அர்ச்சகர்களுக்கு கோவிட் -19 நிவாரண நிதி வழங்கல்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தொகுதிக்கு உட்பட்ட இந்து சமய அறநிலையத்துறையின் கீழ்வரும் கோயில்களில் பணியாற்றிவரும் மொத்தம் 56 அர்ச்சகர்களுக்கு கோவிட் -19 நிவாரண தொகை ரூ. 4000 மற்றும் 10 கிலோ அரிசி, 15வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் முன்னிலையில் சுற்றுலா துறை அமைச்சர் மா . மதிவேந்தன் வழங்கினார்.

தீ விபத்தில் சேதமடைந்த வீட்டிற்கு நிவாரணம்

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியமிளகு பாறை நாயக்கர் தெருவில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த வீட்டின் உரிமையாளர் ஜீவாசின்னத்துரை என்பவரது குடும்பத்தினரை அமைச்சர் கே.என் . நேரு நேரில் சந்தித்தார். அத்துடன் நிவாரண உதவியாக ரூ.20 ஆயிரத்துடன் அரிசி, மளிகை பொருட்களையும் வழங்கி ஆறுதல் கூறினார்.

24/7 செயல்படும் “மின்னகம்” என்ற புதிய மின் நுகர்வோர் சேவை மையம் திறப்பு


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று மின் தொடரமைப்பு தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் மின்துறை சார்ந்த புகார்களை தெரிவித்திட, 24/7 செயல்படும் “மின்னகம்” என்ற‌ மின் நுகர்வோர் சேவை மையத்தை திறந்து வைத்தார்கள்.


இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்பாலாஜி, உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத மேலாண்மை இயக்குநர் இராஜேஷ் லக்கானி‌ மற்றும் எரிசக்தி துறை முதன்மைச் செயலாளர் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

4-ம் வகுப்பு மாணவன் உண்டியல் சேமிப்பை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கல்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் புதிய ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் ஒன்றும், குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் ஒன்றும், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் கோவிட் -19 நிவாரண பொருட்கள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் வெ. கிஷோர் குமார் அவர்களின் மகன் அஹோபிளம் மஹரிஷி பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் கி.விபுல் கல்யாண் உண்டியல் சேமிப்பை 4000 கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்.

அன்பின் கரங்கள் நிறுவனம் சார்பில் இரண்டு ஆக்ஸிஜன் செரிவூட்டிகள் வழங்கல்


கொரோனா நிவாரண நிதியாக அன்பின் கரங்கள் தொண்டு நிறுவனம் சார்பில் இரண்டு ஆக்ஸிஜன் செரிவூட்டிகள் வழங்கபட்டது.

கிருஷ்ணவேணி செல்வராஜ்: முத்தான 30 நாட்களில் முதலமைச்சர் முக ஸ்டாலின் செய்த சாதனைகள்