J. P. Nadda: ஓ.பன்னீர்செல்வம் மிகவும் திறமைவாய்ந்த மக்களுக்காக குரல் கொடுக்கு தலைவர்..!

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பரபரப்பான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா பரமக்குடியில் 3 கி.மீ. ரோடு ஷோ நடத்தி பிரச்சாரம் செய்தார்.

அப்போது, ரோடு ஷோ வில் பேசிய ஜகத் பிரகாஷ் நட்டா, ஓ.பன்னீர்செல்வம் மிகவும் திறமைவாய்ந்த தலைவர். தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பவர். அவருக்கு மக்கள் ஆதரவு நல்க வேண்டும். மிகச்சிறந்த தலைவரான ஓ.பன்னீர்செல்வத்திற்கு வாக்கு சேகரிப்பதில் நான் பெருமை அடைகிறேன்.

பன்னீர்செல்வத்தை டெல்லிக்கு அனுப்ப நீங்கள் தயாராகிவிட்டீர்கள் என்பது தெரிகிறது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 400 சீட்டுகளுக்கு மேல், பாஜக வெற்றி பெற ஓ.பன்னீர்செல்வத்திற்கு வாக்களிக்க வேண்டும். அப்போது தான் வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்க முடியும். ஏழைகளின் வாழ்வில் முன்னேற்றம் கொடுக்கக் கூடிய ஆட்சியாக மோடி அரசு உள்ளது. ஏழைகளுக்கு வீடு, மருத்துவக் காப்பீடு உள்பட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

ரேசன் கடைகளில் தனிநபர் ஒருவருக்கு தலா 5 கிலோ அரிசியும் பருப்பும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து பிரதமர் மோடி மீட்டெடுத்துள்ளார் என ஜகத் பிரகாஷ் நட்டாதெரிவித்தார்.

செல்லூர் ராஜு: பாஜக-வின் தேர்தல் படம் டிரைலர் தான் நல்லாருக்கும்..! ஆனா படம் சொதப்பிடும்…!

2024 மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, பாஜக-வின் தேர்தல் படம் டிரைலர் தான் நல்லாருக்கும்; ஆனா படம் சொதப்பிடும் என்றார். இங்கு போட்டி அதிமுக, திமுக-விற்கு மட்டுமே என்றும், 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது ஏன் காமராஜர் ஆட்சியை கொடுக்கவில்லை என்று செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். சொன்னதையே மோடி செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை கொச்சைப்படுத்திய அண்ணாமலை உடன் கைகோர்த்து வாக்கு சேகரிக்கிறார் ஓ.பன்னீர் செல்வம் என செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

Narendra Modi: பாஜக தொண்டர்கள் பக்கம் மொத்தம் தமிழ்நாடும் உள்ளது..!

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பரபரப்பான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக மீண்டும் தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்துள்ளார் . திருநெல்வேலி அம்பாசமுத்திரம் பகுதியில் நடைபெறும் பிரச்சாரத்தில் விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி தொகுதிகளில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கலந்துகொண்டார்.

அப்போது, “இந்தக் கூட்டத்தின் உற்சாகத்தையும் வரவேற்பையும் பார்த்து திமுக மற்றும் காங்கிரஸின் இண்டியா கூட்டணிக்கு தூக்கமே தொலைந்திருக்கும். உங்கள் ஆதரவுக்கு தலை வணங்குகிறேன். நேற்றுதான் நீங்கள் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடியிருப்பீர்கள். தமிழ் புத்தாண்டில்தான் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் தமிழகத்துக்கான பல திட்டங்கள் உள்ளன. மோடியின் உத்தரவாதம் என்று அதனை படிப்பவர்கள் பலரும் பாராட்டுகிறார்கள். ஒவ்வொரு பிரிவினரையும் யோசித்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த தமிழகம்தான் வளர்ந்த பாரதமாக மாறும் என்ற நம்பிக்கையோடு தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளோம்.

கடந்த 10 வருடங்களாக பாஜக மிகக் கடுமையாக உழைத்து நல்ல திட்டங்களை கொண்டுவந்துள்ளது. அதில் ஒன்று நெல்லைக்கான வந்தே பாரத் ரயில். அதனால் பலர் நன்மையை பெற்றுவருகின்றனர். தற்போது தெற்கிலும் புல்லட் ரயில் சேவை தொடங்க திட்டமிட்டு கொண்டிருக்கிறோம். புதிய அரசு அமைந்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் தாய்மார்கள் மோடியை ஆதரிக்கிறார்கள் என்று எல்லோரும் ஆச்சரியப்படுகின்றனர்.

அரசியல் வித்தகர்களுக்கு இதற்கான காரணம் தெரியவில்லை. காரணம் என்னவென்றால், தாய்மார்கள் படும் துன்பத்தை உணர்ந்து வைத்துள்ளேன். அதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றேன். தாய்மார்களுக்கு தொண்டு செய்ததால் எனக்கு இந்த அன்பு கிடைத்து வருகிறது. தமிழ் மொழியை, கலாச்சாரத்தை நேசிப்பவர்கள் பாஜகவையும் நேசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். தமிழ் மொழிக்கு உலக அங்கீகாரத்தை பெற்றுவருவதாக பாஜக தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் புராதன சின்னங்கள் உலகப் புகழ் பெறும். உலகம் முழுவதும் திருவள்ளூவர் பண்பாட்டு மையம் உருவாக்கப்படும்.

தமிழகம் இன்றைக்கு போதையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. குடும்ப அரசியலில் இருப்பவர்கள் போதையை ஊக்குவிக்கிறார்கள். அதிகாரம் மிக்கவர்களின் அனுமதியுடன் போதைப்பொருள் தலைவிரித்தாடுகிறது. போதைப்பொருள் என்கிற விஷம் தமிழகம் முழுவதும் பரவி உள்ளது. போதைப்பொருள் மாஃபியா யாருடைய பாதுகாப்பில் நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். நான் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டேன். போதைப்பொருளை இந்த தேசத்தை விட்டு ஒழிப்பேன்.

இந்தக் கூட்டம்தான் தமிழகத்தில் இந்தத் தேர்தலுக்காக நான் கலந்துகொள்ளும் கடைசி கூட்டம். இன்னொரு முறை உங்களை வந்து சந்திக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. இத்தனை முறை தமிழகம் வந்து உங்களை பார்த்ததில் பாஜக மட்டும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு அமோக ஆதரவு தருகிறீர்கள். பாஜக தமிழகத்தில் எங்கு இருக்கிறது என்று திமுகவும், இண்டியா கூட்டணி கேட்டார்கள். அவர்கள் வியக்கும் அளவுக்கு நீங்கள் பாஜகவுக்கு அமோக ஆதரவு தருவீர்கள். பாஜக வந்துவிடும் என்று அவர்கள் ஒரு பழைய பல்லவியை பாடுகிறார்கள். அவர்கள் சொன்ன வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

ஆனால், 24X7 மணி நேரமும் 2047 பற்றி தான் எனது சிந்தனை இருக்கிறது. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கக்கூடிய திமுகவுக்கு பயமும், பதற்றமும் வந்துவிட்டது. பேரலை போன்ற மக்களின் ஆதரவால் பயப்படுகிறார்கள். பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை தடுக்கும் அளவுக்கு பயப்படுகிறார்கள். பாஜக தொண்டர்கள் பக்கம் மொத்தம் தமிழ்நாடும் உள்ளது” என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Narendra Modi: “திராவிடத்தின் பெயரால் தமிழக பண்பாட்டை அழிக்க முயற்சி..!”

இண்டியா கூட்டணியில் திமுக, காங்கிரஸின் சித்தாந்தம் வெறுப்பினால் உருவாக்கப்பட்டுள்ளது. திராவிடத்தின் பெயரால் தமிழகத்தின் பாரம்பரியத்தை, பண்பாட்டை அழிக்க நினைக்கிறார்கள். அது செங்கோல், ஜல்லிக்கட்டு ஆகியவற்றை திமுக, காங்கிரஸும் எப்படி எதிர்த்தார்கள் என்பதிலேயே தெரியும். இந்தியாவின் தென் பகுதியில் இருக்கும் நெல்லை மண்ணில் பொங்கும் வீரமும், தேசப்பற்றும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாட்சியார் போன்றோர் எப்பேர்ப்பட்ட துணிச்சல் மிக்கவர்கள். இவர்கள் எல்லாம் வாழ்நாள் முழுவதும் ஆங்கிலேயே ஆட்சியை எதிர்த்து போராடினர். அதேபோல், சுதந்திர போராட்ட காலத்தில் முத்துராமலிங்க தேவரின் தாக்கத்தால் நேதாஜியின் படைக்கு இந்தப் பகுதியில் இருந்து ஏராளமான தமிழர்கள் சென்றார்கள்.

இவர்களின் கனவு எல்லாம், இந்தியா வலுவான, வளமான நாடாக விரும்பினார்கள். அதுபோலவே, தற்போது இந்தியா இன்று மதிக்கப்படுகிறது. ஜி20 மாதிரி உலகளாவிய நிகழ்வுகளால் இந்தியா பெருமை கொள்கிறது. இந்தியா மீது பற்று வைத்துள்ள ஒவ்வொருக்கும் பாஜகதான் பிடித்தமான கட்சி. பாஜக எப்போதும் தமிழ் மொழியையும், தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் மிகவும் நேசிக்கும் கட்சி.

அதனால்தான் தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் பாஜகவுக்கு மாபெரும் உற்சாகம் கிடைக்கிறது. இந்தியா தன்னிறைவு பெற வேண்டும் என நினைத்த இந்தப் பகுதியைச் சேர்ந்த வ.உ.சிதம்பரம் பிள்ளை தான் எங்களுக்கு ஊக்கம் கொடுக்கிறார். அவர் காட்டிய வழியில் தான் பாதுகாப்பு துறையில் இந்தியா தன்னிறைவு பெற்று வருகிறது. தமிழகத்தில் பாதுகாப்பு வழித்தடத்தை உருவாக்கியுள்ளோம்.

காமராஜர் தேசப் பக்தியும், நேர்மையும் கொண்ட மாபெரும் தலைவர். அவரை பின்பற்றி தூய்மையான அரசியலை பாஜக இன்று முன்னெடுத்து செல்கிறது. ஆனால், காங்கிரஸும் திமுகவும் காமராஜரை தொடர்ந்து அவமதித்து கொண்டிருக்கிறது. எங்களின் லட்சியம் தூய்மையான அரசியல். அதில் பயணிக்கும்போது எம்ஜிஆர் கனவுகளை தமிழகத்தில் முன்னெடுத்து செல்கிறது பாஜக. சட்டசபையில் ஜெயலலிதா அவமதிக்கப்பட்ட விதம் மறக்க முடியாது.

தேவேந்திர குலாளர் சமூகத்தின் கோரிக்கையை நிறைவேற்றியது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தான். திமுக, காங்கிரஸ் பல்வேறு தேச விரோத செயல்களை செய்து வந்தன. கச்சத்தீவை வேறு நாட்டுக்கு தாரைவார்த்தார்கள். கச்சத்தீவு விவகாரத்தில் இரு கட்சிகளும் திரைமறைவில் செய்த இந்த வரலாற்று பிழை மன்னிக்கவே முடியாத பாவம். ஏனென்றால், தமிழக மீனவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் செய்த இந்த தேச துரோகத்தை சமீபத்தில் பாஜக தான் அம்பலப்படுத்தியது.

தமிழகம் இன்றைக்கு போதையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. குடும்ப அரசியலில் இருப்பவர்கள் போதையை ஊக்குவிக்கிறார்கள். அதிகாரம் மிக்கவர்களின் அனுமதியுடன் போதைப்பொருள் தலைவிரித்தாடுகிறது. போதைப்பொருள் என்கிற விஷம் தமிழகம் முழுவதும் பரவி உள்ளது. போதைப்பொருள் மாஃபியா யாருடைய பாதுகாப்பில் நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். நான் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டேன். போதைப்பொருளை இந்த தேசத்தை விட்டு ஒழிப்பேன்.

இந்தக் கூட்டம்தான் தமிழகத்தில் இந்தத் தேர்தலுக்காக நான் கலந்துகொள்ளும் கடைசி கூட்டம். இன்னொரு முறை உங்களை வந்து சந்திக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. இத்தனை முறை தமிழகம் வந்து உங்களை பார்த்ததில் பாஜக மட்டும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு அமோக ஆதரவு தருகிறீர்கள். பாஜக தமிழகத்தில் எங்கு இருக்கிறது என்று திமுகவும், இண்டியா கூட்டணி கேட்டார்கள். அவர்கள் வியக்கும் அளவுக்கு நீங்கள் பாஜகவுக்கு அமோக ஆதரவு தருவீர்கள். பாஜக வந்துவிடும் என்று அவர்கள் ஒரு பழைய பல்லவியை பாடுகிறார்கள். அவர்கள் சொன்ன வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

ஆனால், 24X7 மணி நேரமும் 2047 பற்றி தான் எனது சிந்தனை இருக்கிறது. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கக்கூடிய திமுகவுக்கு பயமும், பதற்றமும் வந்துவிட்டது. பேரலை போன்ற மக்களின் ஆதரவால் பயப்படுகிறார்கள். பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை தடுக்கும் அளவுக்கு பயப்படுகிறார்கள். பாஜக தொண்டர்கள் பக்கம் மொத்தம் தமிழ்நாடும் உள்ளது” என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

மு.க.ஸ்டாலின்: யார் விசுவாசமான அடிமை என்பதில் இவர்களுக்குள்ளே சண்டை..!

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.இராசா மற்றும் திருப்பூர் தொகுதி வேட்பாளர் திரு. சுப்பராயன் அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, நாட்டையே பாழ்படுத்திய பா.ஜ.க.-வுடன் கள்ளக் கூட்டணி வைத்துக்கொண்டு பழனிசாமி வருகிறார். பழனிசாமிக்கும் ’தமிழ்நாடு பா.ஜ.க.வுக்கும்தான்’ பிரச்சினையே தவிர – அவருக்கும் மோடி – அமித் ஷாவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. யார் விசுவாசமான அடிமை என்பதில் வேண்டும் என்றால் இவர்களுக்குள்ளே சண்டையாக இருக்கலாம். ஆனால் எந்தக் காலத்திலும், பிரதமரை எதிர்த்து, ஒன்றிய பா.ஜ.க.வை எதிர்த்து, பழனிசாமியால் கட்சி நடத்தவும் முடியாது; அரசியல் நடத்தவும் முடியாது!

ஏன் என்றால், சசிகலாவிடம் இருந்து பன்னீர்செல்வத்தைப் பிரித்து தர்மயுத்தம் நாடகம் நடத்த வைத்ததே பா.ஜ.க.தான். சசிகலா சிறைக்குப் போன பிறகு, முதலமைச்சர் ஆன பழனிசாமியை – தங்கள் பக்கம் கொண்டு வந்ததும் பா.ஜ.க.தான். இரு துருவங்களாக இருந்த பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் ஒன்றுசேர்த்ததும் பா.ஜ.க.தான். தினகரனைக் கைது செய்து சிறையில் அடைத்து – அவரையும் தங்களுடைய அடிமையாக மாற்றியதும் பா.ஜ.க.தான். இன்று பன்னீர்செல்வத்தையும் தினகரனையும் மிரட்டித் தேர்தலில் நிற்க வைத்திருப்பதும் பா.ஜ.க.தான். சசிகலாவை அரசியல் பக்கம் வரக்கூடாது என்று தடுத்ததும் பா.ஜ.க.தான். பழனிசாமியைத் தனியாக நிற்கவைத்ததும் பா.ஜ.க.தான்.

இப்படி டிவி சீரியலில் தீடீர்தீடீர் என்று ஆட்களையும் காட்சிகளையும் மாற்றுகிற மாதிரி – சதிநாடகங்களை அரங்கேற்றி இருக்கிறது பா.ஜ.க. தலைமை! உறுதியோடு சொல்கிறேன்! இந்தத் தேர்தலில் நேரடி பா.ஜ.க.வும் மண்ணைக் கவ்வும்! பா.ஜ.க.வின் தொங்குசதைகளும் படுதோல்வி அடைவார்கள்! என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நாமக்கல் அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ .80 லட்சம் பறிமுதல்..!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் ஆவணமின்றி 50 ஆயிரத்திற்கும் மேல் பணம் மற்றும் அதிக எண்ணிக்கையில் பரிசு பொருட்கள் எடுத்து செல்ல கூடாது என தேசிய நெடுஞ்சாலை, மாநகரின் முக்கிய பகுதிகள், மாவட்ட எல்லையில் தேர்தல் பறக்கும் படை இரவு பகலாக சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி சாலையில் உள்ள லாரி உரிமையாளர் செல்லப்பன் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர், வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அப்போது இவரது வீட்டிலிருந்து ரூ.80 லட்சம் கண்டறிந்தனர். இதுகுறித்து விசாரணையில், அதற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை என்பது தெரியவந்தது.

பழனிசாமி: மக்கள் உங்கள் பக்கம்தான்…! வாக்கு எங்களுக்கு தான் போடுவார்கள்..!!

சிதம்பரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 கொடுத்தோம் என்கிறார் ஸ்டாலின். 27 மாதம் அதிமுக போராடியதால் தான் வேறு வழியில்லாமல் கொடுத்தார்கள். நமது சட்டமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்தார்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றச் சொல்லி அழுத்தம் கொடுத்ததால்தான் உரிமைத் தொகை கொடுத்துள்ளீர்கள். அதிமுக இல்லாவிட்டால் மக்களுக்கு உரிமைத் தொகை கிடைத்திருக்காது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கவர்ச்சியாக பேசும் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பின்பு தகுதியானவர்களுக்குத்தான் உரிமைத் தொகை என மாற்றிப் பேசுவார். அனைத்து நகர பேருந்துகளிலும் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என்றார் ஸ்டாலின். இப்போது பேருந்துக்கு பெயின்ட் அடித்து அந்தப் பேருந்தில் ஏறினால்தான் இலவசமாக பயணம் செய்ய முடியும். மற்ற பேருந்துகளில் கட்டணம் செலுத்த வேண்டும் என்கிறார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைபாடு, வந்த பின்பு வேறொரு நிலைபாடு.

எப்போது பார்த்தாலும் மக்கள் என் பக்கம் என்கிறார் ஸ்டாலின். மக்கள் உங்கள் பக்கம்தான், ஆனால், வாக்கு எங்களுக்கு தான் போடுவார்கள். மக்களை நீங்கள் எப்போது நேரடியாக சென்று பார்த்தீர்கள். இப்போதுதான் கடைக்குச் சென்று டீ குடிக்கிறார். முன்பு சைக்கிளில் செல்வார், பளு தூக்குவார், வாக்கிங் போவார். இதுதான் திமுகவின் 3 ஆண்டுகளாக சாதனை. இதைத் தவிர்த்து வேறு எதையும் செய்யவில்லை. வாக்கிங் போகும்போது கூட தனது மகனின் திரைப்படம் என்ன வசூலானது என்பது குறித்துதான் பேசுவார்.

திமுக ஆட்சியில் கஞ்சா கிடைக்காத இடமே இல்லை. இன்றைக்கு தமிழகம் போதைப்பொருள் நிறைந்த இடமாக காட்சி அளிக்கிறது. அண்மையில் திமுக நிர்வாகி சிக்கினார். எதிர்கட்சி அந்தஸ்தில் இருந்தது காங்கிரஸ். ஸ்டாலின் என்றைக்கு ராகுல் காந்தியை பிரதமராக அறிவித்தாரோ அன்றைக்கே காங்கிரஸ் எதிர்கட்சி அந்தஸ்தை இழந்துவிட்டது.

பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும்போது விசுவாசமாக இருந்தோம். இன்று பாஜக மக்களுக்கு எதிரான திட்டங்களை நிறைவேற்றினால் அதனை எதிர்க்கும் திராணி அதிமுகவுக்கு உள்ளது. எதிர்க்கும் நேரத்தில் எதிர்ப்போம். மக்களுக்கு நல்லது செய்தால் பாராட்டுவோம். இது அதிமுகவின் ஸ்டைல். அரியலூருக்கு அதிமுக ஆட்சியில் நிறைய திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. திமுக ஆட்சியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த திட்டத்தையும் காணவில்லை” எனபழனிசாமி தெரிவித்தார்.

பழனிசாமி பதிலடி: யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு தெரியும்..!

சிதம்பரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, தேனியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை, பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசமாகும் என்று அதாவது “அதிமுக காணாமல் போய்விடும் என்று சிலர் சொல்கிறார்கள்.

யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு தெரியும். அதிமுக தெய்வ சக்தி உள்ள கட்சி. அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். அதிமுகவை சீண்டிப் பார்க்காதீர்கள். அப்படிப் பார்த்தால் என்ன ஆகும் என்பதை தொண்டர்கள் காட்டுவார்கள். இந்தியாவிலேயே அதிக தொண்டர்களை கொண்ட ஒரே கட்சி அதிமுகதான்.

வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகிவிட்டதால் சிலர் எதை எதையோ உளறிக் கொண்டிருக்கிறார்கள். பூச்சாண்டிகளுக்கெல்லாம் அதிமுக என்றைக்கும் பயப்படாது. 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த கட்சியை மிரட்டிப் பார்க்கிறார்கள். இந்த வேலையெல்லாம் இங்கே எடுபடாது அண்ணாமலை குப்புசாமிக்கு கட்டமாக பதிலடி கொடுத்தார்.

செல்லூர் ராஜூ: அண்ணாமலை சும்மா சுஜுபி தான்..! அவரை போட்டு கிழி கிழின்னு கிழிச்சுட்டேன்..!

அண்ணாமலை குப்புசாமியின் தொடர் விமர்சனங்களால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அதிரடியாக அறிவித்தது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பிறகும் அதிமுகவை கூட்டணியில் எப்படுவது இணைத்து விடலாம் பாஜக முயற்சித்ததாக சொல்லப்பட்டது. எனினும், இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக அதிமுக தலைமை உறுதியாக கூறியது.

இதையடுத்து, பாஜக தலைமையிலான கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்தனர். தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். தேர்தலுக்கு பிறகு அதிமுக காணாமல் போகும் என அண்ணாமலை நேற்று பேசிய நிலையில் அதற்கு பழனிசாமி காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார்.

இதனிடையே, இன்று தேனியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை, லோக்சபா தேர்தலுக்கு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசமாகும் என்று பேசி மேலும் பரபரப்பை பற்ற வைத்துள்ளார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுகவினரும் மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. அதனால் அதிமுகவினர் அண்ணாமலை குப்புசாமியை காட்டமான விமர்சித்து வருகிறார்கள்.

அந்த வகையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஏங்க அண்ணாமலை பேசுறத எல்லாம் ஒரு இதா எடுத்துக்கிட கூடாதுங்க.. அண்ணாமலைக்கு நான் ஏற்கனவே பல பதிலடி கொடுத்துவிட்டேன். அண்ணாமலை என்ன ஜோதிடரா?.. நான் கேட்கிறேன்.. அவர் என்ன விசுவாமித்திரரா?.. எங்க கட்சி அழிந்துபோய்டும் னு சொல்றதற்கு.. விசுவாமித்திரருக்கு தான் அந்த சக்தி இருக்கிறது. அண்ணாமலைக்கு அரசியலே தெரியாது. அதிமுக எத்தனையோ பேரை பார்த்த கட்சி.

இது ஒரு பீனிக்ஸ் பறவை போல அதிமுக பல சோதனைகளை கடந்து வந்திருக்கிறது. பழனிசாமி தலைமையில் இந்த இயக்கம் பெரிய இயக்கமாக உள்ளது. இந்தியாவிலேயே 3வது பெரிய இயக்கம் அதிமுக தான். தமிழகத்தில் தனித்துவமான கட்சியாக உள்ளது. அண்ணாமலை இப்படி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.. நகைச்சுவையாக இருக்கிறது.. அண்ணாமலை இப்போது நகைச்சுவையாக மாறிவிட்டார். அவருக்கு இப்போது தோல்வி பயம் வந்துவிட்டது.

எனவே தோல்வி பயத்தை மறைப்பதற்காக இதுமாதிரி பேசி வருகிறார். சரி.. அப்படி பேசினாலும் பேசிட்டு போவட்டு.. தேர்தலுக்கு இன்னும் எத்தனை நாளுங்க இருக்கு.. இன்னும் ஒரு வாரம் இருக்கு. ‘ஜூன் 4ஆம் தேதிக்கு அப்புறம் தெரியும் அண்ணாமலை எங்கே இருக்கிறார் என்று… முன்னாடி அண்ணாமலை அரசியலுக்கு வரும்போது கமலை சந்தித்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பார்த்தார்.. அண்ணாமலை என்று பெயர் இருக்கிறதால, ஆண்டவன் சொல்றான்.. அண்ணாமலை முடிக்கிறார் என்று சொல்வதற்கு அவர் சூப்பர் ஸ்டாரும் இல்ல நடிகரும் இல்ல.. இவர் சும்மா சுஜுபி.. தான்.. அவர் பேச்சுக்கெல்லாம் இடம் கொடுக்க வேண்டியது இல்லை. அவரை போட்டு கிழி கிழின்னு கிழிச்சுட்டேன்.. இனியும் அவர் பேசுகிறார் என்றால் என்னன்னு தெரியல.. என செல்லூர் ராஜூ கிழித்தெடுத்தார்.

அண்ணாமலை குப்புசாமி: அதிமுக தொண்டர்கள் அமமுகவுடன் இணைய போகிறார்கள்..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் வாக்கு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

இந்நிலையில், தேனி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது, ஒரு பக்கம் ஸ்டாலினின் திமுக, மறுபக்கம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக. இருகட்சிகளும் பெயரில் தான் வேறு. மற்ற செயல்களில் அனைத்தும் ஒன்றுதான்.

இருகட்சிகளும் சேர்ந்து டிடிவி.தினகரனை தோற்கடிக்க முயல்கிறார்கள். ஆனால் மக்கள் அவர்கள் பக்கம் இல்லை. அதிமுக தொண்டர்கள் வாக்கும் டிடிவி.தினகரனுக்கு தான். அதிமுக தொண்டர்கள் அமமுகவுடன் இணைய போகிறார்கள். அவர்களை வழிநடத்தக் கூடிய உண்மையான தலைவன் யார் என்பது அதிமுக தொண்டர்களுக்கு தெள்ளத் தெளிவாக தெரியும்.

பூச்சாண்டிகளையும், போலித் தலைவர்களையும் எந்த தொண்டனும் கண்டுபிடித்து விடுவான். அப்படிபட்ட தலைவர்கள் தான் இப்போது தேர்தலில் ஒன்று சேர்ந்து உள்ளார்கள். ஸ்டாலின், இபிஎஸ் இருவருக்கும் டிடிவி.தினகரனை பிடிக்காது. காரணம், அவர் வெற்றிபெற்றுவிட்டால் தமிழகத்தின் அரசியல் மாறும் என்பது இருவருக்கும் தெரியும்.

ஜூன் 4-ம் தேதி டிடிவி.தினகரன் வெற்றிபெற்ற பிறகு உண்மையான மக்களை சார்ந்த அரசியல் நடக்கும். அதனால் தான் இருவரும் இணைந்து இவரை தோற்கடிக்க கங்கனம் கட்டிக்கொண்டு தேனியில் பேசிவிட்டு சென்றுள்ளனர் ” என அண்ணாமலை குப்புசாமி தெரிவித்தார்.