கனிமொழி வேண்டுகோள்: சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்..!

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நேற்று நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெயில், நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து மக்கள் கூட்டத்தை கண்காணிக்க தமிழக காவல் துறை தவறியதாக அதிமுகவும், பாஜகவும் குற்றம் சாட்டியுள்ளன.

இந்நிலையில், திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கனிமொழி: ஒன்றுமே செய்யாத மத்திய அரசுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும்…!?

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 253 -வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் இருக்கும் முழு உருவ சிலைக்கு தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் மற்றும் திமுக துணைப்பொது செயலாளர் கனிமொழி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் தான் ஒண்டி வீரன் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. திமுக ஆட்சியில் அருந்ததிய சமுதாயத்திற்கான மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் சிலரால் வழக்கு தொடர்ந்த போதிலும் அந்த வழக்கில் மிகப்பெரிய வெற்றியை முதலமைச்சர் பெற்று கொடுத்துள்ளார். வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் உழைக்கக்கூடிய அரசாக செயல்படுகிறது. மத்திய அரசின் பட்ஜெட்டில், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ஒதுக்க கூடிய நிதி ஒதுக்கப்படவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியும் ஒதுக்கப்படவில்லை.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதி முதல்வரால் கேட்டும் அது கிடைக்கப்பெறவில்லை என எதுவும் கிடைக்காத நிலையில், தமிழ்நாட்டுக்கு ஒன்றுமே செய்யாத மத்திய அரசுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும்? பாஜக உடனான திமுகவின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை. மக்களிடம் பழகும் போது எளிமையாக அன்பாக பழகக் கூடியவர் முதலமைச்சர். அதே வேளையில் தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக போராடும்போது தலைவர் கலைஞரைப் போல் உறுதியாக இருப்பார் கனிமொழி பேசினார்.

“ஆளுநர் ஏதோ ஒரு கட்சிக்காரர் போல் நடந்து கொள்ளும் பொழுது எதிர்க்கட்சிகளும் இப்படிதான் புறக்கணிப்பார்கள்..!”

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் மினி எம்பிஏ படிப்பில் பட்டம் பெற்ற 10 திருநங்கைகள் உட்பட 18 பேருக்கு பட்டமளிக்கும் விழா நடைபெற்றது. இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொது செயலாளருமான கனிமொழி கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார்.

அப்போது கனிமொழி எம்.பி. மேடையில் பேசுகையில், “இந்த பயணம் என்பது பல விஷயங்களை சொல்லி கொடுக்க கூடிய ஒன்று, ஒரு காலத்தில் திருநங்கைகள் ஒரு பாஸ்போர்ட் வாங்க வேண்டும் என்றாலும் வாங்க முடியாது. கல்லூரியில் சேர முடியாது, திருநங்கைகள் இருக்கிறார்கள் என்று எந்த அடையாளமும் இருக்காது. இந்த சமூகம் அவர்கள் மீது காட்டிய வேறு விதமான பார்வை தான் அதிகளவில் திருநங்கைகளை ஆபரேஷன் செய்ய வைத்தது.

திருநங்கைகள் கல்லூரிகளுக்கு செல்ல விரும்பினால் நீங்கள் ஆணா? பெண்ணா? என்று கேள்வி கேட்டு பதில் சொல்லாமல் அங்கேயே அவர்களது வாழ்க்கை முற்றுப்புள்ளியோடு நின்ற சூழல் இருந்தது. வாழ்வதற்கே, போராடிக் கொண்டிருப்பவர்கள் திருநங்கைகள். திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் செய்து கொடுத்த தலைவர்தான் கலைஞர். பெரியார் வழியில் வந்த இந்த ஆட்சி இன்று வரை அதை செய்து கொண்டிருக்கிறது.

இந்தக் கல்வி உங்கள் மீது ஒரு நம்பிக்கையை தரும். எங்களால் தலை நிமிர்ந்து நிற்க முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கக்கூடியது கல்வி. நீங்கள் பல பேருக்கு முன்னுதாரணமாக மாற முடியும். இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து மனிதர்களுக்கும் முன் உதாரணமாக இருப்பவர்கள் நீங்கள்” என கனிமொழி பேசினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்திப்பில் சந்தித்த கனிமொழி பேசுகையில், “கடந்த 2008 -ஆம் ஆண்டு, முதன்முதலாக தலைவர் கலைஞர்தான் திருநங்கைகளின் எதிர்காலத்திற்காக ஒரு அங்கீகாரத்தை கொடுத்தார். இந்த நாட்டிலேயே திருநங்கைகளை முதன்முதலாக அங்கீகரித்த மாநிலம் தமிழ்நாடு. சமீபத்தில் முதலமைச்சர் அவர்கள், திருநங்கைகள் மேலே படிப்பதற்கு தடை வந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கான படிப்பு மற்றும் ஹாஸ்டல் செலவை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்து உள்ளார்.

ஆளுநர் நடுநிலையாக இருக்க வேண்டும். அவர் ஏதோ ஒரு கட்சிக்காரர் போல் நடந்து கொள்ளும் பொழுது எதிர்க்கட்சிகளும் இப்படிதான் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவிப்பார்கள் என கனிமொழி பேசினார்.

மோடியின் கால் விரல் நகத்தில் உள்ள தூசுக்கு கூட சமமாக மாட்டீர்கள்…! மக்கள் போட்ட பிச்சையில் எம்பியாகியுள்ளீர்கள்…!

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது திமுக எம்பி கனிமொழி பேசிய போது, தமிழகத்தின் வரலாறு பிரதமர் மோடிக்கு தெரியுமா? நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்து அது சோழர் பரம்பரையில் இருந்து வந்ததாக சொன்னீர்கள். கண்ணகியின் கோபத்தால் பாண்டியனின் செங்கோல் தகர்ந்த கதை உங்களுக்கு தெரியுமா. எங்கள் மீது இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு சிலப்பதிகாரத்தை படியுங்கள். அதில் உங்களுக்கான பாடம் நிறைய உள்ளது. இவ்வாறு கனிமொழி பேசியிருந்தார்.

இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். அவர் என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் போது தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் பேசியது, சகோதரி கனிமொழி அவர்கள் முதலில் பெரியாரை பற்றி படிக்க வேண்டும். பெரியார் சிலப்பதிகாரத்தை பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த 1951 -ம் ஆண்டு ஜூலை 22 ஆம்தேதி சேலத்தில் ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் தந்தை பெரியார், கணவன் கோவலன் இறந்த நிலையில் கோபம் கொண்ட கண்ணகி ஒரு பக்கம் கொண்டையை எடுத்து மதுரை மீது எறிகிறாளாம். அது உடனே தீப்பிழம்பாக மாறி மதுரையையே சுட்டு எரித்துவிடுகிறதாம்.

இதை நம்ப முடிகிறதா. பாண்டியன் மன்னன் செய்த தவறுக்கு மதுரை மக்கள் சாம்பலாக வேண்டுமா. இதுதான் கற்புக்கரசிக்கு இலக்கணமா என பெரியார் கேள்வி எழுப்பியிருந்தார். எனவே பிரதமர் மோடியை சிலப்பதிகாரம் படிக்கச் சொல்ல வேண்டாம். பெரியார் சிலப்பதிகாரத்தை பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என நீங்கள் படியுங்கள்.

ஊழலுக்கு பிறந்தவர்கள் நீங்கள். சிறை சென்று திரும்பியவர்கள், 2ஜி முறைகேட்டில் சிக்கியவர்கள். கலைஞர் டிவியில் 3000 கோடி பணபரிவர்த்தனையில் சிக்கி சிறைக்கு சென்றவர். நீங்கள் எல்லாம் மோடியின் கால் விரல் நகத்தில் உள்ள தூசுக்கு கூட சமமாக மாட்டீர்கள். ஏதோ கருணாநிதி என்ற பெயர் இருப்பதால் மக்கள் போட்ட பிச்சையில் எம்பியாகியுள்ளீர்கள்.

நீங்கள் எல்லாம் பிரதமர் குறித்து பேசவே கூடாது. அவரை பற்றி நாடாளுமன்றத்தில் பேச எந்த தகுதியும் கிடையாது. பிரதமர் இரவும் பகலும் நாட்டு மக்களுக்காக உழைத்து வருகிறார். எதை படிக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அதனால்தான் திருக்குறளை படிக்கிறார், அதனால்தான் கனியன் பூங்குன்றனாரை படிக்கிறார். அதனால்தான் சிலப்பதிகாரத்தையும் படிக்கிறார் என மிகவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.

திருநாவுக்கரசர் சொன்னது: போயஸ் வீட்டில் சேலை இழுப்பு நாடகதிற்கு ஒத்திகை செய்தாராம் ஜெயலலிதா…!

மணிப்பூர் விவகாரம் குறித்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது கொதித்து எழுந்த கனிமொழி எம்பி மணிப்பூரில் திரௌபதியின் சேலைகள் உருவப்படுவதாக பேசியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார்.

அவர் பேசுகையில், மணிப்பூர் விவகாரம் குறித்து கனிமொழி இன்று பொங்குகிறாரே, அன்று 1989 -ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்த சம்பவத்தை மறந்துவிட்டாரா…? அவர் அவமானப்படுத்தப்பட்ட போது அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.

இதனால் கோபமடைந்த ஜெயலலிதா இனி இந்த அவைக்கு முதல்வராகத்தான் வருவேன் என சபதம் போட்டார். அப்படிப்பட்ட திமுக இன்று திரௌபதி குறித்து பேசுகிறார்கள். இது என்ன அநியாயம் என நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் நிர்மலா சீதாராமனின் தகவலுக்கு முதலமைச்சர் மு.க . ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஜெயலலிதாவின் சேலை கிழிப்பு சம்பவம் சட்டசபையில் நடைபெறவே இல்லை. இது ஜெயலலிதா போட்ட நாடகம் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதற்காக ஜெயலலிதா தனது வீட்டில் ஒத்திகை பார்த்ததாக அவருடன் இருந்த திருநாவுக்கரசரே தெரிவித்துள்ளார் என முதலமைச்சர் மு.க . ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஜெயலலிதா சேலை இழுப்பு விவகாரத்தில் திருநாவுக்கரசர் கூறியது, எம்ஜிஆர் இறப்புக்கு பிறகு நீண்ட ஆண்டுகள் கழித்து முதலமைச்சராக கருணாநிதி வந்தார். அப்படி முதலமைச்சரான போது அவரே நிதித்துறையையும் தன் வசம் வைத்துக் கொண்டார். 1989 -ம் ஆண்டு மே மாதம் மார்ச் 25 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த பட்ஜெட் காப்பியை அதிமுக எம்எல்ஏ கிழிக்க முயற்சித்தார். இதை உணர்ந்த கருணாநிதி இரு கைகளை பரப்பி பட்ஜெட் பேப்பரை எடுக்காத வண்ணம் குனிந்தபடியே தடுத்தார். அப்போது அவருடைய கண்ணாடி கீழே விழுந்தது. உடனே திமுகவினர் கருணாநிதியை மூக்கில் குத்தியதால்தான் அவரது கண்ணாடி கீழே விழுந்ததாக சொன்னார்கள்.

இதனால் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா மீது அடி விழுந்தது. எதிர்க்கட்சித் துணைத் தலைவரான என் மீது அடி விழுந்தது. கொறடா கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் கொறடா பின்னாடி இருந்தார். ஜெயலலிதாவுக்கு விழுந்த அடியில் பாதியை நான் வாங்கிக் கொண்டேன். என் உச்சி மண்டை வீங்கியது. ஜெயலலிதா குனிந்து கொண்டு கையை வைத்து படுத்துக் கொண்டார்.

ஓரளவுக்கு மேல் அடிப்பது குறைந்ததும் ஜெயலலிதாவை அழைத்துக் கொண்டு நாங்கள் வெளியேறினோம். ஆனால் ஜெயலலிதாவின் சேலையை எல்லாம் உருவினார்கள் என வதந்தி பரவியது. கருணாநிதி முகத்தில் குத்தும் விழவில்லை, ஜெயலலிதாவின் சேலையும் இழுக்கப்படவில்லை. ஆனால் சேலை இழுப்பு விவகாரத்தில் ஜெயலலிதா அவருடைய வீட்டில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்ததை நானே பார்த்தேன் என திருநாவுக்கரசர் எம்.எல்.ஏவாக இருந்த போது சட்டசபையில் கூறியிருந்தார்.

சட்டசபையில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா தலைமுடி கலைந்தபடியே வந்து தனது சேலையை துரைமுருகன் உருவியதாகவும் அங்கிருந்தவர்கள் எல்லாம் தன்னை பார்த்து சிரித்ததாகவும் கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார். ஆனால் இந்த சம்பவத்தை துரைமுருகன் மறுத்துள்ளார். கடந்த 2003 -ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது பட்ஜெட் விவாதத்தின் போது மீண்டும் இந்த பிரச்சினை எழுந்தது.

அப்போது பேசிய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இதே சட்டசபையில் எம்ஜிஆர் தாக்கப்பட்டார். அவர் மீது செருப்புகள் வீசப்பட்டன. 1989 இல் துரைமுருகன் என் சேலையை பிடித்து இழுத்தார். இதில் என் சேலை கிழிந்துவிட்டது. ஆளும் கட்சியினர் அப்போது என்னிடம் கண்ணியமாக நடந்து கொள்ளவில்லை என்றார். உடனே துரைமுருகன், நீங்கள் கூறுவது தவறு. நீங்கள் கூறும் இடத்தில் இருந்து நான் அதிக தூரத்தில் இருந்தேன் என தெரிவித்தார்.