சியாக இருக்கும் தவெதான் ஜெயிக்கணும்.. ஒருவேளை தோற்றுவிட்டால்! தவெகவுக்கு இருக்கிற செல்வாக்கு குறைந்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் பிரச்சாரத்தை கையில் எடுத்துவிடும். எனவே இந்த விஷயத்தில் விஜய் சீரியஸாக இறங்கியிருக்கிறார்.
இப்படி இருக்கையில் நேற்று விஜய் பிரச்சாரத்திற்கு வந்திருந்தபோது, அவர் முன்னிலையில் சத்தியபாமா கண்கலங்கி நின்று மக்களிடையே ஓட்டு கேட்டார். “என்னை பெண் என்று கூட பார்க்காமல்.. அருவருக்கத்தக்க வகையில் பேசினார்கள். நான் தவறு செய்யவில்லை. அப்படி செய்திருந்தால்.. இப்படி தைரியமாக வந்து நின்றிருக்க மாட்டேன்” என்று கூறி கண் கலங்கினார். இதை பார்த்த முதல்வர் விஜய் சட்டென, சத்தியபாமாவின் தோளை பிடித்து ஆறுதல் படுத்தினார்.

இந்நிலையில், பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ள கோடீஸ்வரன், “தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக கட்சிக்கு சுதாரித்துக் கொள்ள முடியாத அளவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.. கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே தாராபுரம் தொகுதியில் 3-வது இடத்தைப் பிடித்தார்கள்.. 30 ஆயிரம் ஓட்டுகள் மைனஸில் இருந்தார்கள்..
ஆனால் தாராபுரம் தொகுதியில் ஒரு குண்டூசியை கூட நகர்த்தவில்லை.. கடந்த சில மாதங்களாக மக்கள் நலனுக்காக எந்தவொரு அடிப்படை மாற்றமும் செய்யப்படவில்லை. குடிநீர் தட்டுப்பாடு மற்றும் மின்தடை போன்ற பிரச்சனைகள் குறித்து மக்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல், வேட்பாளர் பிரச்சாரத்தின் போது தடுமாறுகிறார்..
சத்யபாமா கண்கலங்கி சொல்கிறார், “எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் சேர்ந்து துரோகம் செய்து பார்த்தார்.. ஆளுங்கட்சியுடன் சேர்ந்து நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தது தவறா?” என்கிறார்.. ஆளுங்கட்சியுடன் சேர்ந்துதான் நல்லது செய்யணுமா? தாராபுரத்தில் ஏன் தண்ணீர் வரல? ஒரு முதலமைச்சராக தாராபுரம் வரவில்லை என்கிறார் விஜய்.. அப்படியானால் போலீஸ், பந்தோபஸ்து, பாதுகாப்பு, பேரிகாடு எதற்காக?
துரோகம் செய்கிறார்கள் என்று இன்றைக்கு வந்து சத்யபாமா சொல்கிறார்.. தவெகவில் இணைவதற்கு முன்பேயே, தாராபுரத்தில் பத்திரிகையாளர்களை அழைத்து திமுக, அதிமுக கூட்டு வைத்திருக்கிறார்கள் என்பதை, அன்றே பகிரங்கப்படுத்தியிருக்கலாமே? அதற்குரிய தரவுகளை காட்டியிருக்கலாமே? இன்றைக்கு வரைக்கும் ஒரு ஆதாரத்தைகூட காட்டவில்லையே?
19 எம்எல்ஏக்களை சுயநலமாக எடுத்துள்ளது தவெதான்.. திமுக கூட்டணியிலிருந்து 13 எம்எல்ஏக்களை உருவி, சேர்த்துக் கொண்டது தவெகதான்.. ஐயுஎம்எல், காங்கிரஸ் உட்பட ஸ்டாலின் வெற்றி பெற வேண்டும் என்று பிரச்சாரம் செய்து, அங்கிருந்து 13 எம்எல்ஏக்களை சேர்த்து கொண்டீர்கள். 6 அதிமுக எம்எல்ஏக்களை குதிரை பேரம் செய்து, ராஜினாமா செய்ய வைத்து, சீட் தந்து, விசிலில் நிற்க வைக்கிறீர்கள். இதெல்லாம் அரசியலா?
சத்யபாமா அழும் அளவுக்கு என்ன நடந்துவிட்டது? எப்ப பார்த்தாலும், புலம்பி, அழுது, சிம்பத்தியாக பேசி, குதிரை பேரம் நடத்தி, சோபா அரசியல் செய்து, இப்படித்தான் தவெக பெயர் வாங்கியிருக்கிறது.. எடப்பாடி பழனிசாமி எப்படியும் 14 முறை தோற்றிருப்பார். இருந்தாலும், ஒரு இடத்திலும் சத்யபாமா போல கண்கலங்கி அழுததில்லை.. ஸ்டாலினும்தான் கொளத்தூரில் தோற்றார்.. அதுக்காக இப்படியா நாடகம் நடத்திட்டு இருக்கார்? கண்கலங்குவதிலேயே தவெகவின் தோல்வி பயம் தெரிகிறது.. இதுவே அதிமுகவுக்கு வெற்றிதான் என அரசியல் விமர்சகர் கோடீஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார்.