கழிவு பஞ்சு மீதான வரியினை இரத்து செய்ததற்காக அனைத்திந்திய நெசவாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் நன்றி தெரிவிப்பு

தமிழ்நாட்டிலுள்ள நூற்பாலைகள் 1,570 இந்தியத் துணித் தொழில் வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கு தமிழக துணித் தொழில் வகிக்கிறது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள நூற்பாலைகளுக்குத் தேவையான பஞ்சின் அளவில் 95 விழுக்காடு பிற மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படுகிறது. தமிழ்நாடு வேளாண் பொருட்கள் விற்பனை சட்டம் 1987, பிரிவு 24-ன்படி, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சின் விற்பனை மதிப்பு மீது சந்தை நுழைவு வரியாக 1 விழுக்காடு விதிக்கப்படுகிறது.

மேற்படி சட்டத்தின்படி, பருத்திப் பொதி, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு ஆகியவை வேளாண் பொருட்களாகக் கருதப்பட்டு, தமிழ்நாட்டிலுள்ள சந்தைப் பகுதிகளில் கொள்முதல் அல்லது விற்பனை செய்யப்படும் பொழுது 1 விழுக்காடு வரி விதிக்கப்படுகிறது. சந்தை நுழைவு வரி என்பது, பருத்திப் பொதிகள் மீது மட்டுமே விதிக்கப்பட வேண்டும். மாறாக, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு போன்ற உற்பத்தி பொருட்கள் மீதும் 1 விழுக்காடு சந்தை நுழைவு வரி விதிக்கப்படுகிறது.

இதனால் வெளி மாநிலங்களிலிருந்து பஞ்சு கொள்முதல் செய்யப்படும் பொழுது சிறு, குறு நூற்பாலைகள் போக்குவரத்துக் கட்டணம் செலுத்துவதிலே பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பஞ்சின்மீது விதிக்கப்படும் சந்தை நுழைவு வரியை நீக்க வேண்டுமென்பது தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நெடு நாள் கோரிக்கையாக இருக்கிறது.

இதனைக் கருத்திற்கொண்டு, தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, பஞ்சு, கழிவுப் பஞ்சு மீதான ஒரு விழுக்காடு வரி இரத்து செய்யப்படுகிறது என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 14 -ஆம் தேதி அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.இதற்கு சேலம் – மேச்சேரி அனைத்திந்திய நெசவாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

சிறுபான்மை சமூகத்தினருக்கான சிறப்புத் திட்டங்கள் மற்றும் தொடர்புடைய தகவல்கள் அடங்கிய கையேடு வெளியீடு

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறுபான்மை சமூகத்தினருக்கான சிறப்புத் திட்டங்கள் மற்றும் தொடர்புடைய தகவல்கள் அடங்கிய கையேட்டினை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்ஃபோன்ஸ், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான், துணைத் தலைவர் டி. மஸ்தான், செயலாளர் தமிமுன் அன்சாரி, உறுப்பினர்கள் மௌர்ய குப்தா மற்றும் இருதயம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல் சீனிவாசன்: பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக வெற்றி …! ஒரு கை பார்க்காமல் விட மாட்டோம்….!

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக்கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு வி. மருதராஜ் முன்னிலை வகிக்க, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமை தாங்கினார். அப்போது திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசுகையில், பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக வெற்றி பெற்றுள்ளது.

தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் மட்டுமே என்பது போல் நிரூபணமாகியுள்ளது. இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவேன் என்றார்கள், தரவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள். செய்யவில்லை. கூட்டுறவு சங்கத்தில் வைக்கப்பட்டுள்ள தங்க நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றார்கள். தள்ளுபடி செய்யவில்லை.

அதிமுக ஆட்சியில் மானிய விலையில் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை ரத்து செய்யத் தயாராகி உள்ளனர். நடைபெறவுள்ள மாநகராட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். நாம் எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி, ஆளும்கட்சியை ஒரு கை பார்க்காமல் விட மாட்டோம் என தெரிவித்தார்

முன்னாள் அமைச்சர் தங்கமணி பரபரப்பு பேட்டி

அ.தி.மு.க. தலைமை செயலாளர் பி. தங்கமணி நாமக்கல்லில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,எருமப்பட்டி ஒன்றியக்குழு தலைவர் வருதராஜ் கொரோனாவால் இறந்தார், அதையொட்டி ஒன்றியக்குழு தலைவர் பதவி காலியானது. காலியான ஒன்றிய தலைவர் பதவி புதிய தலைவர் நியமனம் செய்ய மறைமுக தேர்தல் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 15 பேரில் 10 பேர் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக உள்ளனர். அவர்கள் தி.மு.க.வினரின் மிரட்டலுக்கு பயந்து கோவிலுக்கு சென்று விட்டனர். ஆனால் அவர்களை நான் கடத்தி சென்று விட்டதாக பொதுமக்கள் போர்வையில் கொடுக்கப்பட்ட மனுவில் என் மீது வழக்கு போட்டு தேர்தலை ரத்து செய்துள்ளனர். இதுதொடர்பாக காவல் கண்காணிப்பாளரை சந்தித்து கேட்டேன். அவர், மனுவை பரிசீலனை செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறினார்.

நான் சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் நாமக்கல்லுக்கு வந்தேன். அப்படி இருக்கும் போது நான் எப்படி ஒன்றியக்குழு உறுப்பினர்களை கடத்தி இருக்க முடியும். எப்போது ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் நடத்தப்பட்டாலும் அதில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். என் மீது புகார் அளித்தவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன் என தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் அவர்கள் தகவல் தொழில்நுட்ப நண்பன் வலைதளத்தை தொடங்கி வைத்தார்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று தகவல் தொழில்நுட்பவியல் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள “இ-முன்னேற்றம்” மற்றும் “தகவல் தொழில்நுட்ப நண்பன்” வலைதளம், “கீழடி-தமிழிணைய விசைப்பலகை” மற்றும் “தமிழி-தமிழிணைய ஒருங்குறி மாற்றி” தமிழ் மென்பொருள்கள் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

என்றும் மக்கள் பணியில் மலர்விழி பாபு திருப்பூர் மாவட்ட கவுன்சிலர்

திடீரென காரை நிறுத்தி மாணவிகளை சந்தித்த மு.க.ஸ்டாலின்…!

தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மைய புதிய கட்டிடம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி சென்றுள்ளார்.

இதனையடுத்து தருமபுரி மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 7 ஊராட்சிகள் மற்றும் சிறப்பாக கொரோனா பணியாற்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோருக்கு விருது மற்றும் கேடயங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் அதே நிகழ்ச்சியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசு சுகாதாரத் துறையின் பரிசு பெட்டகங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, பென்னாகரம் வட்டம் ஒகேனக்கலில் அமைந்துள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் ஒகேனக்கல் புறப்பட்டுச் சென்றார்.

அப்பொழுது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென காரை நிறுத்தி மாணவிகளை சந்தித்தார். பின்னர் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்கள், மாணவிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

பாஜக, காங்கிரஸுக்கு அடுத்து பலம் மிக்க கட்சியாக திமுக உருவெடுத்தது

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் ஏற்கனவே நாடாளுமன்ற மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர்களாக இருந்த கே.பி.முனுசாமி மற்றும் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து இருவரும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் தமிழகத்தில் இருந்து காலியான இரண்டு இடத்தை நிரப்ப இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது.

இந்த மாநிலங்களவை இடைத்தேர்தலில் கனிமொழி சோமு மற்றும் ராஜேஷ்குமார் ஆகிய இருவரை தி.மு.க. தனது வேட்பாளர்களாக நிறுத்தியது.இதனையடுத்து அதற்கான தேர்தல் நடைபெற்றால் ஒருவர் எம்பியாக தேர்வாக 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் தற்போது திமுகவிற்கு 159 எம்.எல்.ஏக்கள் மற்றும் அதிமுகவிற்கு 75 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். தி.மு.க.விற்கே வெற்றி வாய்ப்பு என்பதால், மற்ற அரசியல் கட்சிகள் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுகவின் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதன்மூலம் மாநிலங்களவைகான திமுக எம்.பிக்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது பாஜக மக்களவை 301, மாநிலங்களவை 94 என்று 395 எம்.பி.க்களுடன் முதலிடத்திலும், காங்கிரஸ் மக்களவை 52, மாநிலங்களவை 33 என்று 85 எம்.பி.க்களுடன் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றது. ஏற்கனவே திரிணமூல் காங்கிரஸ் மக்களவை 22, மாநிலங்களவை 12 என 34 எம்.பி.க்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கும் நிலையில், திமுக தற்போது மக்களவை 24, மாநிலங்களவை 10 என 34 எம்.பி.க்களுடன் சமமான இடத்தை பிடித்துள்ளது.

திருப்பூர் தெற்கு மாநகரம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் திமுக கொடி ஏற்றினார்

திருப்பூர் மத்திய மாவட்டம், தெற்கு மாநகரம்..47 வது வட்ட கழக செயலாளர் வெங்கட்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழக நிகழ்வில் மத்திய மாவட்ட கழக செயலாளரும் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் அவர்கள் கலந்து கொண்டு கழக கொடியை ஏற்றி வைத்தார்.

அதனை தொடர்ந்து விஜயாபுரம் அரசு பள்ளியில் நடைபெறும் தடுப்பூசி முகாமை பார்வையிட்டார்..தடுப்பூசி செலுத்தி கொண்ட பொது மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கினார். உடன் தெற்கு மாநகர செயலாளர் அண்ணன் டி.கே.டி.நாகராஜ், வடக்கு மாநகர செயலாளர் அண்ணன் ந.தினேஷ்குமார் பகுதி கழக செயலாளர் மேங்கோ பழனிச்சாமி..மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையம் தடுப்பூசி முகாமை சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் பார்வை

திருப்பூர் மத்திய மாவட்டம் தெற்கு மாநகரம் 42 வது வட்ட கழகத்தில் உள்ள பாரப்பாளையம் அரசு பள்ளியில் நடைபெறும் மாபெரும் தடுப்பூசி முகாமை மத்திய மாவட்ட கழக செயலாளரும் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் அவர்கள் பார்வையிட்டார்.

மேலும் புதிய குடிநீர் இணைப்புகளை பொது மக்கள் பயன்பாட்டிற்காக  சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் அவர்கள் திறந்து வைத்தார்.

உடன் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.நாகராஜ் வடக்கு மாநகர செயலாளர்  ந.தினேஷ்குமார் பகுதி கழக செயலாளர் மியாமி ஐயப்பன் பொறுப்பு குழு உறுப்பினர் வெங்கடாசலம் வட்ட கழக செயலாளர் S.R. ரமேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.