Amit Shah: ஏழைகளின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை மோடி கொண்டு வந்துள்ளார்..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், 40 தொகுதிகளை கொண்ட பிஹாரில் 5 கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் 5 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. இன்னும் 4 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

பிஹாரில் மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “பிரதமர் மோடி சாதி வெறியை அழித்து, ஒவ்வொரு குடிமகனின் மேம்பாட்டிற்காக பாடுபட்டுள்ளார். ஏழை மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்.

இன்று லாலு பிரசாத் யாதவும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து பாஜக மற்றும் ஜேடியு-க்கு எதிராக தேர்தலில் போட்டியிடுகின்றன. லாலு-ராப்ரி ஆட்சியில் பிஹார் கேங்ஸ்டர் ராஜ்ஜியமாக மாற்றப்பட்டது. இன்று லாலு காங்கிரஸ் கட்சியுடன் கைகோத்திருக்கிறார். ஆனால் காங்கிரஸ்தான், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை எதிர்த்தது. அதோடு மண்டல் கமிஷன் அறிக்கையையும் எதிர்த்தது என்பதை நான் அவரிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஓபிசிகள் அனைவரும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். ஆனால் நிதிஷ் முதல்வர் என்டிஏ கூட்டணிக்கு வந்து, முதல்வர் ஆனதுக்கு பிறகு பல கொடுமைகள் நிறுத்தப்பட்டன. நிதீஷ் குமார் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் வழங்கியுள்ளார்.

ஆனால் இண்டியா கூட்டணி மீண்டும் அவர்களை ராந்தல் விளக்கு காலத்துக்கு இழுத்துச் செல்ல விரும்புகிறது. அதோடு ஓபிசிக்களை ஒடுக்க நினைக்கிறது.

மோடி நக்சலிசத்தை ஒழித்தார், பயங்கரவாதத்தை ஒடுக்கினார். ஓபிசி பிரிவை சேர்ந்த நரேந்திர மோடியை பாஜக தான் முதன்முதலாக பிரதமராக்கியது. ஒரு டீ விற்றவரின் மகனை பிரதமராக்கியுள்ளது. 80 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கியுள்ளோம். 12 கோடிக்கும் அதிகமான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன, 10 கோடிக்கும் அதிகமான தாய்மார்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்புகளை வழங்கியுள்ளோம்.” என அமித் ஷா உரையாற்றினார்.

Rahul gandhi: நரேந்திர மோடியின் ஆட்சியில் ‘ரயில் பயணம்’ தண்டனையாகிவிட்டது..!

இந்திய மக்கள் ரயில் பயணத்தின்போது படும் இன்னல்களை ராகுல் காந்தி தனது “எக்ஸ்” பக்கத்தில், சாமானியர்களின் ரயில்களில் இருந்து பொதுப் பெட்டிகளைக் குறைத்து ‘எலைட் ரயில்களை’ மட்டுமே ஊக்குவிக்கும் மோடி அரசால் ஒவ்வொரு வகைப் பயணிகளும் துன்புறுத்தப்படுகிறார்கள்.

உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளுடன் கூட மக்கள் தங்கள் இருக்கைகளில் நிம்மதியாக உட்கார முடியாமல் தரையிலும், கழிப்பறையிலும் மறைந்திருந்து பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

மோடி அரசாங்கம் ரயில்வேயை தனது கொள்கைகளால் பலவீனப்படுத்துவதன் மூலம் தன்னை ‘திறமையற்றவர்’ என்று நிரூபிக்க விரும்புகிறது, இதனால் அதை தனது நண்பர்களுக்கு விற்க ஒரு சாக்கு கிடைக்கும்.

சாமானியர்களின் எண்ணிக்கையை காப்பாற்ற வேண்டுமானால், ரயில்வேயை சீரழிக்கும் மோடி அரசை அகற்ற வேண்டும் என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

Siddaramaiah: ’24×7′ படத்தின் உண்மைக் கதை என்ன? எல்லாமே விளம்பரம் தான்..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பெங்களூருவில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சி முதலீட்டுக்கு எதிரானது, தொழில்முனைவோருக்கு எதிரானது, தனியார் துறைக்கு எதிரானது, வரி செலுத்துபவர்களுக்கு எதிரானது, செல்வத்தை உருவாக்குபவர்களுக்கு எதிரானது.

இந்தியாவை உலகப் பொருளாதாரத்தின் மையமாக மாற்றுவேன். ஆனால் காங்கிரஸும் இண்டியா கூட்டணியினரும் மோடியை அகற்றுவோம் என்று கூறுகிறார்கள். இதேபோல் 5ஜிக்கு பிறகு 6ஜியை தொடங்குவோம் என்று நான் உத்தரவாதமாக கூறினால் அவர்கள் மோடியை அகற்றுவோம் என்றே பேசுகிறார்கள்.

கர்நாடக மக்களின் கனவுகளை நிறைவேற்ற பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் ஒன்றிணைந்துள்ளது. உங்கள் கனவுகள் தான் எனது தீர்மானம் என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். எனது வாழ்க்கை உங்களுக்கும் நாட்டுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 2047க்கு 24X7 உறுதியளிக்கிறேன். 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே எனது இலக்கு.

டெக் சிட்டியை டேங்கர் சிட்டியாக காங்கிரஸ் மாற்றியுள்ளது. காங்கிரஸ் ஊழலில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. பெங்களூரு பிரச்சினைகளில் கவனம் செலுத்தவில்லை. மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமே பெங்களூருவை வேகமாக முன்னேற்றி வருகின்றன.

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு வளர்க்கும் சிந்தனைகள் மற்றும் சித்தாந்தம் மிகவும் ஆபத்தானது. பெண்கள் தாக்கப்படுகிறார்கள். சந்தைகளில் குண்டுகள் வெடிக்கிறார்கள். மதப் பாடல்களைக் கேட்டதற்காக மக்கள் தாக்கப்படுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் பொதுவானவை அல்ல. சகோதர சகோதரிகளே காங்கிரஸைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” என நரேந்திர மோடி கடுமையாக சாடினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த, முதலமைச்சர் சித்தராமையா, “மக்களுக்காக 24×7 நேரமும் உழைக்கிறேன் என்று கூறுகிறார் பிரதமர் மோடி. ஆனால் கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் வறட்சியின் போது பிரதமர் மோடி எங்கே இருந்தார்?. அப்படியானால், இந்த ’24×7′ படத்தின் உண்மைக் கதை என்ன? எல்லாமே விளம்பரம் தான் என்று தெரிகிறது.

பிரதமர் மோடி உண்மையிலேயே விவசாயிகளின் நலனை விரும்புகிறாரா? என்பதை தனது மனசாட்சியிடமே அவர் கேட்டுகொள்ள வேண்டும். டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தின் போது 700 விவசாயிகள் இறந்தனர். விவசாயிகளைப் பற்றி பேசுவதற்கு பிரதமருக்கு தார்மீக உரிமை இல்லை.

விவசாயிகளின் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு இன்னும் தயாராக இல்லை. விதைகள் மற்றும் உரங்கள் மீது ஜிஎஸ்டி வரியை விதித்துள்ளது மத்திய அரசு.

பாஜக ஆரம்பத்திலிருந்தே விவசாயிகளுக்கு எதிரானது. முதலாளிகள், தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளின் கட்சி பாஜக. இந்த கட்சியின் டிஎன்ஏவில் விவசாயிகளுக்கு எதிரான விஷம் உள்ளது. நரேந்திர மோடி அரசு 10 ஆண்டுகால ஆட்சியில் கர்நாடக விவசாயிகளுக்கு என்ன கொடுத்தது?.

கர்நாடக விவசாயிகள் தங்களின் நலம் விரும்பி யார் என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு புத்திசாலிகள். விவசாயிகளுக்கு எதிரான சக்திகளுக்கு தேர்தலில் அவர்கள் பாடம் புகட்டுவார்கள்.” என சித்தராமையா தெரிவித்தார்.

10 ஆண்டுகளில் மோடி அரசு விளம்பரங்களுக்கு மட்டும் ரூ.3,641 கோடி செலவு..!

அஜய் பாசுதேவ் என்பவர் கடந்த 10 ஆண்டுகளில் தொலைக்காட்சி, ரேடியோ, இணையதளம்,எஸ்எம்எஸ் மூலமாக விளம்பரங்கள் கொடுக்க ஒன்றிய அரசு பயன்படுத்திய நிதி குறித்து அவர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் பதில் அளித்து இருக்கின்றது.

அதாவது 2014-ம் ஆண்டு முதல் இணையதளம் எஸ்.எம்.எஸ்., டிஜிட்டல் விளம்பரங்களுக்கு மட்டும் ரூ.667.38 கோடியை மோடி அரசு அரசு செலவிட்டதும் ஆர்டிஐ-யில் தெரியவந்துள்ளது.அதிகபட்சமாக 2015-2016 ஆண்டில் ரூ.126 கோடி செலவிடப்பட்டது. 2014 ஜூன் முதல் 2024 மார்ச் வரை தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு மட்டும் ரூ.2,974 கோடி செலவிட்டுள்ளது மோடி அரசு. அதிகபட்சமாக 2016-17 காலகட்டத்தில் விளம்பரங்களுக்காக மட்டும் ரூ.519 கோடியை பாஜக அரசு செலவிட்டுள்ளது.

இதில் பத்திரிகை விளம்பரங்கள், பொது இடங்களில் வைக்கப்பட்ட பேனர் உள்ளிட்டவைகளுக்கு செலவு செய்த தகவல் வெளியாகவில்லை.. டிஜிட்டல், போஸ்டர், ரயில்வே டிக்கெட் உள்ளிட்ட விளம்பரங்களுக்கு மோடி அரசு செலவிட்ட தொகை விவரமும் தெரிவிக்கப்படவில்லை. இதனிடையே தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு ரூ.3,641 கோடி செலவிட்ட ஆர்டிஐ மூலம் தகவல் கிடைத்துள்ளது.

நரேந்திர மோடி: ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவும் இந்துக்களின் நம்பிக்கைகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் உள்ள 80 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் – 19, ஏப்ரல் -26, மே -4, மே -13, மே -20, மே -25, ஜூன் -1 தேதி முதல் ஏழு கட்டங்களிள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் அம்ரோஹா நகரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, “காங்கிரஸும் சமாஜ்வாதி கட்சியும் குடும்ப அரசியல், ஊழல், (சிறுபான்மை மக்களை) தாஜா செய்யும் அரசியல் ஆகியவற்றை மேற்கொள்பவை. அதேநேரத்தில், இந்துக்களின் மத நம்பிக்கைகள் மீது தாக்குதல் தொடுக்கக் கூடியவர்கள் இவர்கள்.

இந்து மதத்துக்கு எதிராக தாக்குதல் தொடுக்கும் எந்த வாய்ப்பையும் அவர்கள் விட்டுவிடவில்லை. (ராகுல், அகிலேஷ் எனும்) இரு இளவரசர்கள் படத்தை மக்கள் ஏற்கெனவே புறக்கணித்துவிட்டார்கள். எனினும், மீண்டும் அவர்கள் இங்கே நடிக்க வந்திருக்கிறார்கள்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டபோது, சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பிரான பிரதிஷ்டைக்கான அழைப்பை நிராகரித்தன. இவர்கள் ராமர் கோயில் மற்றும் சனாதன நம்பிக்கையை தினமும் தவறாக பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் ராம நவமி அன்று குழந்தை ராமர் மீது பிரம்மாண்ட சூரிய திலகம் செய்யப்பட்டது. இன்று. நாடு முழுவதும் ராமர் பக்தி நிரம்பி வழியும்போது, சமாஜ்வாதி கட்சியினர், ராமர் பக்தர்களை பாசாங்குக்காரர்கள் என்று பகிரங்கமாக அழைக்கின்றனர்” என நரேந்திர மோடி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் நரேந்திர மோடி சூளுரை..! “4 ஜூன் 400 பார்..!”

மேற்கு வங்கத்தில் உள்ள 42 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் – 19, ஏப்ரல் -26, மே -4, மே -13, மே -20, மே -25, ஜூன் -1 தேதி முதல் ஏழு கட்டங்களிள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கூச்பெஹரில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி உரையாற்றினார்.

அப்போது, மேற்கு வங்கம் மாநிலம் பாலுர்காட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், அயோத்தியில் உள்ள பிரமாண்ட கோவிலில் ராம் லல்லா வீற்றிருக்கும் முதல் ராம நவமி இது. எனக்கு தெரியும், டிஎம்சி, எப்போதும் போல், அதைத் தடுக்க தன்னால் இயன்றவரை முயற்சி செய்தது. இங்கு ராம நவமி கொண்டாட்டங்கள் மற்றும் பல சதித்திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. எனவே, நீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை ராம நவமி ஊர்வலங்கள் வங்காளத்தில் உள்ள எனது சகோதர சகோதரிகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன் வங்காளத்தில் பொஹெலா போயிஷாக் உடன் புத்தாண்டு தொடங்கியது. ராம நவமி நாளை கொண்டாடப்படுகிறது. அப்படிப்பட்ட நேரத்தில், இங்கு அதிக அளவில் மக்கள் வந்திருப்பதும், ராய்கஞ்சின் உற்சாகமும், இந்தப் புத்தாண்டு புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது என்று கூறுகிறது. இன்று எல்லோரும் ‘4 ஜூன் 400 பார்’ என்று சொல்கிறார்கள் என நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஒன்றிய அரசின் திட்டங்களின் பலனை மக்கள் பெற திரிணாமூல் காங்கிரஸ் அனுமதிக்கவில்லை என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பேசிய நரேந்திர மோடி, மோடியின் உத்திரவாதங்கள் ஏழை மக்களைச் சென்றடையும்; அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும். பாஜக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என மோடி உறுதி அளித்தார்.

திரிணாமூல் காங்கிரஸ் ஊடுருவல்களை ஆதரிக்கிறது; அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் CAA எதிர்க்கிறது. சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களால் நாடு முழுவதும் பீதியடைந்துள்ளது. மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு பாஜக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என மோடி தெரிவித்தார்.

மு.க. ஸ்டாலின்: கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா..!?

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

GST: வரி அல்ல… வழிப்பறி!

“தன் பிணத்தின் மீதுதான் ஜி.ஸ்டியை அமல்படுத்த முடியும்” என்று முதலமைச்சராக எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமரானதும், “ஜிஎஸ்டி பொருளாதாரச் சுதந்திரம்” என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார்.

பேச நா இரண்டுடையாய் போற்றி!

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்.” என கடுமையாக விமர்சித்துள்ளளார்.

மு.க. ஸ்டாலின்: GST: வரி அல்ல… வழிப்பறி!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

GST: வரி அல்ல… வழிப்பறி!

“தன் பிணத்தின் மீதுதான் ஜி.ஸ்டியை அமல்படுத்த முடியும்” என்று முதலமைச்சராக எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமரானதும், “ஜிஎஸ்டி பொருளாதாரச் சுதந்திரம்” என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார்.

பேச நா இரண்டுடையாய் போற்றி!

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்.” என கடுமையாக விமர்சித்துள்ளளார்.

நரேந்திர மோடி, நிர்மலா சீதாராமன், அமித்ஷா மீது ரூ.6,986 கோடி தேர்தல் பத்திர நிதி ஊழல் குறித்து புகார்..!

அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ வழக்குகளை எதிர் கொள்ளும் 41 நிறுவனங்கள் பாஜவுக்கு ரூ. 2,471 கோடி நிதியினை அளித்துள்ளன. ரூ.1,698 கோடி தேர்தல் பத்திர நிதி அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமானவரித்துறையினரின் ரெய்டுகளுக்குப் பின் பாஜவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

பாஜவின் முறைகேடான தேர்தல் நிதிக்காக மத்திய அரசின் நிறுவனங்களை பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர். இவர்களின் செயலானது இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் கூட்டுச்சதி (120(பி)) மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்கள் மட்டுமின்றி நாட்டின் மீது நிகழ்த்தப்பட்ட பொருளாதார பயங்கரவாதமாகும். எனவே, இவர்கள் மீது வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எங்கும் இந்தி! எதிலும் இந்தி!” என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை..!!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதன்வரிசையில், தமிழக பாஜக பூத் தலைவர்களுடன் நமோ செயலி வாயிலாக ‘எனது பூத், வலிமையான பூத்’ என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

அப்போது, “தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என ஒவ்வொரு கருத்துக்கணிப்புகளும் தெரிவிக்கிறது. திமுக அரசின் மீது மக்கள் வெறுப்பின் உச்சத்துக்கு சென்றிருக்கிறார்கள் என தமிழக மக்களை நான் பார்க்கும் போது தெரிகிறது. மத்திய அரசின் நல்ல திட்டங்களை மக்களிடம் சென்று சேர விடாமல், திமுக அரசு தடுத்து நிறுத்துகின்றனர். தடுத்து நிறுத்த முடியாத திட்டங்களில், அவர்களது ஸ்டிக்கரை ஒட்டுகிறார்கள்.” என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்து இருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் விமர்சனத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

“நேற்று மாலைச் செய்தி: தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி!

நேற்று காலைச் செய்தி: அழகிய தமிழ்ச்சொல் ‘வானொலி’ இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும்.

மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது!. தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?. கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்?.

ஒரு பக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே, மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்?. கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர் இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன?

பிரதமர் மோடி அவர்களே… கருப்புப் பணம் மீட்பு, மீனவர்கள் பாதுகாப்பு, 2 கோடி வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு போல் காற்றில் கரைந்த உங்கள் கேரண்டிகளில் ஒன்றுதான், அகவை ஐந்தான விமானங்களில் தமிழில் அறிவிப்பு!

விமானங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை.

“எங்கும் இந்தி! எதிலும் இந்தி!” என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை!. தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்!” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.