ராஜீவ் காந்தி: ஒற்றை ஓட்டு அரசியல் கோமாளி அண்ணாமலை..! வீர வசனங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்..!

“தமிழ்நாட்டு அரசியலில் அடையாளம் தொலைத்த, சொந்த மக்களாலேயே வெறுத்து ஒதுக்கப்பட்ட, ஒற்றை ஓட்டு அரசியல் கோமாளி அண்ணாமலை தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்ள வீர வசனங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்” என திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார். “தமிழ்நாட்டின் கல்வி மேம்பாடு, மகளிர் நலன், குழந்தைகள் முன்னேற்றம், பேரிடர் மீட்பு உட்பட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழ்நாட்டுக்குக் கொடுக்க வேண்டிய நிதியைக் கொடுக்காமல் வஞ்சித்து வருகிறது ஒன்றிய மோடி அரசு. நாம் கேட்பது ஒன்றிய அரசின் அப்பன் வீட்டுச் சொத்தை அல்ல, நம் தமிழ்நாட்டு மக்களின் உரிமையை. அதைக் கேட்டால் ஒருமையில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகிறார்.

தமிழ்நாட்டின் நலனுக்காக ஒன்றிய அரசின் காதில் விழும்படி மக்களின் குரலாக ஒலித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் டெல்லி முதலாளி மோடியின் பின்னால் ஒளிந்துகொண்டு திமிராக ஒருமையில் அண்ணாமலை பேசியிருக்கிறார். நாக்பூரில் பாடம் கற்றவரிடம் நாகரிகம் எதிர்பார்க்கக் கூடாதுதான். ஆனால், அண்ணாமலைக்கு துளியாவது தமிழ் மக்கள்மீது அக்கறை இருக்கும் என நினைத்தது தவறு என அவர் ஒவ்வொரு நாளும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டு அரசியலில் அடையாளம் தொலைத்த, சொந்த மக்களாலேயே வெறுத்து ஒதுக்கப்பட்ட, ஒற்றை ஓட்டு அரசியல் கோமாளி அண்ணாமலை தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்ள இப்படி வீர வசனங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், துணை முதலமைச்சரை விமர்சிப்பது மக்களை விமர்சிப்பதற்குச் சமம் என்பது பாவம் அவருக்குத் தெரியவில்லை; பரிதாபம்! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை முதலமைச்சர் மீதான அண்ணாமலையின் இந்த விமர்சனத்தை இல்லையில்லை விசமத்தனத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

எங்கே தனது டெல்லி முதலாளிகள் மறந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் உளறிக் கொண்டிருக்கிறார். இதனால்தான் தன்னுடைய முதலாளிகளைக் குளிர்விக்க, தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்ள, மத வெறுப்பு, தமிழ் மொழி, தமிழ் நிலம் சார்ந்த வெறுப்பைக் கொட்டிக்கொண்டு இருக்கிறார். முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம். என ஐயன் வள்ளுவன் சொன்ன அறம் எங்களுக்கு நன்றாகவே தெரியும் என்றாலும், உரிமை பறிக்கப்படும்போது, கொஞ்சம் தட்டிக் கேட்க வேண்டியும் இருக்கிறது.

இதை துணை முதலமைச்சரின் குரலிலேயே சொல்கிறோம், தமிழர்கள் நாம் அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள்; எந்தக் காலத்திலும் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்; அடிபணிய மாட்டோம். தமிழக உரிமைகளைக் கேட்கும் எங்களின் குரல் போராட்டமாக மாறுவதும் மாறாமல் இருப்பதும் ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசின் கையில்தான் உள்ளது. ஒன்றியப் பிரதமர் மோடி அவர்களே, சென்ற முறை நீங்கள் தமிழர்களின் உரிமைகளை எல்லாம் பறிக்க முயன்றபோது தமிழ்நாட்டு மக்கள் “Go Back Modi” எனத் துரத்தி அடித்தார்கள்.

இந்த முறை மீண்டும் அதைத் தமிழ்நாட்டு மக்களிடம் முயற்சி செய்தால், “Go Back Modi” கிடையாது, “Get Out Modi” எனச் சொல்லி துரத்துவார்கள். என்பதை மீண்டும் ஒருமுறை அரசியல் கோமாளி அண்ணாமலைக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.” என ராஜீவ் காந்தி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை குறித்த அவதூறு வழக்கில் சீமான் நீதிமன்றத்தில் ஆஜர்..!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விக்கிராவண்டி உரிமையியல் நீதிமன்றத்தில் ராஜீவ் காந்தி கொலை குறித்த அவதூறு வழக்கில் இன்று நேரில் ஆஜரானார் .

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ராதாமணி காலமானதைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் கடந்த 2019-ல் நடைபெற்றது. அந்த இடைத்தேர்தலில் பிரகலதாவை ஆதரித்து கஞ்சனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேமூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் சீமான் பேசினார்.

அப்போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது காங்கிரஸ் கட்சியின் விழுப்புரம் மாவட்ட தலைவர் ரமேஷ் விக்கிரவாண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது விக்கிரவாண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி சத்ய நாராயணன், அடுத்தகட்ட வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மக்களவையில் அமித் ஷா ஆவேசம்: “மாய தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம்”

மணிப்பூர் விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் இன்று நடந்த விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது, “பிரதமர் நரேந்திர மோடி மீது, இந்த அரசு மீது நம்பிக்கை போய்விடவில்லை. மாய தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் உண்மையான குணம் என்ன என்பதை இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அம்பலப்படுத்தும்.

அரசைப் பாதுகாக்க ஊழல் செய்வது என்பதுதான் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குணம். சுதந்திரத்துக்குப் பிறகு மிகப் பெரிய அளவில் நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பிரதமர் என்றால், அவர் நரேந்திர மோடிதான். மக்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகப் பெரிய புகழ் இருக்கிறது. நாட்டு மக்களுக்காக அவர் ஓய்வின்றி உழைக்கிறார். நாள்தோறும் 17 மணி நேரம் தொடர்ச்சியாக அவர் உழைக்கிறார். ஒருநாள்கூட அவர் விடுப்பு எடுத்துக்கொண்டது கிடையாது. மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. இந்த அரசு என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதை நான் இப்போது கூறுகிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று கூறுவதையே வழக்கமாகக் கொண்ட கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி. வெறும் கடனை தள்ளுபடி செய்வதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மாறாக, கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்படாத நிலையை உருவாக்குவதற்கான அமைப்பு முறையை நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் விவசாயிகளுக்குக் கொடுத்திருப்பது இலவசங்கள் அல்ல. மாறாக, அவர்கள் தங்களை தற்சார்பு அடையச் செய்வதற்கான நடவடிக்கை. நரேந்திர மோடி அரசு வரலாற்றுச் சிறப்பு மிக்க சில முடிவுகளை எடுத்து, வாரிசு அரசியலுக்கும் ஊழலுக்கும் முடிவு கட்டி இருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குணம் என்பது அதிகாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான். ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, கொள்கைகளைப் பாதுகாக்க போராடுகிறது.

அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டத்தை காங்கிரஸ் ஏன் எதிர்த்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏழைகளுக்காக மத்திய அரசு ஒரு ரூபாய் வழங்கினால் அதில் 15 பைசாதான் அவர்களைச் சென்றடைகிறது என பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி சொன்னார். ஆனால், இன்று முழு தொகையும் ஏழைகளைச் சென்றடைகிறது” என்று அமித் ஷா உரையாற்றினார்.

இருவரால் மலர்ந்த அதிமுக….இருவரால் மறைகிறதா.!?

1936-ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் அறிமுகமான எம்.ஜி.ஆர் அதிகம் புகழ் கிடைக்காத நிலையில் 1947 -ல்  கலைஞர் கருணாநிதியின் கைவண்ணத்தில் உருவான ராஜகுமாரி படம் எம்.ஜி.ஆரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்கணும்…

புத்தன் இயேசுகாந்தி பிறந்தது

பூமியில் எதற்காக

தோழா ஏழை நமக்காக…

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி….

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே…

எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்

வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே…

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா

இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா…

சிரித்து வாழ வேண்டும்

பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே…

சின்னப்பயலே சின்னப்பயலே

சேதி கேளடா….

அங்கே

சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்

அது ஆணவ சிரிப்பு….. போன்ற புரட்சி கார பாடல் வரிகளால் தொடர்ந்து  25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கியது மட்டுமின்றி எம்.ஜி.ஆர் திரைப்படங்களின் மூலம் ஏழைகள் தோழனாகவும், வீரனாகவும், அவரடைந்த புகழும், சமூகத் தொண்டனாகவும், கொடையாளியாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயர் மற்றும் அவருடைய வசீகரமான தோற்றம் மூலம் தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் உள்ள கோடான கோடி மக்களை கட்டி போட்டார். மேலும் எம்.ஜி.ஆர் எத்தனையோ முன்னணி நடிகைகள் இருந்தாலும், ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் இணைந்து நடித்த படங்கள் இருவரையும் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் , 1972-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.  1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார்.

1982 ஜூன்  4-ந் தேதி ஜெயலலிதாவை  அ. தி. மு. க. வில் இணைந்த எம்.ஜி.ஆர்  அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆக்கினார். அதன் பிறகு 1984 மார்ச் 24 -ந் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். 1984 -ம்ஆண்டு வி.கே. சசிகலா போயஸ் கார்டன் பகுதிக்கு அருகே வினோத் வீடியோ விசன் என்ற ஒளிநாடாவை வாடகைக்கு விடும் கடையை நடத்திய போது கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரலேகா ஜெ யலலிதாவின் கூட்டங்களுக்கு நிழற்படம் எடுக்க வி.கே. சசிகலாவை அறிமுகப்படுத்தினார்.

அதன்பின்னர் ஜெ யலலிதாவின் சுற்று பயணங்களை படமெடுத்து கொடுக்கும் வாய்ப்பினை  வினோத் வீடியோ விசனுக்கு கிடைக்க வி.கே. சசிகலா வேதா இல்லத்தில் அடியெடுத்து வைத்தார். அதற்கு பிறகு மெல்ல மெல்ல ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற ஜெயலலிதா மாநிலங்களவை உறுப்பினர் ஆனபோது அவரோடு டெல்லி செல்லும் அளவிற்கு வி.கே. சசிகலாவுடன் நெருக்கனமானார். 1984-ல் எம்.ஜி.ஆர் கடுமையாக நோய்வாய்ப்பட்டும் இருந்த போது ஜெயலலிதா பிரசாரம் செய்து   எம்.ஜி.ஆர் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆக்கினார்.

புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆர் 1987-ம் ஆண்டு டிசம்பர் 24 -ம் நாள் இயற்கை எய்தபோது எம்.ஜி.ஆர் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களை ஒரு கூட்டம் கீழே தள்ளிவிட போது புரட்சி தலைவி ஜெயலலிதாவிற்கு தன்னம்பிக்கையுடன் தைரியத்தையும் ஆறுதலையும் கொடுத்து நடமாட வைத்த ஒரே ஒரு நபர் வி.கே. சசிகலா நடராஜன்.

அதன்பின்னர் 1989 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 150 தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெற்று 13 ஆண்டு கால வனவாசத்தை முடித்து ஆட்சி பீடத்தை கைப்பற்றியது. அப்போது தேர்தல் ஜெ அணி 27 இடங்களையும் ஜி.கே.மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் கட்சி 26 இடங்களையும் அ.தி.மு.க (ஜா அணி) 2 இடங்களையும் கைப்பற்றியது நாடறிந்தது. 1989 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் கருணாநிதி 3- வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவராக பிப்ரவரி 9 ஆம் தேதி, ஜெயலலிதா பதவி ஏற்றதோடு சரி, அதன்பிறகு சட்டமன்றத்திற்கு வருவதையே ஜெயலலிதா தவிர்த்தார். இதற்கிடையே, ஜா-ஜெ அணிகளிடையே வி.கே. சசிகலா நடராஜன் பேச்சுவார்த்தை நடத்தி பிரிந்து கிடந்த அதிமுகவை இணைத்தார். அதன்பிறகு மார்ச் மாதம் நடந்த மருங்காபுரி, மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடை தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தி.மு.க வெற்றி பெறும் என்று சொல்லப்பட்டது.

“வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்” -என்ற வள்ளுவனின் வரிகளுக்கு இணங்க, தேர்தல் தோல்வியில் துவண்டு கிடந்த ஜெயலலிதா இந்த இரண்டு தொகுதிகளுக்கும் பிரசாரங்களுக்கு போகமலேயே ‘இரட்டைஇலை’ சின்னம் கிடைக்க வி.கே. சசிகலா நடராஜன் வெற்றிக்கு வியூகம் அமைத்துக் கொடுக்க கே.கே.எஸ்.எஸ்.ஆர். மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரைத் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்து தேர்தல் ராஜா தந்திரங்களை கற்றுக் கொடுத்த தி.மு.க-வுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

1989 -ம் ஆண்டு மார்ச் மாதம் 25 -ம் தேதி தி.மு.க அரசு பட்ஜெட் கூட்டத்தின் முதல் நாள். முதலமைச்சரும் நிதியமைச்சருமான கருணாநிதி, தமிழக பட்ஜெட்டை சட்ட மன்றத்தில் தாக்கல் செய்ய எழுந்த போது, ‘பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடாது’ என்று அ.தி.மு.க தரப்பில் இருந்து எதிர்ப்பு குரல் கடுமையாகக் கிளம்பியது.

தன்னுடைய போன் ஒட்டு கேட்கப்படுவதாகவும் ‘அதற்கு பதில் சொல்ல வேண்டும்’ என்று உரிமை மீறல் பிரச்னையை ஜெயலலிதா எழுப்பினார். அப்போது நடந்த யுத்தத்தில், பட்ஜெட் உரை கிழிக்கப்பட்டது; கருணாநிதி மூக்கு கண்ணாடி உடைந்தது; வீரபாண்டி ஆறுமுகத்தின் முகத்திலிருந்து இரத்தம் கொட்ட ஆரமித்தது; ஜெயலலிதா சேலை கிழிந்தது என சட்டமன்றமே அமளி.

இந்த மன உளைச்சலால் அரசியலை விட்டு ஜெயலலிதா ஒதுங்கி விடலாம் என்ற நோக்கத்தில் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன். அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று ஜெயலலிதா பரபரப்பான இருந்த நேரத்தில் எழுதிய கடிதம் ஒன்று வி.கே. சசிகலா நடராஜன் கையில் கிடைக்க அந்த கடிதம் உரியவர்கள் கைக்குச் செல்லாமல் தடுத்தார்.

இந்த தகவல், உளவுத்துறை மூலம் முதலமைச்சர் கருணாநிதி காதுக்கு எட்டியதால் வி.கே. சசிகலாவின் கணவன் நடராஜன் கைது செய்யப்பட்டார் என்ற தகவலும் உள்ளது. ‘நமக்காக இவ்வளவு சோதனைகளை வி.கே. சசிகலாவின் கணவன் நடராஜன் சந்திக்கிறாரே’என்ற காரணத்தால் ஜெயலலிதா வி.கே. சசிகலாவின் மீது அதிக அன்பாக மாறினார்.

அதன்பின்னர் 1989–ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை அ.தி.மு.க-வுடன் சேர்ந்து சந்திக்க காங்கிரஸ் கூட்டணிக்கு வி.கே. சசிகலா நடராஜன் அச்சாரமிட்டு நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்களில் அதிமுக கூட்டணி கட்சி வெற்றி பெற்றதால் ஜெயலலிதா மிகுந்த உற்சாகம் அடைந்தார்.

அதன்பிறகு பத்தாம் நாடாளு மன்றத் தேர்தல் மற்றும் தமிழ்நாட்டின் பத்தாவது சட்டமன்றத் தேர்தல் 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடை பெற்றவிருந்த நிலையில் மே 21-ம் தேதி 1991 -ம் ஆண்டு தமிழகத்தில் நாடாளு மன்ற/சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார்.

இதனை சாதகமாக பயன்படுத்திய காங்கிரஸ் மற்றும் அதிமுக கூட்டணி மக்களிடையே பெரும் அனுதாப அலை பெற முயற்சி செய்தது. மேலும் திமுக ஆட்சி கலைக்கப்பட காரணமாக இருந்த ராஜீவ் காந்தியின் மேல் உள்ள கடும் கோபத்தால் அவரை கொள்வதற்கு கருணாநிதி அவர்களும் விடுதலைப் புலிகளின் தற்கொலை படைக்கு உதவினார் என்று வி.கே. சசிகலா நடராஜன், ஜெயலலிதாவிற்கு பிரசார யுக்தியை கைகளில் கொடுத்தார். இதன்விளைவாக எம். ஜி. ஆர்க்கு பிறகு 224 தொகுதிகளில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று அதிகார பூர்வமான தலைவராக ஜெயலலிதா முதல் முறையாக முதலமைச்சராகப் பதவியேறியதில் வி.கே. நடராஜனின் பங்கு சொல்லில் அடங்காது.

இதனை சாதகமாக பயன்படுத்திய காங்கிரஸ் மற்றும் அதிமுக கூட்டணி மக்களிடையே பெரும் அனுதாப அலை பெற முயற்சி செய்தது. மேலும் திமுக ஆட்சி கலைக்கப்பட காரணமாக இருந்த ராஜீவ் காந்தியின் மேல் உள்ள கடும் கோபத்தால் அவரை கொள்வதற்கு கருணாநிதி அவர்களும் விடுதலைப் புலிகளின் தற்கொலை படைக்கு உதவினார் என்று வி.கே. சசிகலா நடராஜன், ஜெயலலிதாவிற்கு பிரசார யுக்தியை கைகளில் கொடுத்தார். இதன்விளைவாக எம். ஜி. ஆர்க்கு பிறகு 224 தொகுதிகளில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று அதிகார பூர்வமான தலைவராக ஜெயலலிதா முதல் முறையாக முதலமைச்சராகப் பதவியேறியதில் வி.கே. நடராஜனின் பங்கு சொல்லில் அடங்காது.

2001-ம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் வி.கே.சசிகலாவின் நம்பிக்கையை பெற்று பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக முதன்முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு வருவாய்த்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால், அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா அரசுக்குச் சொந்தமான டான்சி நிறுவனத்தின் நிலத்தை, ஜெயலலிதா இயக்குநராக இருந்த நிறுவனம் வாங்கியது தொடர்பான வழக்கு, 1991 ஏப்ரலில் மிட்டல் என்பவர் கொடைக்கானலில் ப்ளெசண்ட் ஸ்டே என்ற பெயரில் ஒரு விடுதியை இரண்டு தளங்களாக கட்ட அனுமதி பெற்றார்.

1992 ஜனவரியில், ஏழு தளங்களாக விடுதியைக் கட்ட அனுமதி கோர ஜெயலலிதா மற்றும் டி. எம். செல்வகணபதி ஆகியோர் விதிமுறைகளை மீறி ஏழு தளங்களை கட்ட அனுமதிக்க அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக வழக்கு ஆகியவற்றால் முதல்வர் பதவியில் தொடர முடியாமல் போக  வி.கே.சசிகலாவின் பரிந்துரைப்படி   2001 செப்டம்பர் 21 முதல் 2002 மார்ச் 01-ஆம் தேதி வரை தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் முதல் முறையாக பதவியேற்றார்.

ஜெயலலிதா முதல்முறையாக முதல்வராக 1991 – 1996 -ம் ஆண்டு வரை பதவி காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.56 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக 1996 ஆம் ஆண்டு ஜூன் 14-ந் தேதி சென்னை நீதிமன்றத்தில் ஜெயலலிதா, வி.கே. சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.   2014-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் 4 ஆண்டு சிறைதண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட, தனது முதல்வர் பதவியை மீண்டும் இழக்க நேர்ந்தது.

அதைத் தொடர்ந்து 2014, செப்.29 முதல் 2015 மே 22 வரை வி.கே. சசிகலா ஆதரவுடன் ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக முதல்வராகும் பதவியேற்றார். 2016 மே 16- ந்  நடைபெற்ற பதினைந்தாவது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்  ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது. அதாவது எம். ஜி. ஆர்.பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜெயலலிதா ஆட்சியமைக்க  அதே ஆண்டு செப்டம்பர் 22 அன்று உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் 75 நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 5-ந் தேதி ஜெயலலிதா மரணமடைந்ததாக அறிவிக்க 2016, டிசம்பர் 6-ந் தேதி மூன்றாவது முறையாக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டர். இந்நிலையில் ஜெயலலிதா முதல்வராக இருந்த 1991–96 பதவிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக  சொத்து சேர்த்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், மே 11 ,2015 அன்று ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்து 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்தது.

ஆனால் ஜெயலலிதா வழங்கப்பட்ட தண்டனைக்கெதிராக மேல்முறையீட்டு வழக்கு ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினார். ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தது. 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் திகதி உச்சநீதிமன்றம் ஜெயலலிதா, வி.கே. சசிகலா, வி. என். சுதாகரன் மற்றும் ஜெ. இளவரசி ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது

ஆனால்  முதல் குற்றவாளியான ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவருக்கு எதிராக ரூபாய் 100 கோடி அபராதம் மட்டும் விதிக்கப்பட்டு  வி. கே. சசிகலா, வி. என். சுதாகரன் மற்றும் ஜெ. இளவரசி ஆகிய மூன்று பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 10 கோடி அபராதமும் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப்பின்னர், அரசியலில் ஈடுபட்ட வி.கே. சசிகலா,  என்ற விமர்சனங்கள் எழுந்தன.

ஜெயலலிதாவின் நிழலாக, முப்பதாண்டுகளாக இருந்த வி.கே. சசிகலா ஜெயலலிதாவின் இடத்தைப் பூர்த்திசெய்ய ஜெயலலிதா போலவே உடை அணியத் தொடங்கினார். 2016 டிசம்பர் 29-ந் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா நியமனம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, தீர்மான நகல் த வி.கே. சசிகலாவிடம் வழங்கப்பட்டு, கட்சியின் பொதுச் செயலாளர் பதவி ஏற்கும்படி அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து டிசம்பர் 31-ந்  தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வி.கே. சசிகலா பொதுச் செயலாளராக பதவியேற்றார்.

அதனைத்தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள். கூட்டம்,   2017-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந் தேதி  ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் முன் மொழிய, அனைத்து எம்.எல்.ஏக்களும் வழி மொழிய அதிமுக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா அவர்கள் சட்டமன்றக் குழு தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, 2017 பிப்ரவரி 9-ந் சசிகலா, தமிழக முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஜெயலலிதா மறைவுக்குப்பின்னர், அரசியலில் ஈடுபட்ட வி.கே. சசிகலா,  என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஜெயலலிதாவின் நிழலாக, முப்பதாண்டுகளாக இருந்த வி.கே. சசிகலா ஜெயலலிதாவின் இடத்தைப் பூர்த்திசெய்ய ஜெயலலிதா போலவே உடை அணியத் தொடங்கினார். 2016 டிசம்பர் 29-ந் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா நியமனம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, தீர்மான நகல் த வி.கே. சசிகலாவிடம் வழங்கப்பட்டு, கட்சியின் பொதுச் செயலாளர் பதவி ஏற்கும்படி அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து டிசம்பர் 31-ந்  தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வி.கே. சசிகலா பொதுச் செயலாளராக பதவியேற்றார்.

அதனைத்தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள். கூட்டம்,   2017-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந் தேதி  ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பிய பின்னர் ஓ. பன்னீர்செல்வம் முன் மொழிய, அனைத்து எம்.எல்.ஏக்களும் வழி மொழிய அதிமுக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா அவர்கள் சட்டமன்றக் குழு தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

மறுபுறம் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக வி.கே. சசிகலா சேர்க்கப்பட்டு வழக்கு விசாரணை பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தனக்கு சாதகமாக அமையாது என்பதை உணர்ந்த ஜெயலலிதா பணியில் சீக்கிரம் முதல்வர் பதவியை ஏற்று பின்னர் வி.கே. சசிகலா, ஜெயலலிதாவை போலவே அதிமுகவை சிறையில் இருந்தே வழிநடத்தலாம் என்று திட்டம் தீட்டினார். இதையடுத்து, 2017 பிப்ரவரி 9-ந் சசிகலா, தமிழக முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் 2017 பிப்ரவரி 7-ந் தேதி செய்தியாளர்களை சந்தித்த  ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில் வி.கே. சசிகலா கட்டாயப்படுத்தியதால் பதவி விலகல் கடிதத்தை தான் அளித்ததாக தெரிவிக்க இதனைத்தொடர்ந்து வி.கே. சசிகலா  அதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து ஓ. பன்னீர்செல்வத்தை நீக்கியாக அறிவித்தார். இதன் பிறகு ஓ. பன்னீர்செல்வம், வி.கே. சசிகலா என இரு அணிகளாக அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. பிப்ரவரி  12 -ந்  தேதி  வரை ஓ. பன்னீர்செல்வம் பக்கம் , ஒரு அமைச்சர் உள்ளிட்ட மதுசூதனன்,மஃபா பாண்டியராஜன், பொன்னையன், செம்மலை ஆகிய  சட்டமன்ற உறுப்பினர்கள்,8 மக்களவை உறுப்பினர்கள், 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் என மொத்தமாக 18 பேர் ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்தனர்.

இதனால் வெகுண்ட ஓ. பன்னீர் செல்வம்  அணியில் உள்ள அனைவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து வி.கே.சசிகலா நீக்கினார். வி.கே. சசிகலா தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் அணி மாறாமல் இருப்பதற்காக அவர்கள் அனைவரையும் கர்நாடக அரசியல் பாணியில் கூவத்துார் சொகுசு விடுதியில் தங்க வைத்து விட்டு தன்னிடம் போதுமான எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதால் ஆட்சி அமைக்க ஆதரவு கோரினார் வி.கே.சசிகலா. ஆனால் வி.கே. சசிகலா மீது சொத்துகுவிப்பு வழக்கு நிலுவையில் இருந்ததால் தொடர்ந்து அமைதி காத்து வந்தார் ஆளுநர் சி. வித்தியாசாகர் ராவ்.

மேலும்  வி.கே. சசிகலா கொங்கு மண்டலத்தில்  ஆதரவை வளர்த்துக்கொள்ளும் நோக்கத்தில் கொங்கு மண்டலத்தில் ஒருவரை முதல்வராக்கும் முயற்சியில் இறங்கினர். இதில்  எடப்பாடி பழனிசாமியை முதல்வராகவும் டிடிவி தினகரனை அதிமுக துணை பொதுச்செயலாளராகவும் நியமித்து வி.கே. சசிகலா முயற்சிகள் மேற்கொண்டார்.  அதன்விளைவாக 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி எடப்பாடி பழனிசாமியை முதல்வராகப் பொறுப்பேற்றார்.

மறுபுறம் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா  உள்ளிட்ட மூன்று பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் மீது 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்  தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்ற வி.கே. சசிகலா மாலை 2017 பிப்ரவரி 15-ந் தேதி மாலை 5.30 மணி அளவில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அப்போது நீதிபதி அஷ்வத்நாராயணாவிடம், “சிறையில் சிறப்பு வகுப்பு வசதி, வீட்டு உணவு, இளவரசிக்கும் தனக்கும்  ஒரே அறை, தனி ஆடைகள் கொண்டு செல்ல அனுமதி, உடல் நிலை ஒத்துழைக்காததால் சரணடைவதில் இரண்டு வார கால அவகாசம்,” எனப் பல கோரிக்கைகளை முன்வைத்தார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததால் வி.கே. சசிகலா சிறை சென்றார்.

அதன்பின்னர் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொள்ள மத்தியில் ஆளும் பாஜக அரசு பல ரகசிய முடிவுகள் எடுத்தது மேலும் உளவு துறை மூலமாக தமிழக சட்டமன்றத்தை கலைத்து விட்டு மறுதேர்தல் நடத்தினால் திமுக வெற்றி பெறும் அதன் பின்னர் பாஜகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என அறிந்தது. மேலும் துவக்கத்தில் நிதானம் காட்டிய எடப்பாடி பழனிசாமி மெல்ல மெல்ல தன்னை வலுப்படுத்திக் கொண்டார். டி.டி.வி. தினகரன் பக்கம் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவிநீக்கம் செய்ய வைத்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை  2017-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந் தேதி சட்டமன்றத்தில் வெற்றி பெறச் செய்ததில் டி. டி. வி. தினகரன் பெரும்பங்காற்றியவர். இராதா கிருட்டிணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக (அம்மா) அணியின் வேட்பாளராக போட்டியிட்டார். இத்தொகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவடா செய்ததாக எழுந்த புகாரில், இந்தியத் தேர்தல் ஆணையம் இத்தொகுதியின் இடைத்தேர்தலை ரத்து செய்தது.

துவக்கத்தில் நிதானம் காட்டிய எடப்பாடி பழனிசாமி மெல்ல மெல்ல தன்னை வலுப்படுத்திக் கொண்டு, டிடிவி.தினகரனை ஓரம் கட்ட ஆரம்பித்தார்.  இதனால் டிடிவி தினகரன் அதிமுகவில் தனி அணியாக இயங்க ஆரம்பித்தபோது ஆளும்கட்சியைச் சேர்ந்த 33 சட்டமன்ற உறுப்பினர்கள் அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்கு வந்து அவரைச் சந்தித்துச் சென்றனர். ஆனால் வெளிப்படையாக ஆதரவைத் தெரிவிக்க வேண்டிய நேரம் வந்தபோது 19 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே முன் வந்தனர். இந்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநரைச் சந்தித்து முதல்வரை மாற்றும்படி மனு அளித்த பிறகு, அவர்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.

உடனடியாக, டிடிவி தினகரன் பக்கம் இருந்த எஸ்.டி.கே. ஜக்கைய்யன் சபாநாயகரைச் சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பக்கமே தான் இருப்பதாக உறுதியளித்தார். இதனால், 18 சட்டமன்ற உறுப்பினர்களே டிடிவி தினகரன் பக்கம் இருந்து வந்தனர். இதற்குப் பிறகு டி.டி.வி. தினகரன் வீட்டில் நடந்த கூட்டத்தில், தேர்தலில் தன்னிச்சையாக போட்டியிட டிடிவி தினகரன் முடிவெடுத்தது குறித்து அமைச்சர்கள் சிலர் கேள்வியெழுப்பியதையடுத்து பிரச்சனை வெடித்தது. டிடிவி. தினகரனும்,  சசிகலாவும் ஒதுக்கிவைக்கப்படுவதாக அமைச்சர்கள் வெளிப்படையாக அறிவித்தனர்.

மேலும், அ.தி.மு.க. என்ற கட்சிப் பெயரும் இரட்டை இலை சின்னமும் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு உரியவை என நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து தினகரன் பக்கம் வந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லுமென நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தது. மேலும் 2017-ம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் அஇஅதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் டி. டி. வி. தினகரன் இடமிருந்து பரிக்கப்பட்டது. அதன்பின்னர் 2017-ம் ஆண்டு டிசம்பர்  21-ந் தேதி நடைபெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு 89,063 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் டி. டி. வி. தினகரன்.

இந்நிலையில் டிடிவி தினகரன் அணியில் இருந்த 18 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, உடனடியாக தேர்தலை சந்திப்பதையே தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் விரும்பி மேல் முறையீடு செய்தனர். ஆனால் மேல் முறையீட்டிலும் தீர்ப்பு ஒரு சில ஆண்டுகள் தொடர  தமிழக சட்டமன்றத்தை கலைத்து விட்டு மறுதேர்தல் நடத்தினால் திமுக வெற்றி பெறும் அதன் பின்னர் பாஜகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என அறிந்தது. இதனைத்தொடர்ந்து. பின்னர் மேல் முறையீட்டிலும் தீர்ப்பு டிடிவி தினகரன் தரப்பிற்கு சாதகமாக அமையவில்லை. இதனிடையே எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இடையிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் போதெல்லாம் டெல்லி இவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தது.

காலம் மெல்ல, மெல்ல நகர வி.கே. சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறைவாசம் முடிவிற்கு வரும்போது எடப்பாடி பழனிசாமி அதிமுகவை முழுமையாக கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தது மட்டுமில்லாமல்  வி.கே. சசிகலாவுக்கும் அதிமுகவிற்கு எந்த ஒரு சம்மதமும் இல்லை தெரிவித்தனர். மேலும்  வி.கே. சசிகலா அதிமுக கொடியை கூடாது என தெரிவித்ததுடன் இல்லாமல் காவல்துறையை பயன்படுத்தி அடக்குமுறையை கையாண்டனர்.

வி.கே. சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த ஒரு சில மாதங்களிலே தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற இருந்ததால் அதிமுகவில் உட்கட்சி பூசல் இருந்தால் வெற்றி திமுகவின் பக்கம் சென்றுவிடும் ஆகையால், வி.கே. சசிகலா அரசியலில் இருந்து விலகி இருப்பதாக தெரிவித்து ஒதுங்கி இருந்தார்.  ஆனால் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் நடைபெற்ற 4 1/2 ஆண்டு அதிமுக ஆட்சி மக்களின் மீது அக்கறை காட்டாமல் பினாமிகள் கொள்ளையடிப்பதில் அக்கறை காட்டியதால் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி முடிவிற்கு வந்தது.

அதன்பின்னர் ஒற்றை தலைமை அதிமுகவில் தலைதூக்க எடப்பாடி பழனிசாமி பணபலத்தையும், படைபலத்த்தையும் பயன்படுத்தி அதிமுகவை தன்னுடைய கட்டுப்பாடில் கொண்டு வந்தார். மேலும் ஒரு புறம் விகே சசிகலாவையும், ஓ. பன்னீர்செல்வத்தையும் ஓரம் கட்டும் வேலைகளை தீவிரம் காட்டினார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை பூதாகரமாக வெடிக்க, எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ. பன்னீர் செல்வத்திற்கும் இடையே உள்ள மோதல் வெளிப்படையாக வெடித்து. இதனால் ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கும் எடப்பாடி தரப்புக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.

மேலும் அதிமுக பொதுக் குழு கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் தரப்பு கடிதம் அனுப்ப, அதை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஏற்க மறுக்க திட்டமிட்டபடி பொதுக் குழு கூட்டத்தை நடத்தியே தீருவோம் என மும்முரம் கட்ட இதையடுத்து ஓ. பன்னீர்செல்வம் ஆவடி ஆணையரகத்தில் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடந்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என கூறியே ஓ. பன்னீர்செல்வம் காவல் நிலையத்தில் மனு அளித்தார்.

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். ஒரு தரப்பினர் மீது மற்றொரு தரப்பினர் உருட்டுக்கட்டை, கற்களால் தாக்கினர். இந்த மோதலில் 2 காவல்துறையினர் உட்பட 47 பேர் காயம் அடைந்தனர். மேலும் காவல்துறையைச் சேர்ந்த 4 வாகனம் உட்பட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இந்த வன்முறையை அடுத்து, அதிமுக தலைமை அலுவலகம் உள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மோதல் தொடர்பாக 14 பேர் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.

மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மத்தியில் மோதல் வெடித்த நிலையில், சட்டம் – ஒழுங்கு பிரச்சினையைக் கருத்தில்கொண்டு அதிமுக தலைமை அலுவலகத் துக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தது.

புரட்சித் தலைவர்  எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு புரட்சி தலைவி ஜெயலலிதா மற்றும் வி.கே. சசிகலா நடராஜன் மலர்ந்த அதிமுக இன்று  புரட்சி தலைவி ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் பதவி வெறியில் அதிமுக மறைகிறதா.!?